தமிழ் இனி


Thamizh_Ini520x389.jpg
தமிழ் மொழி
  • நம் தாய்மொழி தமிழாகும்.
  • உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி.
  • அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி.
  • 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி.
  • கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி.
தமிழ் மொழி இதுவரை இழந்தவை
  • அகத்தியம்
  • பெருநாரை
  • பெருங்குருகு
  • முதுநாரை
  • முதுகுருகு
  • பஞ்சமரபு
  • பஞ்சபாரதீயம்
  • பதினாறு படலம்
  • வாய்ப்பியம்
  • இந்திரகாளியம்
  • குலோத்துங்கன் இசைநூல்
முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும்
தமிழ் வாழும் இடங்கள்
  • தமிழ்நாடு
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • பர்மா
  • மொரீசியஸ்
  • தென்னாபிரிக்கா
  • கயானா
  • பிஜி
  • சுரீனாம்
  • ட்ரிடாட்
  • டொபாகோ
போன்ற நாடுகளில் பூர்வீகத் தமிழர் உள்ளனர். ஆனால் எல்லா நாட்டிலும் தமிழ் பேசப்படவில்லை.
தமிழுக்குரிய இடம்
  1. 1996 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்கள் பேசும் மொழியாகத் தமிழ் இருந்தது. அப்பட்டியலின்படி தமிழுக்கு உலக மொழிகளில் 20 வது இடம் வழங்கப்பட்டிருந்தது.
  2. இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுள் தமிழும் ஒன்று.
  3. தமிழ் நாட்டின் ஆட்சிமொழி.
  4. இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.
  5. சிங்கப்பூரின் தேசிய மொழிகளுள் ஒன்று.
  6. தென்னாபிரிக்காவில் தமிழுக்கு அரசியல் அமைப்பு ரீதியான அங்கீகாரம் உள்ளது.
  7. இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் பெற்ற முதல் மொழி தமிழ். (இந்திய நாடாளுமன்றத்தில் 2004 – 06 – 06 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாம் இவ் அறிவிப்பினை வெளியிட்டார்.)
தமிழ் வழக்குமொழி
“Ethnologue”  என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் தமிழில் 22 வட்டார வழக்குகள் உள்ளதெனக் கூறுகின்றது.
  1. ஆதிதிராவிடர்
  2. ஐயர்
  3. ஐயங்கார்
  4. அரவா
  5. பருகண்டி
  6. கசுவா
  7. கொங்கர்
  8. கொரவா
  9. கொர்சி
  10. மதராஸி
  11. பரிகலா
  12. பாட்டுபாஷை
  13. இலங்கைத் தமிழ்
  14. மலேயா தமிழ்
  15. பர்மா தமிழ்
  16. தென்னாபிரிக்கத் தமிழ்
  17. திகாலு
  18. அரிஜன்
  19. சங்கேதி
  20. கெப்பார்
  21. மதுரை
  22. திருநெல்வேலி
முதலியனவே அவையாகும். ஆனால் ஆராய்ந்து பார்க்குமிடத்து 100க்கு மேற்பட்ட வட்டார மொழிகள் தமிழில் நிலைத்து விட்டமையே உண்மையாகும்.
அழிவை எதிர்நோக்கியபடி தமிழ்மொழி
  • பிறமொழி ஊடுருவல் அதிகரித்தமை
  • வட்டார வழக்குகள் தனிமொழியாகக் கிளர்வது
  • வருங்காலங்களில்  தொடர்ச்சியாக இரண்டு தலைமுறையினர் தமிழைக் கற்க ஆர்வமற்றவர்களாக இருத்தல்
  • புலம்பெயர் தமிழர்களிடையே –  குறிப்பாக இரண்டாம் தலைமுறையினரிடையே – தமிழ், பேச்சு மொழி அந்தஸ்தைக் கூட இழந்தமை
போன்ற பல காரணங்களினால் தமிழ் அழிவை நோக்கி நகரத் தொடங்கி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
இழிவு நிலை
  • தாய்மொழியில் பேசினால் கைதட்டும் கூட்டமாகத் தமிழர் இருப்பது.
  • தமிழில் பேசுவதை இழிவெனக் கருதுவது
  • “எனக்கு அவ்வளவாகத் தமிழ் வராது” எனக் கூச்சமின்றிச் சபையில் கூறுவதும் அதைப் பெருமையென எண்ணுவதும்.
இவ்வாறு இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
நாம் செய்யவேண்டியது என்ன?
  • தமிழைத் தமிழாகப் பேச வேண்டும்.
  • அறிவியல் மொழியாகத் தமிழை உயர்த்த வழி செய்ய வேண்டும்
  • ரைசியன் போல் யப்பான்காரன் போல் சீனக்காரன் போல் சொந்த மொழியில் எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கை தமிழனுக்கும் பிறக்க வேண்டும்.
  • “தமிழரைக் கண்டால் தமிழில் பேசவேண்டும்”
  • நம் தமிழை நாம் வளர்த்தால்  நம்மைத் தமிழ் வளர்க்கும்.

- தியா -

இந்த பருவ  http://www.panippookkal.com/ithazh/ ல் வந்த எனது படைப்பு 

கருத்துகள்

  1. தமிழ் இனி...

    அழகான தொகுப்பு...

    அன்னைத் தமிழை வாழ வைப்போம்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. புலம்பெயர் நாடுகளில் தமிழ் வளரும் என்பது சுத்தமான பாசாங்கு. நான் என் பிள்ளைகளிடமே தோற்றுவிட்டேன். தமிழ்மொழி மூலம் அறிந்து கொள்வதற்கு எமக்கு எதுவுமில்லை என்கிறார்கள் இளைய தலைமுறையினர். அதில் உண்மை இல்லாமலுமில்லை. ஏட்டிலிருந்த சங்க இலக்கியங்களை விளிம்புநிலை மக்கள் என்றாவது அறிந்திருந்தனரா? அறிந்திருந்த நாவலர்களிடமும் மதவாதமும், சாதியமுந்தானே இருந்தன? இல்க்கியங்கள் மானுஷ வளர்ச்சியில் பெரிய ‘ஜாக்’ அடித்துவிடுமென்பதில்லை. ஒரு சிறிய வீதம் உண்டுதான், இல்லாவிடாலும் பரவாயில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவைபற்றி விரிந்ததளத்தில் பேசலாம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்