இது அமெரிக்காவின் மினேசொட்ட மாநிலத்தில் உள்ள ஒரு நூலகத்தின் வரவேற்பு பதாதை இது. இதில் தமிழ் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும். அதை நீங்களும் பாருங்கள் நட்புகளே.
ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு இனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும். 5.2.1. மரபு வழிப்பட்ட நிலை மரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. ‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி...
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன...
மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குசந்தோஷம்...
பதிலளிநீக்குஅருமை!!
பதிலளிநீக்குநந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!