தமிழ் இனி
தமிழ் மொழி நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும் தமிழ் வாழும் இடங்கள் தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசியா பர்மா மொரீசியஸ் தென்னாபிரிக்கா கயானா பிஜி சுரீனாம் ட்ரிடாட் டொபாகோ போன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை. தமிழுக்குரிய இடம் 1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளி...