விவசாயி தாள் வணக்கம்.எனது
வலையுலகச் சொந்தங்களே !
உங்கள் அனைவருக்கும் எனது
உழவர் திருநாளாம்
தைப் பொங்கல்
மற்றும்....
தை முதல் நாள் வாழ்த்துகள்.
தை பிறந்து விட்டது
அனைவர் வாழ்விலும்
புது வழிகள் பிறந்து
வலிகள் தீர்ந்து
இனிவரும் நாட்களில்
வளமாய் வாழ்ந்திட
வேண்டும் என்று
மனதார வாழ்த்துகிறேன்.


சேற்றில் புரண்டெழும்பி
வயல் நிலத்தில் தாளமிட்டு
உழுது நல்ல வரப்பிட்டு
நெல்லெறிந்து உரம் விதைத்து
நிலம் காத்து
சொல் பொறுக்காச் சோர்விலராய்
கண்ணுறக்கம் ஏதுமின்றி
எல்லையிலே காவலிட்டு
நெற்கதிர்கள் குனிந்து மண்ணில்
கோலமிடும் காலம் வர
பக்குவமாய் அறுத்து நல்ல
பதத்துடனே சூடடித்து
உலகமக்கள் உய்திடவே
உழைத்து நல்ல வேர்வை சிந்தி
உன்னதமாய் வாழும் எங்கள்
நன்செய் மாந்தர்தனை
நாளும் நினைத்திடுதல்
நலமன்றோ..............


தானுண்ணா வயிறு காய்ந்து
தன்நாடு செழித்திடவே
பாடுபடும் - அவ்
ஏர் பிடித்த கைகளுக்கு
பலகோடி வந்தனங்கள்.........நாடு வளம் பெற்று
நல்மனிதர் நகரேகி
கூடு குலத்துடனே
வளம் கொழிக்க வாழ்ந்தாலும்
நாடு செழித்திடவே
"பாடு"கள் பலசுமந்து
காடு வெட்டி நல்ல
களனி செய்து
ஏர்வழியே தான் நடந்து
வேர்வையினை உரமாக்கி
நெல்மணிகள் விளைச்சலிடும்
விவசாயி தாள் வணக்கம்.

கருத்துகள்

 1. காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலை இப்போதுதான் கிருஷ் சார் தளத்தில் கேட்டு வருகிறேன்...

  தைத் திருநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  பின்புல கருப்பு தான் உறுத்துகிறது நண்பரே?

  பதிலளிநீக்கு
 5. கண்டிப்பாக உழவும் உழவு சார் வேலைகள் செய்யும் அன்பர்களுக்கு ஒரு முறையேனும் இந்த மரியாதையை செய்ய தான் வேண்டும், நல்ல பொருள் விளக்கத்தோடு நன்றாக வந்திருக்கிறது தியா. வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!!

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் எமதுபொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. //தானுண்ணா வயிறு காய்ந்து
  தன்நாடு செழித்திடவே
  பாடுபடும் - அவ்
  ஏர் பிடித்த கைகளுக்கு
  பலகோடி வந்தனங்கள்.........//
  :)))

  அருமையான வாழ்த்து தியா..

  உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. ஏர் பிடித்த கைகளுக்கு பலகோடி
  வந்தனங்கள்..

  ....உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 11. உழவருக்கு பெருமை சேர்க்கும் கவிதை

  தைத் திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 12. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  -கேயார்

  பதிலளிநீக்கு
 14. அட்டகாசம்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. இனிய தமிழர் திருநாள்
  வாழ்த்துக்கள் தியா.

  பதிலளிநீக்கு
 16. அருமையான கவிதை தியா...

  நான் மிகவும் ரசித்தேன்!!!

  பதிலளிநீக்கு
 17. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தியா

  பதிலளிநீக்கு
 18. அன்புள்ள தியா எங்கு போய் விட்டீர்கள்? என்ன ஆளைக் காணோம்?

  பதிலளிநீக்கு
 19. சூப்பர் தியா :-) என்ன ஆச்சு? ஆளையேகாணோம்?

  பதிலளிநீக்கு
 20. எனக்கு வாழ்த்துச் சொன்னவர்கள்
  பதில் சொன்னவர்கள்
  கவிதை பற்றி கருத்துக் கூறியோர்
  முக்கியமா இந்தக் குறுகிய காலப்பகுதியில்
  என்னையும் ஒரு உறவாக மதித்து தேடிய உங்கள் அனைவருக்கும்
  நன்றி

  பதிலளிநீக்கு
 21. //தானுண்ணா வயிறு காய்ந்து
  தன்நாடு செழித்திடவே
  பாடுபடும் - அவ்
  ஏர் பிடித்த கைகளுக்கு
  பலகோடி வந்தனங்கள்.........//

  மனதை தொடும் உண்மை
  அற்புதம்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி