ஆகஸ்ட் 05, 2009

காதலை பூ என்று நினைத்தேன்

பெண்ணே

நீ

தொட்டவுடன்

வெடித்துவிட

மிதிவெடியா

அல்லது

சீறிவந்து

உயிர் குடிக்கும்

ஆட்லறியா

கண்ணிமைக்கும்

நொடிப்பொழுதில்

கதையை

முடித்துவிடும்

கண்ணி வெடியா

சன்னமாய்

போகின்றாய்

மின்னலாய்

ஒளி வீசுகின்றாய்

பல்குழல்

பீரங்கி போல

படபடென்று

பேசுகின்றாய்

உன்னைப்

பக்கத்தில்

வந்து பார்க்க

மனம் ஏவுதடி

கால்கள்தான்

ஏனோ

தடை சொல்லுதடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

அழகிய ஐரோப்பா – 2

முதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி...