நண்பர் பிரபாகர் ( எண்ணத்தை எழுதுகிறேன்... ) கிரிக்கெட் தொடர் பதிவு ஒன்று எழுதியிருந்தார் அதைப் படித்த நேரம் முதல் நானும் ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன்..... அதன் விளைவே இது. நம்மளுக்கெல்லாம் கிரிக்கெட் ஒத்துவராதுங்க நம்ம ரேஸ்ரே வேற. நாங்க கால்பந்து பிரியருங்க..... நமக்கு ரொனால்டோ, கிறிஸ்ரியான ரொனால்டோ,ரோரல்டினோ என்று ஒரு நீண்ட பட்டியல் தான் பிடிக்குமுங்க.... ஆனாலும்....... கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு... பிடிச்சிருந்தாலோ பிடிக்காவிட்டாலோ உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...... விரும்பினால் நீங்களும் ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு போடுங்கோ....... 1.பிடித்த கிரிக்கெட் வீரர் – ஸ்டிவ்வாவ் (அவுஸ்), சச்சின் டெண்டுல்கர்(இந்), ஜாக் காலிஸ் (தெ.ஆ) 2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ரிக்கி பாண்டிங் 3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – வாசிம் அக்ரம்(பாக்), கிளன் மெக்ராத்(அவுஸ்) 4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் - ஸ்ரீசாந்த் (இந்) 5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் - முத்தையா முரளிதரன்(இல), ஷேன் வார்ன்(அவுஸ்), டானியல் விக்ரோரி(நியுஸ்) 6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் - கர்பஜன் சிங்(இந்)...