இந்தக் கவிதை ஒரு கியூபா நாட்டுக் கவிதையின் மொழிபெயர்ப்பு. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டது. அண்மையில் படிக்க நேர்ந்தது. படித்த நேரத்திலிருந்து மனதை நெருடியபடியே இருந்தது .................................
அதை நீங்களும் படிக்க பதிவிலிடுகிறேன்.
"வேட்டை விமானம் விண்ணில் இரைந்தன
விசப்புகைக் குண்டுகள்
வீழ்ந்து வெடித்தன
எகிறிப் பறந்தன
பீரங்கிக் குண்டுகள்
சடசடத்தன மெசின் துப்பாக்கிகள்
ஓலம் ..............
அழுகை.............
கூக்குரல் ஒலிகள் .........
வயற்புறங்களிலும் வாசற்படிகளிலும்
ஓடிய இரத்தம் மறைந்து கிடந்தன குடிசைகள்.
கரும்புகை
மிக மெதுவாக விண்ணில் கலந்தது.
அடர்ந்த காட்டில் அமைதி துயின்றது.
இடைக்கிடை எங்கோ இருண்ட பகுதியில்
காட்டுப் பூச்சிகளின் கத்தல் கேட்டது.
மூங்கில் புதர்கள் மூடிய ஆற்றின்
கரையில் மெதுவாய் காற்று வீசியது.
தண்ணீர்ப் பையில் தண்ணீர்
நிரப்பிய வீரன்
நிமிர்ந்து மேலே நோக்கினான்........
மூங்கிலில் வண்ணப் பூச்சிகள் மொய்த்தன.
பத்துங்கியிருந்த படையினனை நோக்கி
முதுகுச் சுமையுடன்
அவன் முன் நடந்தான்
மரங்களின் கீழே
மடியில் வளர்த்திய
துவக்குடன்
ரொட்டியைச் சுவைத்தவாறு
வீரர்கள் இருந்தனர்....
மிக மெதுவாக
வானொலிக் கருவி
வழங்கிய மெல்லிசை
நின்றது.......
சிறிது நீண்ட மௌனம் ......................................................................
ஹனோய் வானொலி
கம்மிய குரலில்
ஒலிபரப்பியது...
"ஹோசிமின் இறந்தார்..................."
.......
........
....................
.....................................
ரொட்டித் துண்டுகள் மண்ணில் வீழ்ந்தன...
...........
........
...
..
நிசப்தமான மரங்களின் நிழலில்
மௌன அஞ்சலி நீண்டு வளர்ந்தது....
உன் நரம்புகளில் ஓடிய உணர்வின்
சிறுதுளி எனினும் சேர்க்க எம் குருதியில்...
"இன்னும் இன்னும் இழக்கிலோம் எங்கள்
மண்ணிலே சிறிய மணலையும் நாங்கள்...."
கொமாண்டர் அடங்கிய குரலில் கூறினான்
காட்டுப் பறவைகள் கத்திப் பறந்தன
மீண்டும் வேட்டை விமானங்கள் இரைந்தன
அடர்ந்த காட்டின் மரங்களின் அடியில்
விசைப் புகைக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன......
பதுங்கி இருந்த படையினர் கரங்களில்
மெசின் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கின
ஓங்கி வளர்ந்த உயரமான
மூங்கில் புதர்கள் மூடிய இருளில்
மீண்டும் விமானம் வீழ்ந்து நொறுங்கின......."