ஏப்ரல் 13, 2010

சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள்....

சித்திரைத் தமிழ் மகள்
சிலிர்ப்புடன் வருகின்றாள்
நித்திரை விட்டு
விரைவினில்
எழுந்திடுவோம்...

மருத்துநீர் தலை தடவி
வெந்நீரில் குளித்திடுவோம்
நெற்றியில் நீறணிந்து
நெறிப்படி வணங்கிடுவோம்
பெரியோர் தாள் பணிந்து
கையுறை பெற்றிடுவோம்...

சில்லறை வாங்கி
உண்டியல் சேர்த்து
உறவுகள் கூடி
நிறைவுடன் மகிழ்ந்து
புத்துடை அணிய
நித்திரை விட்டு -நாம்
விரைவாக எழுவோம்....

அன்றேல்...

நித்திரையின்றி
விடியும்வரை விழித்திருப்போம்...

சித்திரைத் தமிழ்மகள்
சிலிர்ப்புடன் வருகிறாள்
வாருங்கள் நாம்
சோகங்கள் மறந்து
சுமைகளை ஒருகணம்
இறக்கி
மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...