அன்பே என் உயிரே...

அன்பே
- என்

உயிர்க் காதலனே


உன்னை மட்டும்

நிறைத்து


என் நெஞ்சு மகிழ்கிறது.....


என் உயிரே

உன்னை - என்

நெஞ்சில் நான்
சுமப்பதால்

சூடாக உண்ண - குடிக்க

மறுக்கிறது என் இதயம்


நீயோ


வெப்பம் தாங்க மாட்டாய்

என்பதை

என்னைவிட - என்

இதயம் அறியுமோ !!!"நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து"
- திருக்குறள் 1128 -


கருத்துகள்

 1. திருக்குறளும் புதுக்கவிதையும் இணைந்து வருதே! அருமை.

  பதிலளிநீக்கு
 2. அட..... என்று சொல்ல வைத்தது தியாவின் திருக்குறள் விளக்கம்...

  வாழ்த்துக்கள் தியா....

  தொடருங்கள் இது போன்ற பல அருமையான பதிவுகளை.....

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா சொன்னது…
  Chitra
  சுசி
  R.Gopi கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. கவிதை நல்லாயிருக்கு.திருக்குறளை கொஞ்சம் பெரிய எழுத்தில் போட்டிருந்தால் அருமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. asiya omar
  r.v.saravanan
  உங்கள் இருவரினதும் பின்னூட்டத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. அருமை தியா.. : எதாவது சாப்பிடுறீங்களா இல்லையா..:))

  பதிலளிநீக்கு
 7. நவின பரிமேலழகருக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. நல்ல கவிதை. நல்ல வரிகள்.
  www.vijisvegkitchen.blogspot.com

  பதிலளிநீக்கு
 9. எல்லாருக்கும் நன்றிங்க

  //

  தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

  அருமை தியா.. : எதாவது சாப்பிடுறீங்களா இல்லையா..:))

  //
  என்ன பண்ணட்டும் வவுத்துக்கு துரோகம் செய்யலாமா?


  //
  வைகறை சொன்னது…

  நவின பரிமேலழகருக்கு வாழ்த்துக்கள்!

  //

  அய்யய்யோ கிண்டல் பண்ணாதிங்க

  பதிலளிநீக்கு
 10. தியா எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாச்சி.
  நீங்க அங்க வந்தும். நான் இங்க வந்தும்.

  திருகுறளோடு கவிக்குறளும் அருமை தியா.
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 11. அன்புடன் மலிக்கா சொன்னது…

  தியா எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாச்சி.
  நீங்க அங்க வந்தும். நான் இங்க வந்தும்.

  திருகுறளோடு கவிக்குறளும் அருமை தியா.
  வாழ்த்துக்கள்..

  //

  வணக்கம் மலிக்கா நல்ல சுகம்
  வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 12. என்ன தியா காதல் கவிதை அதிகமா இருக்கு :-)
  உங்களுக்கு வந்ததா இல்லை கற்பனையா?

  பதிலளிநீக்கு
 13. சிங்கக்குட்டி சொன்னது…

  என்ன தியா காதல் கவிதை அதிகமா இருக்கு :-)
  உங்களுக்கு வந்ததா இல்லை கற்பனையா?
  22 செப்டெம்ப்ர், 2010 2:49 pm


  //

  என்ன சிங்கக்குட்டி இப்பிடி கேட்டுடிங்க நாங்களும் ஒரு காலம் காதல் பண்ணினோமில

  பதிலளிநீக்கு
 14. நல்லாக இருக்கு தியா எல்லா குறளுக்கும்
  நவீன கவிதை எழுதலாமே ....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)