இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் வாழ்ந்து கொண்டிருந்தால்.......

படம்
காயம்மற்றும்வலி

இங்கேஇருக்கிறது.

அமைதிமற்றும்காதல்

இதுஅனைத்தும்

இங்கேஇருக்கிறது.

குழப்பம்மற்றும்சந்தேகம்

அதுவும் கூடவே வாழ்கிறது.

நாங்கள்இல்லாமல்

நாங்கள் இல்லை.

நாம்அழஅழுகிறோம்.

நாம்முயற்சி செய்து

நாமாகவே சிரிக்கிறோம்.

நாங்களாகவே

காயப்பட்டுக் கொள்கிறோம்.

நாங்களாகவே வலிகளில் இருந்து

மீண்டெழுகிறோம்.

கடைசியாகசோதனைமுடிவில்

வாழ்க்கை

ஒரு பாடமாக உள்ளது.

மிகவும்நன்றாககற்றுக்கொள்ள

என்னுள்

நிறையவே உள்ளது.

ஒருவேளை,ஒரு நாள்,

என் கதை 

என்னால் மட்டுமே 

எழுதப்படக் கூடியதாக 

என் வாழ்க்கை 

அர்த்தப் பட்டுபோகலாம் 

அப்போதும்

நான் 

வாழ்ந்து கொண்டிருந்தால்.......

காதல் எழுதப்படாத விதி...

படம்
ஒருஅமைதியானமாலை நேரம்
நட்சத்திரங்கள்
மற்றும்
மெழுகுவர்த்தி...
அலைகளின்ஒலி
மிகவும்இறுக்கமான
நடைப் பயணம்

நம்நிழல்கள்
மணல் தரையில்
கூடவே...
தீவிரமாகஒருவருக்கொருவர்
இன்னும்
அதி தீவிரமாக
கைப் பிடித்து
நெருக்கமாக....

நவ நாகரிக உலகத்தில்
காதல் எழுதப்படாத விதி...
காற்றுஊடுருவிய
நெருக்கமானநேரத்தில்
ஒன்றும்ஒப்பிட்டுக்கொள்ள முடியாது

நாம்சந்தித்துவந்ததிலிருந்தே
என்னுடையஎண்ணங்கள்
அவளால்மாற்றம் பெற்றுள்ளன
என் இதயம்
மனம்மற்றும்உடல்
இன்னும்....

நான்
எப்போதும்உன்னுடன்
இருக்கவேண்டும்
நீ
என்வாழ்வின்
ஊற்றாக இருக்கிறாய்
அழகான
மற்றும் விலைமதிப்பற்ற
என் சொத்து நீ...
நீஎன்மனைவிமனம்

படம்
மீண்டும் முன் போல்
முயன்று பார்க்கிறேன்
காற்றைப் பிடித்துக்
கடிவாளம் கட்டியது போல்
தோற்றுப் போகிறது

வாழும் தமிழ்

படம்
இது அமெரிக்காவின் மினேசொட்ட மாநிலத்தில் உள்ள ஒரு நூலகத்தின் வரவேற்பு பதாதை இது. இதில் தமிழ் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும். அதை நீங்களும் பாருங்கள் நட்புகளே.

ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் (ஏப்ரல் 13)

இதுஎனது 200 வதுஇடுகைஏப்ரல் 13 தமிழரின் ( தமிழ் நாட்டு ) மாற்றத்துக்கான நாள்.
இதோ ஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் நான் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன்..

அப்பாடா

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித துடுப்பாட்ட காய்ச்சல் நிலவி அது முடிவுக்கும் வந்து விட்டது. அதிகமாக தெலுகர்களும் இந்தியத் தமிழர்களும் வாழும் "மினிசொட்டா" என்ற மாநிலத்தில் தினமும் இந்தியர்கள் அதிகம் பேரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இப்போதும் உண்டு. நான் கண்டு மனம் மகிழ்ந்த ( கசந்த ) அனுபவங்கள் இதோ சில....


அமெரிக்கர்கள் இங்கு நிற இன பாகுபாடு பார்ப்பதில்லை.

தமிழர்கள் அதிகமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்

தெலுகர்கள் தாய்மொழியில் பேசுகிறார்கள் ( எம்மிடம் கூட தெலுகு தெரியுமா? என கேட்கிறார்கள்.

அதிகமான அமெரிக்கர்கள் ஹிந்தி மட்டுமே இந்திய மொழி என நினைக்கிறார்கள்.

ஆனால்....

இங்கு ஒரு நூலகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் வரவேற்பு பலகை போடப்பட்டிருந்தது. அதில் தமிழும் ஒரு மொழி. அதில் சிங்களம் இடம் பெறவில்லை. அது மகிழ்ச்சி.


இருநூறாவது
பதிவில் சந்திப்போம்...

ஐந்தாண்டு கடந்தாலும்...

படம்
என் தேவதையே

உன்னை நான்

நேசிக்கிறேன்

என்று சொன்னால்

நீ கோபிப்பாய்

அதனால்

இன்னும் சொல்கிறேன்

நான் உன்னையே

சுவாசிக்கிறேன்...

என்னவளே - உன்

கரம் பிடித்து இன்று

ஐந்தாண்டு கடந்தாலும்

நேற்றுப் போல்

இனிக்கிறதடி இன்றும்

வாழ்க்கை...

மறுபடியும் மறுபடியும்

தொலைந்து போன
புன்னகையினைத் தேடியும்
அது கிடைக்காமல்
வலிந்து வரவழைத்த
புன்னகையுடன்
கை கோர்த்து
வாழ நினைக்கிறேன்..
முடியாமல் போக
மறுபடியும் மறுபடியும்
பழமை மட்டுமே
ஆழப் பதிகிறது(படிக்கிறது)
என் உள் மனதில்...


அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டாவில் இருந்து...

வணக்கம் நண்பர்களே எல்லோரும் நலம்தானே....
நான் தியா....
அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டாவில் இருந்து எழுதுகிறேன். இன்றுடன் நான் இங்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகிறது. இணைய வசதிகள் இல்லாமையால் உங்களுடன் இணைய முடியாமல் கவலையில் மூழ்கியிருந்தேன்.
அதைவிட வந்தவுடன் வேலையில் இணையவேண்டிய அவசியமும்..... அதனால் நட்புகளாகிய உங்களுடன் இணைவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை. குறிப்பாக பல நண்பர்கள் நலம் விசாரித்து மற்றும் தேடியும் இருந்தீர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி.
இனி இணையம் சீரானதும் உங்களுடன் முன் போல இணைந்திருப்பேன்.
நன்றி என்றும் அன்புடன்.... தியா