இடுகைகள்

வாழ்த்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிய பொங்கல் வாழ்த்துகள்

படம்

இனிய வரவாக அமையட்டும் 2016

படம்

ஐந்தாண்டு கடந்தாலும்...

படம்
என் தேவதையே உன்னை நான் நேசிக்கிறேன் என்று சொன்னால் நீ கோபிப்பாய் அதனால் இன்னும் சொல்கிறேன் நான் உன்னையே சுவாசிக்கிறேன்... என்னவளே - உன் கரம் பிடித்து இன்று ஐந்தாண்டு கடந்தாலும் நேற்றுப் போல் இனிக்கிறதடி இன்றும் வாழ்க்கை...

அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டாவில் இருந்து...

வணக்கம் நண்பர்களே எல்லோரும் நலம்தானே.... நான் தியா.... அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டாவில் இருந்து எழுதுகிறேன். இன்றுடன் நான் இங்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகிறது. இணைய வசதிகள் இல்லாமையால் உங்களுடன் இணைய முடியாமல் கவலையில் மூழ்கியிருந்தேன். அதைவிட வந்தவுடன் வேலையில் இணையவேண்டிய அவசியமும்..... அதனால் நட்புகளாகிய உங்களுடன் இணைவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை. குறிப்பாக பல நண்பர்கள் நலம் விசாரித்து மற்றும் தேடியும் இருந்தீர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி. இனி இணையம் சீரானதும் உங்களுடன் முன் போல இணைந்திருப்பேன். நன்றி என்றும் அன்புடன்.... தியா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

படம்
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...

சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள்....

சித்திரைத் தமிழ் மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... சில்லறை வாங்கி உண்டியல் சேர்த்து உறவுகள் கூடி நிறைவுடன் மகிழ்ந்து புத்துடை அணிய நித்திரை விட்டு -நாம் விரைவாக எழுவோம்.... அன்றேல்... நித்திரையின்றி விடியும்வரை விழித்திருப்போம்... சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள் வாருங்கள் நாம் சோகங்கள் மறந்து சுமைகளை ஒருகணம் இறக்கி மகிழ்ந்திருப்போம் நிறைவாக...

விவசாயி தாள் வணக்கம்.

படம்
எனது வலையுலகச் சொந்தங்களே ! உங்கள் அனைவருக்கும் எனது உழவர் திருநாளாம் தைப் பொங்கல் மற்றும்.... தை முதல் நாள் வாழ்த்துகள். தை பிறந்து விட்டது அனைவர் வாழ்விலும் புது வழிகள் பிறந்து வலிகள் தீர்ந்து இனிவரும் நாட்களில் வளமாய் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். சேற்றில் புரண்டெழும்பி வயல் நிலத்தில் தாளமிட்டு உழுது நல்ல வரப்பிட்டு நெல்லெறிந்து உரம் விதைத்து நிலம் காத்து சொல் பொறுக்காச் சோர்விலராய் கண்ணுறக்கம் ஏதுமின்றி எல்லையிலே காவலிட்டு நெற்கதிர்கள் குனிந்து மண்ணில் கோலமிடும் காலம் வர பக்குவமாய் அறுத்து நல்ல பதத்துடனே சூடடித்து உலகமக்கள் உய்திடவே உழைத்து நல்ல வேர்வை சிந்தி உன்னதமாய் வாழும் எங்கள் நன்செய் மாந்தர்தனை நாளும் நினைத்திடுதல் நலமன்றோ.............. தானுண்ணா வயிறு காய்ந்து தன்நாடு செழித்திடவே பாடுபடும் - அவ் ஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி வந்தனங்கள்......... நாடு வளம் பெற்று நல்மனிதர் நகரேகி கூடு குலத்துடனே வளம் கொழிக்க வாழ்ந்தாலும் நாடு செழித்திடவே "பாடு"கள் பலசுமந்து காடு வெட்டி நல்ல களனி செய்து ஏர்வழியே தான் நடந்து வேர்வையினை உரமாக்கி நெல்மணிகள் விளைச்சலிடும் ...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

படம்
அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... கடந்த வருட சோகங்களை மறப்போம்... நல்லவைகளை நாளும் நினைப்போம்... வருகின்ற புத்தாண்டை இனிதே வரவேற்று உறவுகளுடன் கூடியிருந்து மகிழ்ந்திருப்போம்... அன்புடன்... - தியா -

பாலன் பிறப்பு வாழ்த்துகள்

படம்

இன்றுடன் நூறு சொந்தங்கள்

படம்
இன்றுடன் நூறு சொந்தங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் மிகச் சந்தோசமாக இருக்கிறேன். என்னைப் பின் தொடரும் சொந்தங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து நல்ல பின்னூக்கங்கள் எழுதி என்னை ஊக்குவித்ததுடன் எனது வளர்ச்சியில் பங்கெடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி கூறுவதுடன் இனிவரும் நாட்களிலும் "தியாவின் பேனா"வில் இருந்து வரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பின்னூக்கங்களை எதிர்பார்த்து மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன். அன்புடன்... -தியா- பின்பற்றுபவர்கள் ( 101 ) பலா பட்டறை sarathy ரசிக்கும் சீமாட்டி guna சிங்கக்குட்டி நா.முத்துக்குமார் தமிழன் kovai sakthi Gobenath Muthusamy viswam malarvizhi காவிரிக்கரையோன் MJV இராகவன் நைஜிரியா Shanthru kalyani suresh பித்தனின் வாக்கு ஜெகநாதன் pavi நசரேயன் ரெத்தினசபாபதி வன்னி தகவல் தொழில்நுட்பம் Surya Kannan க.பாலாசி vasanth kumar அகல்விளக்கு கதிர் - ஈரோடு ஈழத்து நிலவு susi தேவன் மாயம் கவிக்கிழவன் நட்புடன் ஜமால் sakthi Vidhoosh nige k தியாவின் பேனா nila mukilan maha Sujatha Jr Muthamizh Vendh...