காதல் வானம் - பாகம் - 03
பட்டென்று வெடித்துப் பூக்கும் பருத்தியாய் இமை திறந்த சுரபி கைகளைமேலே தூக்கி சோம்பல் நீக்கி நெட்டி முறித்தாள். “ஒரு பொம்பிளைப் பிள்ளை நித்திரையால எழும்புற நேரத்தை பாரன்…அந்தப் புள்ளையும்இருக்குது அதைப் பாத்தெண்டாலும் வேளைக்கு எழும்பலாம் தானே…பாவம் அந்தப்பிள்ளைவிடியக்காலமையும் குருவிக் காவலுக்கு போட்டுது.” செண்பகம் வாய்கு வந்தபடி பேசிக்கொண்டு தன் கருமங்களில் கண்ணுங்கருத்துமாயிருந்தாள். “அம்மா இத்தினை நாளும் நான் விடிய நாலு மணிக்கெல்லாம் எழும்புறனான்தானேஇப்பதானே இப்பிடி கனநேரம் நித்திரை கொள்ள கிடைச்சிருக்குது…கேட்டால் வேளைக்குஎழும்பி செய்து தருவன்தானே அதுக்கேனணை இப்பிடி கத்துறாய்…” “அதில்லை மோனே கொப்பா வயலுக்கு வரப்பு வெட்ட போனவர்…சுமதியும் குருவிக் காவலுக்கு குளத்தடி வயலுக்கு போட்டாள். சாப்பாடு கொண்டுபோக வேணும்…சிறுபோக விதைப்பெண்டால் சும்மாயே…” “நான் இண்டைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகட்டே அம்மா…” “என்ன மோனே லூசுத்தனமாய் கதைக்கிறாய் கொப்பான்ரை குணம் தெரியும் தானேவயல் பக்கம் உன்னை விடக்கூடாதெண்டு பொத்திப் பொத்தி அந்தாள் வளக்குது நீ என்னண்டால்…” “இப்ப படிப்பு இல்லைத்தானேயம்மா ஒருநாளைக்க...