இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி

படம்
நாள்:- 14 .10 .2000 உன் பேச்சு என் நெஞ்சில் தேன் வார்க்கும் உன் மூச்சு உள் மனதைத் தாலாட்டும் நாள்:- 15 .10 .2000 என் கண்ணும் உன் கண்ணும் சங்கமிக்கும் அந்தச் சங்கமத்தில் இருவருக்கும் சுகம் பிறக்கும் நாள்:- 16 .10 .2000 உன் மனமும் என் மனமும் கவி வடிக்கும் உன் மௌன மொழிக் கூட்டினுள்ளே காதல் பிறக்கும் நாள்:- 17 .10 .2000 உன் செவ்விதழில் பல்வரிசை பேச்சுரைக்கும் அந்தப் பேச்சினிலே என் நெஞ்சில் தேன் சுரக்கும் நாள்:- 18 .10 .2000 நீளும் நாட்களிலே நீதான் என் உயிர் மூச்சு வீசும் காற்றினிலும் மெதுவாய் உன் சலனம் நாள்:- 19 .10 .2000 என் இதயத்துள் புகுந்து கொடி நாட்டினாய் உன் வெட்கத்தால் என்மேல் வலை வீசினாய்

தேடுகிறேன்...

படம்
கொடிய இருளில் கைவிடப் பட்ட ஆத்மாவாய் காற்றில் என் புன்னகையை விட்டெறிந்து விட்டு கை நனைப்பதர்க்காய் நீர் தேடுகிறேன் சுடுகாடாகிப்போன என் கிராமத்தில்

அனைவரும் வருக

படம்
நாளை வெள்ளிக்கிழமை ( 15 /10 /2010 ) மித்ர நிறுவனம் நடாத்தும் " நூல் அரங் கேறும் மாலை " நிகழ்வு :- சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தின் அண்ணா சிற்றரங்கில் நடைபெற உள்ளது. நூலாசிரியர் - வி. டில்லிபாபு ( DRDO விஞ்ஞானி ) நூல் - " ஒரு செல் உயிரிகள்" அனைவரும் வாரீர் நன்றி -தியா- ( மித்ர ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன் ) கோடம்பாக்கம்

இது இப்போது பிசாசுகளின் காலம்

படம்
பழைய கவிதைப் புத்தகங்களை ப் பரப்பியபடி படுத்துறங்கும் பிசாசுகள் ... இருளில் இருந்து மீள மறுத்து முட்டி மோதுகிறது இடர் சமர் நடந்த தேசத்தின் சிதைவுகளில் இருந்து மீளமுடியாமல் திண்டாடுகிறது கந்தக வாடை நியூட்டனின் மூன்றாம் விதியை நிலத்துக்கும் வானுக்கும் கற்பிதம் செய்யும் ராணுவ முலாம் பூசப்பட்ட போதி மரங்கள் திணிக்கப் படுவதற்காய் இலவசமாக்கப்பட்ட நிர்வாண பௌத்தம் கக்கிய கட்டிடங்கள் எம் மண்ணில்

இருளும் நானும்

படம்
இயலாமைகளுக்குள் வாழ்ந்து பழக்கப் பட்டவன் நான் மீண்டும் மீண்டும் குழி தோண்டிப் புதைத்துவிட முயல்கிறேன் என் இயலாமைகளை என்னையும் மீறி அது வீறுகொண்டு என்னை அடக்கியாள நினைக்கிறது ... பெரும் இறுமாப்புடன் கடிவாளம் பூட்டிய குதிரையாக என்னைக் கட்டியாள நினைக்கிறது உருவமில்லாத அந்த மர்மம் ... ஆனாலும் இயலாமைகளுக்குள் வாழ்ந்து பழக்கப் பட்டவன் நான்

காதலியின் விசித்திர ரசனை

படம்
என் அன்புக்கினிய நெஞ்சே... என் பொய்க் கோபம் கண்டு என்னவர் அடைகின்ற துன்பத்தை சிறிது நான் ரசிக்கவேனும் .... என் கைகளுக்கு உத்தரவிடு என்னவரை ஒரு கணமேனும் கட்டித் தழுவாமல் இருக்க.... புல்லாது இரா அப் புலத்தை அவர் உறும் அல்லல் நோய் காண்கம் சிறிது திருக்குறள் - 1301

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

படம்
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே

அன்பே என் உயிரே...

படம்
அன்பே - என் உயிர்க் காதலனே உன்னை மட்டும் நிறைத்து என் நெஞ்சு மகிழ்கிறது..... என் உயிரே உன்னை - என் நெஞ்சில் நான் சுமப்பதால் சூடாக உண்ண - குடிக்க மறுக்கிறது என் இதயம் நீயோ வெப்பம் தாங்க மாட்டாய் என்பதை என்னைவிட - என் இதயம் அறியுமோ !!! "நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து" - திருக்குறள் 1128 -

பிள்ளையாரின் கவலை....

படம்
பிள்ளையாரின் கவலை பிறந்த அன்றே தூக்கிக் கடலில் போடுகிறீர்களே பாவிகளே - நான் என்ன பாவம் செய்தேன்... பக்தனின் கவலை விக்கினம் தீர்க்கும் விநாயகனே - உன்னை கடலில் கரைக்கும் வரை நான் படும் விக்கினங்களைத் தீர்த்தருள்வாயாக......

தடுமாறும் இதயம்

படம்
அழகு தேவதையே காதில் தொங்கும் உன் காதணிகளின் சுமையை தூக்கி நடப்பது அழகோ அழகு அதுசரி பெண்ணே நீ தெய்வ மங்கையா? அல்லது அழகிய மயிலா? அதுவுமில்லையேனில் மானிடப் பெண்ணா? உன்னை யாரென்று சொல்ல முடியாதபடி தடுமாறுகிறது என் நெஞ்சம். "அணங்கு கொல்ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் மாளும் என் நெஞ்சு" -திருக்குறள்-

இந்த இடுகையை முடிந்தவரை நீங்களும் இடுங்கள்

இந்த இடுகையில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன். நன்றி அன்புடன்... -தியா-

பசுமை நிறைந்த நினைவுகளே...

படம்
ஒளிக் கதிர்கள் தெளிவற்ற மாலை நேரத்துச் சூரியனோடு கைகோர்த்தபடி என் புழுதித் தெருவில் இறங்கி நடக்கிறேன் வெற்றுக் கால்களோடு …. நீண்ட நெருமுனை … வளைவில் முந்திச் சென்றான் என் பால்ய கால நண்பன்... அவன் இப்போது உயிருடன் இல்லை... சுற்றிவளைக்கப்பட்ட சிறு பகுதியில் இருந்து தப்பிப் பிளைத்து தடுமாறி வரும்போது ஆமி அடித்த செல்லில் உயிர்விட்டானாம் என்று சொல்லக் கேள்வி.... அவனும் நானும் கூடி வயல் விதைப்போம் பள்ளி செல்வோம் பந்தடிப்போம் மாடு மேய்ப்போம் குளத்து வானில் குளித்து மகிழ்வோம்..... அது அந்தக் காலம் இப்போது நான் முழுவதுமாக மாறிவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள் நான் யாருடனும் பேசுவதில்லையாம் சிரிப்பதில்லையாம்... பைத்தியம் என்றும் சிலர் பழியுரைக்கிறார்கள்.... பாவம் அவர்கள்..... அவர்களுக்குத் தெரியாது நான் இப்போதும் என் உறவுகளுடன் நண்பர்களுடன் கனவில் அடிக்கடி சிரித்துப் பேசுவது......

உன் கையின் மகத்துவம்

பல முறை எழுத்துக் கிழித்துப் போட்ட என் கவிதைத் தாள்கள் அனைத்தையும் நீ குப்பை என்று அள்ளிய போதுதான் அவை கவிதை என்ற உண்மை புரிந்தது.

மரித்துப்போன ஆன்மாக்களின் சாட்சியாக...

படம்
ஊ ன்றுகோல் பிடிச்சு நடக்கிறாள் அவள் ஒரு குழந்தை. தந்தையைப் பறிகொடுத்து வருஷம் ஒன்று ஓடிப் போச்சு. குடியிருந்த வீட்டில் எதுவும் மிச்சமில்லை. எதைஎதையோ தின்று நாய் மட்டும் எலும்பும் தோலுமாக தெருவில் திரிகிறது கூடிக் குலாவிய எங்களின் மண்ணில் ரத்த ஆறு ஓடிய சுவடுகளாக இன்றும் தெருக்களில் நம் உறவுகள். முகமிழந்த மனிதர்களாக புலத்திலே நாங்கள் இங்கே. அன்பாய் விசமூற்றும் சிறு பரீட்சையில் சில விசமிகள் எழுத்துலக கோலேந்தியோர் நாமம் சூட்டி கூடப் போகிறார்களாம். ரத்தவாடை நீங்காத சிறு தீவைப் பன்னீர் தெளித்து புனிதமாக்கப் போகிறார்களாம் ... !!! ???

இயலாமைகள்

படம்
நடை பாதையை மறித்து மூக்கை நீட்டும் கடைகளின் முன் கூடாரங்கள்.... வீதிக் கடவைகளில் நடக்கும் போது குறுக்கறுக்கும் விரைவுந்துகள்.... பேருந்தில் மூச்சடக்கி கால்வைக்க இடம் தேடும் நான்... மல்லுக்கட்டி நடத்துனர் மீது சண்டை போடும் ஒரு கூட்டம்.... மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் இருக்கைகளில் காதில் மாட்டிக் கைப்பேசியில் இசை கேட்கும் இளசுகள்.... தள்ளாடும் வயதிலே தன் குடும்ப வாழ்வுக்காய் உழைக்க புறப்பட்ட பெரிசுகள் நிலையாக ஆனால் பேருந்து மட்டும் நகரும்.... தின வாழ்க்கை வாழ்வதற்கு காலையிலும் மாலையிலும் கொளத்தூரும் - கோடம்பாக்கமும் என் வீட்டுத் திண்ணைகளாகும்.... இப்படியே நாள்தோறும் நம் பிளைப்பு கணிணியிலும் வழிச் செல்லும் பாதையிலும் கழிகிறது........

இன்றைய ஈழம்

படம்
நாளை என் வீட்டில் திருடர்கள் வரலாம்... என் வீட்டுத் தெருவில் காவலர்கள் போகிறார்கள்...

கதறியழுகிறது கவலையில் கனமழை.....

கொட்டித் தீர்த்த கனமழையில் நனைந்தபடி நடக்கிறேன்.... வண்டியில் பொதி ஏற்றி இழுத்தபடி விரைந்து நடக்கிறான் ஓர் ஏழைப் பொதி வண்டி இழுப்பாள ன் .... நெடுவீதியில் பிரித்துப் போட்ட கால்வாய்கள் அப்படியே வாய்பிளந்து கிடக்கின்றன..... நீண்ட பெருந்தெருவின் நிரம்பிய வெள்ளத்தில் முட்டிமோதி மல்லுக்கட்டிய வாகனங்கள் வழியை மறித்தபடி...... கையில் பிடித்த குடையை "லைலா" பறித்துச் செல்கிறது ...... தெருவோரம் மழையில் தோணி விடும் சிறுவர்கள்...... அக்கினி வெயிலை மறைத்த மழை மேகத்துக்கு நன்றி தெரிவித்தபடி பேருந்துக்கு நடக்கிறேன்..... மே மாதம் நம் வாழ்வில் மறக்கப்படக் கூடியதல்லவே..... வானம் கண்ணீர் மழை பொழிந்து மீண்டும் அழுதுதீர்த்தது......... முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட எம் உறவுகளின் ஆண்டுத் திவச விழாவில் கறுப்புக் கொடி (குடை) பிடித்து இன மத பேதமின்றி அனுஸ்டிக்க வைத்த "லைலா"வே உனக்கு ஒரு கொடி வந்தனங்கள்.......

சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள்....

சித்திரைத் தமிழ் மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... சில்லறை வாங்கி உண்டியல் சேர்த்து உறவுகள் கூடி நிறைவுடன் மகிழ்ந்து புத்துடை அணிய நித்திரை விட்டு -நாம் விரைவாக எழுவோம்.... அன்றேல்... நித்திரையின்றி விடியும்வரை விழித்திருப்போம்... சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள் வாருங்கள் நாம் சோகங்கள் மறந்து சுமைகளை ஒருகணம் இறக்கி மகிழ்ந்திருப்போம் நிறைவாக...

வணக்கம் விடைபெறுகிறேன்....

சிறு விபத்தில் சென்ற வாரம், எனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தட்டச்சு செய்ய முடியவில்லை. ஆகவே சிறிது காலம் வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.....................

கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு

நண்பர் பிரபாகர் ( எண்ணத்தை எழுதுகிறேன்... ) கிரிக்கெட் தொடர் பதிவு ஒன்று எழுதியிருந்தார் அதைப் படித்த நேரம் முதல் நானும் ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன்..... அதன் விளைவே இது. நம்மளுக்கெல்லாம் கிரிக்கெட் ஒத்துவராதுங்க நம்ம ரேஸ்ரே வேற. நாங்க கால்பந்து பிரியருங்க..... நமக்கு ரொனால்டோ, கிறிஸ்ரியான ரொனால்டோ,ரோரல்டினோ என்று ஒரு நீண்ட பட்டியல் தான் பிடிக்குமுங்க.... ஆனாலும்....... கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு... பிடிச்சிருந்தாலோ பிடிக்காவிட்டாலோ உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...... விரும்பினால் நீங்களும் ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு போடுங்கோ....... 1.பிடித்த கிரிக்கெட் வீரர் – ஸ்டிவ்வாவ் (அவுஸ்), சச்சின் டெண்டுல்கர்(இந்), ஜாக் காலிஸ் (தெ.ஆ) 2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ரிக்கி பாண்டிங் 3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – வாசிம் அக்ரம்(பாக்), கிளன் மெக்ராத்(அவுஸ்) 4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் - ஸ்ரீசாந்த் (இந்) 5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் - முத்தையா முரளிதரன்(இல), ஷேன் வார்ன்(அவுஸ்), டானியல் விக்ரோரி(நியுஸ்) 6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் - கர்பஜன் சிங்(இந்)

பிச்சைக்காரனின் ஓட்டு

நம்மூர் புகையிரத நிலையம் நான்கு அடுக்குப் பாதைகள் நாலா பக்கம் மக்கள் வெள்ளம் நாற்பது பிச்சைக்காரர் நாறுகிறது நம் நகரம்... பொருளாதார நெருக்கடி நேற்றைய நாள் - வேலை தேடினேன் இன்றைய நாள் - வேலை தேடுகிறேன் நாளைய நாள் - வேலை தேடுவேன்... பிச்சைக்காரனின் (தேர்தல்)ஓட்டு நேற்றுவரை பிச்சை எடுத்தேன் இன்று நான் பிச்சை போடுகிறேன்...

குழந்தைகளும் வாழ்கிறார்கள்........

நான்கு சுவருக்குள் நடந்த நாடகம் நம் வீட்டு வரவேற்பறை வரை...

தேவதைகள் உலவுகிற தேசம்

படம்
மீண்டும் கோடை எட்டிப் பார்க்கிர்றது எங்கள் ஊரின் நினைவுகளைச் சுமந்தபடி நிழற்படமாய் நான்..... கோடை எங்கள் ஊரின் வசந்த காலம் ..... நெல்மணிகள் புதிதெடுத்துப் பொங்கலிட்ட பின்னாளில் சூடடிப்போம் - பின்னர் 'பொலி' பெருக்கி வீட்டினிலே அடுக்கி வைப்போம் மூட்டைகளில்....... காக்கைகள் கூடு கட்ட இடம் தேடும்.... குயில்கள் தேடிவந்து முட்டை போடும்..... பட்ட மரம் தேடிவந்து மரங்கொத்தி துளைபோடும்.... கிளிகள் குஞ்சு பொரித்து அங்கு குடும்பம் நடத்தும்...... மாரியம்மன் கோயிலிலே திருவிழா நடக்கும்.... மான்கள் நீர் தேடி - நம் குளக்கரைக்குப் படையெடுக்கும்.... பாம்புகள் கூடிப் பிணைந்து மீண்டும் மீண்டும் சல்லாபிக்கும்..... காளைகள் கொம்புக்கு மண்ணெடுக்கும்..... வற்றிய குளத்தில் சிலர் வரால் பிடிப்பர்...... மா பழுக்கும்..... புளி காய்க்கும்...... தேன் சுவையுடன் பலாச் சுளை தித்திக்கும்..... இளநீர் குலையுடன் இறக்கிவந்து தாகம் தீர்ப்போம் ....... வாழைத்தோட்டம் நடுவினிலே சோளப்பொத்தி முறித்துப் போட்டு தீயினிலே வாட்டி ருசித்திடலாம்...... ஆற்றினிலே நெய்வாளை

மானம்

நகரமயமாதல் விண்ணுயர்ந்த கட்டிடங்கள் வீதியோர கடைகளின் பின்னால் கூனிக்குறுகித் தன்னை மறைக்கிறது(மறைகிறது)சேரி மானம் கரையில் வந்து முட்டி மோதி தோற்றுப் போன அலை வெட்கத்தால் கடலில் மூழ்கி செத்துப்போனது… முரண் கூட்டிய குப்பை ஒருபுறம் கூட்டாத குப்பை மறுபுறம் எதை முதலில் விலக்குவது? விளக்குமாறு கேட்கிறது விளக்குமாறு…

சென்னையில் சில நாள்.....

படம்
கூ வம் ஆறும் அடையாறும் சென்னையின் சொத்து செத்த பிணங்கூடப் பல நாளாகி அப்படி நாறி நான் கண்டதில்லை … பிச்சைக்காரர் தெருநீளம் நிறைந்திருப்பர் …. சைக்கோவும் பைத்தியமும் வழியோரம் படுத்துறங்கி ஓய்வெடுப்பர் … ஆனாலும் சிங்காரச் சென்னை அழகானதுதான் ....... மேம்பாலங்கள் மேலே நம் பயணம் தொடர்கிறது அதன் கீழே பல குடும்பம் சீவியம் நடக்கிறது .... குப்பைகளால் நிறைந்த தெருக்கள் … நடைபாதையெல்லாம் மூக்கை நீட்டும் கடைகள் … விதிகளை மீறிய வாகனங்கள் இவை எல்லாம் சென்னையின் அடையாளங்கள் … வீதிகள் தோறும் சேரிகளின் அணிவகுப்பு தெருவோரம் மலிந்திருக்கும் பூக்கடைகள் … வாய்திறந்து விரிந்திருக்கும் கழிவுநீர் கால்வாய்கள் ஒண்டுக்கும் ரண்டுக்கும் வீதியெல்லாம் இலவசமாய் விளம்பரங்கள் … பேருந்தில் நிறைந்த கூட்டம் பழஞ்சோற்றில் ஈயாக … கட்சித் தலைவர்களை தூக்கிச் சுமக்கும் மதில்கள் … வீதிகள் எல்லாம் பிரச்சார முழக்கம் கட்டவுட்டும் விளம்பரமும் கண்கொள்ளாக் காட்சி … ஆனாலும் சிங்காரச் சென்னை அழகானதுதான்

நானும் நிகேயும் நம் காதலும்

இன்றுடன் எங்கள் காதலுக்கு பத்து வருஷம் கல்யாணத்துக்கு நான்கு வருஷம் ஆம் 2000 ம் ஆண்டில் நாம் இருவரும் பல்கலைக்கழகத்தில் சந்தித்து நண்பர்களானோம். பின்னர் நான் என் ஊருக்கும் நிகே தன் ஊருக்கும் பல்கலைக்கழகம் முடிந்து 2004 ல் சென்று விட்டோம் 2006 ல் இரண்டு வீட்டிலும் கல்யாண பேச்சு எடுத்தபோது இதே பெப்ரவரி 14 ல் தான் எங்கள் இருவரின் வீட்டிலும், எங்கள் நட்புடன் 6 ஆண்டுகளாக கட்டி வளர்க்கப் பட்ட காதலைப் பற்றி சொன்னோம். இரு வீட்டு சம்மதத்துடன் 2006 ஜூன் ல் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. என் மனைவி நிகே வேற யாருமில்லைங்க நம்ம மழைச்சாரல் http://mazhaichsaaral.blogspot.com நிகேதானுங்க. இப்போ எங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு எண்களின் காதல் - கல்யாணப் பரிசாக இருக்கிறாள்.

காதலர் தினம்

படம்

சிங்காரச் சென்னை அழகாகத் தெரிந்திட்டால்

அடையாறும் கூவமும் வருநாளில் அழகாகத் தெரிந்திட்டால் மடை பாயும் வெள்ளமென மக்கள் கூட்டம் நிறைந்திடுமே பூந்தோட்டம் நாட்டிடுவர் - பின்பு புதுப் பொலிவு பண்ணிடுவர் காண்போரை வியக்க வைக்க கண்காட்சி நடத்தி நிற்பர் மூக்கைப் பிடித்து முன்னர் வீதியிலே சென்றவர்கள் நாக்கில் சுவையூற வேர்க்கடலை கொறித்து நிற்பர் நாளை வருநாளில் நல்ல புதுச் சேதி கொண்டு வரும் வாளை விராலுடனே நதி நல்லழகு பெற்று விடும் பார்க்கும் இடமெங்கும் கூவம் புதுப் பொலிவு பெற்றுவிடில் நோக்கும் உலகம் இந்தச் சிங்காரச் சென்னை தனை

துளித்துளியாய்....

புல்லாங்குழல் காற்று நுழைந்து சில்மிசம் செய்யும் வரை ஊமையாகத்தானே கிடந்தது புல்லாங்குழல்… நட்பு எதிரெதிரே சந்தித்தும் நீ வாய்பேசாது சென்றபோது நானும் ஊமையாகி விட்டேன். தும்மல் கண் மூடித் தியானிக்க கடவுள் தந்த கண நேர வரம்

விவசாயி தாள் வணக்கம்.

படம்
எனது வலையுலகச் சொந்தங்களே ! உங்கள் அனைவருக்கும் எனது உழவர் திருநாளாம் தைப் பொங்கல் மற்றும்.... தை முதல் நாள் வாழ்த்துகள். தை பிறந்து விட்டது அனைவர் வாழ்விலும் புது வழிகள் பிறந்து வலிகள் தீர்ந்து இனிவரும் நாட்களில் வளமாய் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். சேற்றில் புரண்டெழும்பி வயல் நிலத்தில் தாளமிட்டு உழுது நல்ல வரப்பிட்டு நெல்லெறிந்து உரம் விதைத்து நிலம் காத்து சொல் பொறுக்காச் சோர்விலராய் கண்ணுறக்கம் ஏதுமின்றி எல்லையிலே காவலிட்டு நெற்கதிர்கள் குனிந்து மண்ணில் கோலமிடும் காலம் வர பக்குவமாய் அறுத்து நல்ல பதத்துடனே சூடடித்து உலகமக்கள் உய்திடவே உழைத்து நல்ல வேர்வை சிந்தி உன்னதமாய் வாழும் எங்கள் நன்செய் மாந்தர்தனை நாளும் நினைத்திடுதல் நலமன்றோ.............. தானுண்ணா வயிறு காய்ந்து தன்நாடு செழித்திடவே பாடுபடும் - அவ் ஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி வந்தனங்கள்......... நாடு வளம் பெற்று நல்மனிதர் நகரேகி கூடு குலத்துடனே வளம் கொழிக்க வாழ்ந்தாலும் நாடு செழித்திடவே "பாடு"கள் பலசுமந்து காடு வெட்டி நல்ல களனி செய்து ஏர்வழியே தான் நடந்து வேர்வையினை உரமாக்கி நெல்மணிகள் விளைச்சலிடும்