இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

காண்டீபன் அ
க்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இன்று என் வீட்டுக்குள்
மூன்றாம் பிறையும்

முழு நிலவும்

ஒன்றாகக் குடி கொண்டு

வாழ்த்த வந்த நன்நாள்....


வருடத்தில் வருகின்ற

நாட்களில் எல்லாம்

வசந்தத்தைத் தருகின்ற

பொன் நாள் இது.....


செப்ரெம்பர் இறுதி நாளின்

இரவு மட்டும்
நீள்வது ஏனோ?
ஒக்டோபர் ஒன்று வந்தால்
இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...

என் காதல் தேசத்து

புன்னகையே

எங்கள் வீட்டின்

முழு நிலவே

உனக்கு இன்று

பிறந்தநாள் என்று

காலையில் இருந்தே
பூப் பறிக்கிறேன்
அர்ச்சிப்பதற்காக....


உன் பிறந்தநாள் பரிசாக

கடவுள்
தந்த
எங்கள் அன்புச்

செல்வத்துக்கும்
உனக்கும்
ஒரே நாளில்
விழா எடுக்கப் பிறந்த

அதிஷ்டக்காரன்

நான் என்பதால்

ஒரு கர்வம் எனக்குள்...


என்ன ஒரு வித்தியாசம்
உனக்கு முப்பத்தொன்று
மகளுக்கு மூன்று


என் அன்பு மனைவியே

பத்தாண்டுகளுக்கு முன்

உன்னைச் சந்தித்து

நான் சொன்ன

அதே மகிழ்வுடன்

அதே புன்னகையுடன்
இன்றும் சொல்கிறேன்
என்றும் மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...எங்கள் வீட்டு
வளர் பிறையே

இன்றுடன்

அகவை
மூன்றில்
கால்
பதிக்கும்
கற்கண்டே...

கரும்பே...

உன் தாய்க்கு

இறைவன் தந்த

பிறந்தநாள் பரிசே

எங்கள் வாழ்வில்

ஒளியேற்றி

முழுமை தர
வந்த முத்தே

கலைகள் பல பெற்று

துறைகள் பல கண்டு

நிதம் வாழ்வில்

மகிழ்ச்சியுடன்

என்றும் வாழ்க
நீ பல்லாண்டு
நலமுடனே.....


இனிதே வாழ்த்துகிறேன். இரா. காண்டீபன் ( கணவன் - அப்பா )
-தியா -

கருத்துகள்

 1. பிரமாதம் நான் தான் முதலாவதாய்........ அம்மாக்கும் மகளுக்கும் எனது வாழ்த்துக்கள். என் ஈழத்தவர் என்பதாலோ என்னவோ என் மனம் உங்களை நோக்கி ஈர்க்கிறது. உங்கள் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். என் பங்கு கேக்கையும் சேர்த்து சாபிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. பிறந்த நாள் கவிதை அருமை...

  உங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. மனமார்ந்த வாழ்த்துக்கள் மூவருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. அடேடே...என்ன பொருத்தம்.
  இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  காண்டீபன்...அழகிய பெயர்.

  பதிலளிநீக்கு
 5. இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  என்றென்றும் இன்பமாயிருக்க இறையருள் புரியட்டும்!

  பதிலளிநீக்கு
 6. //

  நிலாமதி சொன்னது…

  பிரமாதம் நான் தான் முதலாவதாய்........ அம்மாக்கும் மகளுக்கும் எனது வாழ்த்துக்கள். என் ஈழத்தவர் என்பதாலோ என்னவோ என் மனம் உங்களை நோக்கி ஈர்க்கிறது. உங்கள் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். என் பங்கு கேக்கையும் சேர்த்து சாபிடுங்கள்.

  //

  நன்றி அக்கா
  நீங்கதான் முதல்...
  சரி நீங்கள் சொன்னபடி செய்கிறோம்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. //

  சே.குமார் சொன்னது…

  பிறந்த நாள் கவிதை அருமை...

  உங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  //

  நன்றி சே.குமார்
  உங்களின் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் என் மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 8. //

  சுசி சொன்னது…

  மனமார்ந்த வாழ்த்துக்கள் மூவருக்கும்.

  //

  நன்றி சுசி மூவருக்கும் சொல்லிவிட்டீர்கள்
  நன்றி

  பதிலளிநீக்கு
 9. //

  ஸ்ரீராம். சொன்னது…

  அடேடே...என்ன பொருத்தம்.
  இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  காண்டீபன்...அழகிய பெயர்.

  //

  வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம்
  "காண்டீபன்...அழகிய பெயர்"....... அப்படியா?
  சந்தோசம்
  நன்றி

  பதிலளிநீக்கு
 10. //

  சுந்தரா சொன்னது…

  இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


  என்றென்றும் இன்பமாயிருக்க இறையருள் புரியட்டும்!

  //

  உங்கள் வாழ்த்துக்கும் வழிபாட்டுக்கும் நன்றி சுந்தரா

  பதிலளிநீக்கு
 11. இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. தியா உங்கள் கவி எல்லாம் சூப்பர் உங்கள் மகள் உங்களை எழுத விடுகிறார்களா ?
  பொம்மை மாதிரி உங்கள் மகள் இருக்கிறார் ...? பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. ஸாதிகா சொன்னது…

  இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  //

  நன்றி ஸாதிகா

  பதிலளிநீக்கு
 14. //
  அரவியன் சொன்னது…

  தியா உங்கள் கவி எல்லாம் சூப்பர் உங்கள் மகள் உங்களை எழுத விடுகிறார்களா ?
  பொம்மை மாதிரி உங்கள் மகள் இருக்கிறார் ...? பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  //

  நன்றி அரவியன் அவள் எழுத விடுவாள்.
  வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 15. தங்கள் இனியர் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து! எல்லாம் வல்ல இறையருளால் நலமும் வளமும் நிலைபெற்று வாழ்க!!

  பதிலளிநீக்கு
 16. தியா....சுகம்தானே.நிறைய நாளா உங்கட பக்கம் வரேல்ல.இண்டைக்கு நல்ல நாளில வந்திருக்கிறன்.

  நல்ல வடிவா இருக்கிறா சின்னத் தியாக்குட்டி.
  உங்கள் துணைக்கும் மகளுக்கும் எப்பவும் சந்தோஷமா சுகமா இருக்கவேணும் எண்டு சொல்லி அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  வீடே களைகட்டி இருக்கும்.

  அனைத்து நலன்களும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 19. இன்னும் எட்டு தினங்கள்...வாழ்த்துக்கள்...
  எங்கேயோ கேட்ட பெயர்போல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 20. தாய்க்கும் மகளுக்கும் ஆசிகள்:)

  பதிலளிநீக்கு
 21. நிலா மகள் சொன்னது…

  தங்கள் இனியர் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து! எல்லாம் வல்ல இறையருளால் நலமும் வளமும் நிலைபெற்று வாழ்க!!

  //

  நன்றி நிலாமகள் உங்கள் நல்லாசிக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 22. ஹேமா சொன்னது…

  தியா....சுகம்தானே.நிறைய நாளா உங்கட பக்கம் வரேல்ல.இண்டைக்கு நல்ல நாளில வந்திருக்கிறன்.

  நல்ல வடிவா இருக்கிறா சின்னத் தியாக்குட்டி.
  உங்கள் துணைக்கும் மகளுக்கும் எப்பவும் சந்தோஷமா சுகமா இருக்கவேணும் எண்டு சொல்லி அன்பு வாழ்த்துகள்.


  //


  ஹேமா நாங்கள் சுகம்
  உங்கள் வரவு நல்லதாக அமைந்துள்ளது.
  வாழ்த்துக்கும் நன்றி
  அவர்கள் இருவருக்கும் சொல்லிவிட்டேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 23. எஸ்.கே சொன்னது…

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


  //

  நன்றி எஸ்.கே

  பதிலளிநீக்கு
 24. Priya சொன்னது…

  இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


  //

  உங்களின் வாழ்த்துக்கு நன்றி பிரியா

  பதிலளிநீக்கு
 25. மாதேவி சொன்னது…

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  வீடே களைகட்டி இருக்கும்.

  அனைத்து நலன்களும் கிடைக்கட்டும்.


  //

  நன்றி மாதேவி
  புது புடவை (உடுப்பு) எடுத்தாச்சு
  மற்ற ஏற்ப்பாடு எல்லாம் ரெடி.
  வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 26. ராவணன் சொன்னது…

  இன்னும் எட்டு தினங்கள்...வாழ்த்துக்கள்...
  எங்கேயோ கேட்ட பெயர்போல் உள்ளது.


  //

  சரியா கணக்கு போட்டிருக்கிறிங்கள்
  வாழ்த்துக்கு நன்றி.
  யாருடைய பெயர்
  நன்றி

  பதிலளிநீக்கு
 27. வானம்பாடிகள் சொன்னது…

  தாய்க்கும் மகளுக்கும் ஆசிகள்:)

  //

  உங்களின் ஆசிக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 28. இருவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்

  பதிலளிநீக்கு
 29. என்னோட வாழ்த்துக்களையும் மறக்காம சொல்லிடுங்க..

  பதிலளிநீக்கு
 30. 'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

  http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

  (dont miss to place this tell a friend button mentioned in above link)

  also see other blogger hacks in my blog

  பதிலளிநீக்கு
 31. இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 32. விஜய் சொன்னது…

  இருவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்


  //

  உங்களின் வாழ்த்துக்கு நன்றி விஜய்

  பதிலளிநீக்கு
 33. இந்திரா சொன்னது…

  என்னோட வாழ்த்துக்களையும் மறக்காம சொல்லிடுங்க..

  //

  சரி சொல்லுகிறேன்
  வாழ்த்துக்கு நன்றி இந்திரா

  பதிலளிநீக்கு
 34. இளங்கோ சொன்னது…

  வாழ்த்துகள் :)

  //
  நன்றி இளங்கோ

  பதிலளிநீக்கு
 35. d சொன்னது…

  'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

  http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

  (dont miss to place this tell a friend button mentioned in above link)

  also see other blogger hacks in my blog


  //

  thanks
  i will visit your blog

  பதிலளிநீக்கு
 36. ஜிஜி சொன்னது…

  இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  //

  உங்களின் இனிமையான வாழ்த்துக்கு நன்றி ஜி ஜி

  பதிலளிநீக்கு
 37. அன்பு காண்டீபன், உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதையே உங்கள் மென்மையான உள்ளத்திற்கு கட்டியம் கூறுகிறது. என் தங்கைக்கும்,சின்னக்குட்டி
  அக்ஷிக்காவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  என் பிறந்த நாளுக்கும் கவிதை கொடுப்பீர்களா நண்பரே?

  பதிலளிநீக்கு
 38. உங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. தியா....உங்கள் பரிந்துரைக்கு அன்போடு வார்த்தைகள் கடந்து காற்றுவழி நன்றி சொல்கிறேன் நிறைவான சந்தோஷத்தோடு !


  என்னை இணைத்துக்கொண்டவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் சொல்லிவிடுங்கள் தியா!

  பதிலளிநீக்கு
 40. கவிதை அருமை பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 41. மோகன்ஜி சொன்னது…

  அன்பு காண்டீபன், உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதையே உங்கள் மென்மையான உள்ளத்திற்கு கட்டியம் கூறுகிறது. என் தங்கைக்கும்,சின்னக்குட்டி
  அக்ஷிக்காவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  என் பிறந்த நாளுக்கும் கவிதை கொடுப்பீர்களா நண்பரே?


  //

  வணக்கம் மோகன்ஜி நீங்கள் சொன்ன கருத்து எனக்கு நிறைவைத் தருகிறது.
  வாழ்த்துக்கு நன்றி
  கண்டிப்பாக கவிதை தருவேன் எப்ப என்று சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 42. அப்பாவி தங்கமணி சொன்னது…

  பிறந்த நாள் கவிதை அருமை...Happy Birthday from us too

  //

  நன்றிங்க
  வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 43. ஜோதிஜி சொன்னது…

  உங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  //

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டேன் சந்தோசப் பட்டார்கள்
  நன்றி

  பதிலளிநீக்கு
 44. ஹேமா சொன்னது…

  தியா....உங்கள் பரிந்துரைக்கு அன்போடு வார்த்தைகள் கடந்து காற்றுவழி நன்றி சொல்கிறேன் நிறைவான சந்தோஷத்தோடு !


  என்னை இணைத்துக்கொண்டவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் சொல்லிவிடுங்கள் தியா!

  //

  நான்ல தளம் நல்ல பிடிச்ச கவிதைகள் அதுதான் .........
  சந்தோசம்
  அவர்களிடம் சொல்லிவிட்டேன்

  பதிலளிநீக்கு
 45. ஜெய்லானி சொன்னது…

  http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html


  //

  ok

  பதிலளிநீக்கு
 46. சௌந்தர் சொன்னது…

  கவிதை அருமை பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  //

  வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 47. ஸ்ரீ சொன்னது…

  வாழ்த்துகள்.

  //

  வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 48. அலைகள் பாலா சொன்னது…

  வாழ்த்துக்கள்

  //

  வாழ்த்துக்கு நன்றி அலைகள் பாலா

  பதிலளிநீக்கு
 49. அருமையான அசத்தலான கவிதை,உங்கள் இதயத்தின் முழு அன்பையும் கொட்டி எழுதிய கவிதையை மிகவும் ரசித்தேன்.வாழ்க பல்லாண்டு,வாழ்க வளமுடன் நீவீர் குடும்பத்துடன்.

  பதிலளிநீக்கு
 50. இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-))

  அழகான கவிதையாய் உங்கள் வாழ்த்துக்கள்.. அருமை :-)

  பதிலளிநீக்கு
 51. வரிகள் அனைத்தும் மனதை அள்ளுகின்றன.

  பிறந்ததின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 52. asiya omar சொன்னது…

  அருமையான அசத்தலான கவிதை,உங்கள் இதயத்தின் முழு அன்பையும் கொட்டி எழுதிய கவிதையை மிகவும் ரசித்தேன்.வாழ்க பல்லாண்டு,வாழ்க வளமுடன் நீவீர் குடும்பத்துடன்.


  //

  கவிதைக்கு பாராட்டும் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் சொன்ன உங்களுக்கு நன்றி asiya omar

  பதிலளிநீக்கு
 53. Ananthi சொன்னது…

  இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-))

  அழகான கவிதையாய் உங்கள் வாழ்த்துக்கள்.. அருமை :-)


  //

  நன்றி ஆனந்தி
  உங்களின் வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 54. இந்திரா சொன்னது…

  வரிகள் அனைத்தும் மனதை அள்ளுகின்றன.

  பிறந்ததின வாழ்த்துக்கள்.

  //

  நன்றி இந்திரா
  கவிதைக்கும் பிறந்தநாளுக்கும் வாழ்த்துரைத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 55. என்றென்றும் நலமுடனும் மகிழ்வுடனும் வளமுடனும் தங்கள் மனைவியும் குழந்தையும் சிரித்திருக்க என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 56. மனோ சாமிநாதன் சொன்னது…

  என்றென்றும் நலமுடனும் மகிழ்வுடனும் வளமுடனும் தங்கள் மனைவியும் குழந்தையும் சிரித்திருக்க என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!


  //

  சந்தோசம்
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 57. முதலில் என் மேல் எனக்கு கோபம் வருகிறது சகோ. இத்தனை நாளாய் உங்கள் தளத்தை நான் எப்படி மிஸ் பண்ணினேன் என்று....?! என்ன அருமையான கவிதைகள்...இதுதாங்க கவிதை...

  உங்களின் அழகான அருமையான குடும்பத்திற்கு மகிழ்கிறேன் சகோ. என்ன ஒரு ஒற்றுமை ஒரே நாளில் இருவருக்கும் பிறந்த நாள்...!!

  மூவரையும் சேர்த்தே வாழ்த்துகிறேன்......மகிழ்ச்சியும், அன்பும் இந்த நாளை விடவும் இன்னும் அதிகமாக கரைபுரண்டு ஓட வேண்டும் உங்கள் இல்லத்தில் என்று மனமார மன நிறைவுடன் வாழ்த்துகிறேன்.

  அன்பு சகோதரி கௌசல்யா.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)