இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகிய ஐரோப்பா - 7

படம்
அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது.  சிறு நடைப்பயணத்தின் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.   இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்கு பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம்.  கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை பாதை இருந்தது.   மற்றவர்களை பின்தொடர்ந்து நாமும் நடந்தோம். கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் தூரம் போனதும் பிரமிக்க வைக்கும் அழகுடனும் மிடுக்குடனும் எம்முன்னே தோன்றியது பக்கிங்காம் அரண்மனை. உலகம் முழுவதையும் தன் கைப் பிடிக்குள் வைத்திருந்த பெரும் சாம்ராச்சியம் என் கண் முன்னே விரிந்து கிடந்தது.  உலகின் வயதான ராணி வாழும் அரண்மனை முன் நிற்கிறோம் என்ற பெருமை எனக்குள்… என்னதான் மாளிகை முன் நின்றாலும் அந்த மாளிகையின் மூடிய கம்பி கதவு வழியாகத்தான் அந்த மாளிகையின் வெளித்தோற்றத்தைக் காண முடியும். உள்ளே செல்ல முடியாது. வெளியே நின்ற மக்கள் தங்கள் போன்களிலும் கேமரா விலும்

அழகிய ஐரோப்பா - 6

படம்
பயணங்கள் முடிவதில்லை லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். … நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.  எங்கள் அனைவருக்குமான ரிக்கெட் எடுத்த பின்னர் சொல்லி வைத்த மாதிரி சரியான நேரத்துக்கு கூர்  மூஞ்சி ரெயில் வந்து எங்கள் முன் நின்றது.  ரயிலின் முன்புறம் கூரான மூஞ்சியுடன் உள்ளே விமானம் போன்ற அமைப்பில் இருந்தது. ஆட்கள் ஏறினதும் ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக்கொண்டது.  அடுத்த ஸ்டேஷனின் பெயர் என்ன என்பது எல்.ஈ.டி. யில் எல்லாக் கதவுக்குப் பக்கத்திலும் வருகிறது. ஒலிப்பதிவாகவும் வருகிறது…  “எந்த ஸ்டாப்பில் இறங்குவது” என்று அவளிடம் கேட்டேன் “சரியாக ஐந்தாவது ஸ்டாப்பில்…” என்று இழுத்தவள்   “கடைசி ஸ்டாப்”

அழகிய ஐரோப்பா - 5

படம்
படகுச் சவாரி இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது.  காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன். மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் ரெண்டு மூன்று நிமிடம் ரசித்துவிட்டு அதன் பின் ருசித்துச் சாப்பிட ஆரம்பித்தேன். மதியம் தாண்டிய போது மழை ஓய்ந்து வெண்முகில் நடுவே வெயில் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.  மாலைப் பொழுதில் எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன போது  “ப்ளூ வாட்டர்” என்ற இடம் அருகில் இருப்பதாகவும் இருபது நிமிச பஸ் பயண தூரம் என்றும் சித்தப்பா சொன்ன போது அடுத்த நொடியே கிளம்பிவிட்டோம். பஸ்  நல்ல விசாலமானதாகவும் சுத்தமானதாகவும் இருந்தது. சரியாக இருப்பது நிமிட பயணத்தில் ப்ளூ வாட்டரை  வந்தடைந்து விட்டோம்.  மாலை நேரத்துத் தங்க நிற சூரிய ஒளியில்