ஜனவரி 23, 2022

மென்மையான கனவுகள்

ஓடையில் இறங்கிய அன்னம் போல,
மென்மையான கனவுகள்
அடிக்கடி தோன்றி மறைகின்றன.
- தியா -மாயக் கப்பல்

நிலா, வானத்தின் தங்கத் தீவு
வானில் சுழலும்,
ஒரு மாயக் கப்பல்.
-தியா-நெடுஞ்சாலை நிலவு

தற்கொலை முயற்சியில்
நெடுஞ்சாலை நிலவு
தாங்கிப் பிடித்தன மலைகள்!
-தியா-

ஜனவரி 17, 2022

கனவுகள் கலைந்தபோது

என் கவிதையில் இருந்து ஒரு பகுதி...


என் நித்திய கனவில் அடிக்கடி,

கடவுளின் கழுத்தைச் சுற்றியபடி பாம்பு இருந்தது.

கடவுள் என் பரிசுத்தமான இரகசியங்களை, 

அறிந்து வைத்திருக்கலாம் என்ற பரிபூரண நம்பிக்கையில்,

அவரின் காலடியில் மண்டியிட்டு விழுவேன். 

பின் எழுவேன், பின் விழுவேன் - இது 

அடிக்கடி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.


-தியா-

பொங்கல் சிறப்புக் கவியரங்கம் 2022

புலக்கண்ணில், எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் 

நன்றி 
தியா