இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகிய ஐரோப்பா – 4

படம்
முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் ஜாம் போகும் என்று பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு நெடுஞ்சாலையில் இறங்கி கார் வேகம் பிடிக்கத் தொடங்கியது. அமெரிக்க நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிட்டால் லண்டன் சாலைகள் ஜுஜுபிதான். ஆனாலும் ட்ரைவிங்கில் பிடித்த விடயம் ஒன்றைச் சொல்லியே ஆக வேணும். இங்கு வாகனங்கள் இடது பக்கமாகத்தான் போகும். இங்கு அமெரிக்கா போல் எல்லா பக்கத்தாலும் முந்திச் செல்ல முடியாது. டிரைவர் சைடில் மட்டுமே முந்திச் செல்ல முடியும்.   தேம்ஸ் நதிக்கு மேலால் கார் கடந்து சென்ற போது ஒரு தனிச் சுகம் “படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த நதி இன்று எனக்குக் கீழே” என்பதை எண்ணியபோது மனதுக்குள் ஒரு பேரானந்தம்.. தயவு செய்து இந்த இணைப்பில் சென்று  அழகிய ஐரோப்

அழகிய ஐரோப்பா – 3

அந்த ஏழு நாட்கள் “ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள் “சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன். வளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள். தயவு செய்து இந்த இணைப்பில் சென்று  அழகிய ஐரோப்பா 3  தொடரைப் படியுங்கள் அன்புடன்...   தியா 

அழகிய ஐரோப்பா – 2

முதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.   ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு…  அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன். “நேரம் வேற போகுது இன்னும் ரெடியாகலையா…” பிள்ளைகளை அதட்டும் மனைவியின் குரல் கேட்டது. “யெஸ் ஐம் ரெடி…” என்றான் மகன் “மீ… டூ…” என்றாள் மகள் “அப்பா எங்கே…?” விசாரிப்பு கொஞ்சம் கடுமையாக இருந்தது “ஹீ இஸ் இன் த பேஸ்மெண்ட்…” என்றாள் மகள் “ஹீ இஸ் ஷட்டிங் டவுன் த வாட்டர்…” என்றான் மகன் “ஏன் உங்களுக்குத் தமிழ் தெரியாதோ…” மீண்டும் அதட்டும் மனைவியின் குரல் கேட்டது “யெஸ் வி நோ தமிழ்” என்றாள் மகள்........ தயவு செய்து இந்த இணைப்பில் சென்று  அழகிய ஐரோப்பா 2  தொடரைப் படியுங்கள் அன்புடன்...   தியா 

அழகிய ஐரோப்பா – 1

உல்லாச உலா இதற்கிடையில் இரண்டு தடவைகள் ஃபோன் ரிங் ஆகி கட்டானது. மூன்றாவது முறையாக ஃபோன் ரிங் ஆனபோது; “உந்தப் போன் அடிக்கிறது யாருக்கும் காதிலை கேட்கலையோ” என அதட்டினாள். “அம்மா நான் பிஸி…” என்றாள் மகள் மேலே தன் அறையில் இருந்தபடி…   “நானும் பிஸி…” என்றான் என் ஆறு வயது மகன். நான் கதவைத் திறந்து ஃபோனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் மூன்றாவது தடவையாக வந்த அழைப்பும் நின்று போனது. தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புக்களை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை. ஆனால் “பயணம் போகும் நாளில் யாராவது தெரிந்தவர்களாக இருக்கலாம்…” என்ற சிந்தனையுடன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தேன்… . பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் ரிங் பண்ணியது. இம்முறை முதலாவது ரிங்கிலேயே ஃபோனைத் தூக்கி விட்டேன். அதே நம்பர்… “ஹலோ” என்றேன் “…………..” “ஹலோ… ” ................................................................ தயவு செய்து இந்த இணைப்பில் சென்று  அழகிய ஐரோப்பா 1   தொடரைப் படியுங்கள்  அன்புடன்...   தியா 

அன்னை மண்ணே

அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண உணவு இன்றி நாங்கள் வாடை மெலிகின்றோம் – எங்கள் சோகம் தீர்ப்பார் யாரும் இன்றி வலிகள் சுமக்கின்றோம் வீரம் விழைந்த எங்கள் வம்சம் விதையாய் வீழ்ந்ததேனோ வீணர் கூட்டம் நடுவில் நாங்கள் சிறையில் போனதேனோ காலம் பின்னிய வலையில் எங்கள் கால்கள் சிக்கியதேன் கண்ணீர் மழையால் பூமி நனைத்துக் கலங்கி நிற்பதுமேன் பாசம் காட்ட இளம் தோழர் கூட்டம் புயலாய் கிளம்பியதே! வரும் நாளை இந்த உலகப் பரப்பில் உரிமைக் குரலாய் அவர்கள் நிலைத்திடுவர்! காலம் கனியும் போது நாங்கள் வழமாய் வாழ்ந்திடுவோம்! அந்தக் காலம் வேண்டி நாங்கள் உன் கால்கள் பணிகின்றோம்! தாயே தமிழ் நாடே உந்தன் கால்கள் பணிகின்றோம்! -தியா-