
நாள்:- 14 .10 .2000
உன் பேச்சு
என் நெஞ்சில்
தேன் வார்க்கும்
உன் மூச்சு
உள் மனதைத்
தாலாட்டும்
நாள்:- 15 .10 .2000
என் கண்ணும்
உன் கண்ணும்
சங்கமிக்கும்
அந்தச் சங்கமத்தில்
இருவருக்கும்
சுகம் பிறக்கும்
நாள்:- 16 .10 .2000
உன் மனமும்
என் மனமும்
கவி வடிக்கும்
உன் மௌன மொழிக்
கூட்டினுள்ளே
காதல் பிறக்கும்
நாள்:- 17 .10 .2000
உன் செவ்விதழில்
பல்வரிசை
பேச்சுரைக்கும்
அந்தப் பேச்சினிலே
என் நெஞ்சில்
தேன் சுரக்கும்
நாள்:- 18 .10 .2000
நீளும் நாட்களிலே
நீதான்
என் உயிர் மூச்சு
வீசும் காற்றினிலும்
மெதுவாய்
உன் சலனம்
நாள்:- 19 .10 .2000
என் இதயத்துள்
புகுந்து
கொடி நாட்டினாய்
உன் வெட்கத்தால்
என்மேல்
வலை வீசினாய்