ஆகஸ்ட் 05, 2009

காதலின் மறு பக்கம்

பாழடைந்த காவலரணில்

கைவிடப்பட்ட

வெடிகுண்டாக

காத்துக் கிடக்கிறது

உன்னை

குதறிக் கடித்;து

உமிழ்ந்து துப்ப

ஒரு கூட்டம்

மன்மத பாணங்களை

ஏவமுடியாமல்

மனதுக்குள் பூட்டி

மகிழ்ந்தவர்கள்

இன்று

உனக்கு கிடைத்த

மண மாலையும்

மலர்ப் பஞ்சணையும்

கண்டு

புழுங்கித் தவிக்கிறார்கள்

சொல்லம்புகளால்

வேள்வித்தீ செய்தவர்கள்

இருந்தும்

சவமாக உலவுகிறார்

பூமியிலே

பாவம் அவர்கள்

பயித்தியக்காரர்கள்

என்று

அசதியாக

இருந்து விடாதே

கைக்கெட்டாப் பொருள்

என்று

தெரிந்து கொண்டதால்

வெடிகுண்டையும்

ஏவத் தயங்க மாட்டார்கள்

கவனமாயிரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-