இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிய பொங்கல் வாழ்த்துகள்

படம்

பேச்சே எங்கள் மூச்சு

படம்
உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற அக்கறை தமிழர்களாகிய எமக்கு வர வேண்டும். தமிழைப் படிப்பவர்களை விட கேட்பவர்கள் தான் அதிகம். இன்றைய வானொலி,தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பிழை நிறைந்த உச்சரிப்புக்களைக் காண்கிறோம். பலர் தெரியாமலும் சிலர் நாகரிகம் என்ற போர்வையிலும் தமிழைக் கொலை செய்து கொண்டிருப்பதை நாளும் காண்கிறோம். “தமிழ்” என்பதைக் கூட சரியாக உச்சரிக்கத் தவறும் சிலர் “தமில்” என்று உச்சரிக்கின்றனர். “ழகரம்” தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து. தமிழின் அழகே அதன் உச்சரிப்பில்தான் உள்ளது.  பலர் நினைப்பது போல தமிழ் உச்சரிப்பு ஒன்றும் சிக்கலா