ஹோசிமின் நினைவாக...இந்தக் கவிதை ஒரு கியூபா நாட்டுக் கவிதையின் மொழிபெயர்ப்பு. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டது. அண்மையில் படிக்க நேர்ந்தது. படித்த நேரத்திலிருந்து மனதை நெருடியபடியே இருந்தது .................................
அதை நீங்களும் படிக்க பதிவிலிடுகிறேன்.


"வேட்டை விமானம் விண்ணில் இரைந்தன
விசப்புகைக் குண்டுகள்
வீழ்ந்து வெடித்தன
எகிறிப் பறந்தன
பீரங்கிக் குண்டுகள்
சடசடத்தன மெசின் துப்பாக்கிகள்
ஓலம் ..............
அழுகை.............
கூக்குரல் ஒலிகள் .........
வயற்புறங்களிலும் வாசற்படிகளிலும்
ஓடிய இரத்தம் மறைந்து கிடந்தன குடிசைகள்.
கரும்புகை
மிக மெதுவாக விண்ணில் கலந்தது.


அடர்ந்த காட்டில் அமைதி துயின்றது.
இடைக்கிடை எங்கோ இருண்ட பகுதியில்
காட்டுப் பூச்சிகளின் கத்தல் கேட்டது.
மூங்கில் புதர்கள் மூடிய ஆற்றின்
கரையில் மெதுவாய் காற்று வீசியது.
தண்ணீர்ப் பையில் தண்ணீர்
நிரப்பிய வீரன்
நிமிர்ந்து மேலே நோக்கினான்........

மூங்கிலில் வண்ணப் பூச்சிகள் மொய்த்தன.
பத்துங்கியிருந்த படையினனை நோக்கி
முதுகுச் சுமையுடன்
அவன் முன் நடந்தான்
மரங்களின் கீழே
மடியில் வளர்த்திய
துவக்குடன்
ரொட்டியைச் சுவைத்தவாறு
வீரர்கள் இருந்தனர்....

மிக மெதுவாக
வானொலிக் கருவி
வழங்கிய மெல்லிசை
நின்றது.......

சிறிது நீண்ட மௌனம் ......................................................................

ஹனோய் வானொலி
கம்மிய குரலில்
ஒலிபரப்பியது...


"ஹோசிமின் இறந்தார்..................."
.......
........
....................
.....................................
ரொட்டித் துண்டுகள் மண்ணில் வீழ்ந்தன...
...........
........
...
..
நிசப்தமான மரங்களின் நிழலில்
மௌன அஞ்சலி நீண்டு வளர்ந்தது....

உன் நரம்புகளில் ஓடிய உணர்வின்
சிறுதுளி எனினும் சேர்க்க எம் குருதியில்...

"இன்னும் இன்னும் இழக்கிலோம் எங்கள்
மண்ணிலே சிறிய மணலையும் நாங்கள்...."

கொமாண்டர் அடங்கிய குரலில் கூறினான்

காட்டுப் பறவைகள் கத்திப் பறந்தன
மீண்டும் வேட்டை விமானங்கள் இரைந்தன
அடர்ந்த காட்டின் மரங்களின் அடியில்
விசைப் புகைக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன......

பதுங்கி இருந்த படையினர் கரங்களில்
மெசின் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கின
ஓங்கி வளர்ந்த உயரமான
மூங்கில் புதர்கள் மூடிய இருளில்
மீண்டும் விமானம் வீழ்ந்து நொறுங்கின......."


கருத்துகள்

 1. கண்களில் காட்சியை விரிவுப்படுத்தும் கவிதை.. :(

  பதிலளிநீக்கு
 2. சொன்னாற்போல் வந்து வந்து வருத்தும் வரிகள். நன்றி தியா பகிர்ந்தமைக்கு.

  பதிலளிநீக்கு
 3. சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை தியா.

  பதிலளிநீக்கு
 4. போர்ச்சூழலை அழகாக படம் பிடித்திருக்கிறது கவிதை வரிகள்..

  பகிர்ந்தமைக்கு நன்றி தியா

  பதிலளிநீக்கு
 5. படம் பிடித்து காட்டும் கவிதை..நன்றிங்க தியா...

  பதிலளிநீக்கு
 6. நல்ல கவிதை.
  பகிர்வுக்கு நன்றி நண்பரே !

  பதிலளிநீக்கு
 7. நகத்தை கடித்துக்கொண்டு ஒரு போர் காட்சியை பார்த்த பாதிப்பு ...

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு கவிதையை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தியா

  பதிலளிநீக்கு
 9. அருமை தியா..! பகிர்வுக்கு நன்றி...:)..

  பதிலளிநீக்கு
 10. காயத்ரி மகாதேவன்கூறியது...
  மிக்க நன்றி...

  //
  நன்றி காயத்ரி மகாதேவன்

  பதிலளிநீக்கு
 11. வினோத்கெளதம் கூறியது...
  கண்களில் காட்சியை விரிவுப்படுத்தும் கவிதை.. :(

  //

  உண்மைதான் நண்பரே நான் படித்ததும் பிரமித்துப்போனேன்.

  பதிலளிநீக்கு
 12. வெற்றி கூறியது...
  அருமை!

  //
  நன்றி வெற்றி

  பதிலளிநீக்கு
 13. வெற்றி கூறியது...
  அருமை!

  //
  நன்றி வெற்றி

  பதிலளிநீக்கு
 14. வானம்பாடிகள் கூறியது...
  சொன்னாற்போல் வந்து வந்து வருத்தும் வரிகள். நன்றி தியா பகிர்ந்தமைக்கு.

  //
  ஆமாம் வானம்பாடிகள் முன்போல நேரம் கிடைக்குதில்லை என்ன செய்வது.முடிந்தவரை வருகிறேன். ஆனால் நான் உங்கள் அனைவரினதும் ஆக்கங்களைப் படிக்கிறேன் பதில் தரத்தான் நேரம் கிடைப்பது குறைவு. உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 15. சுசி கூறியது...
  சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை தியா.

  //

  அப்படித்தான் நானும் படித்ததும் நினைத்து இங்கு பதிந்து விட்டேன்.

  நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 16. ஆரூரன் விசுவநாதன்கூறியது...
  போர்ச்சூழலை அழகாக படம் பிடித்திருக்கிறது கவிதை வரிகள்..

  பகிர்ந்தமைக்கு நன்றி தியா

  //

  நினைத்தும் பார்க்கமுடியாத வர்ணிப்பு.
  ஆரூரன் விசுவநாதன் உங்களின் பதிலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 17. புலவன் புலிகேசி கூறியது...
  படம் பிடித்து காட்டும் கவிதை..நன்றிங்க தியா...  //  நன்றி புலவன் புலிகேசி

  பதிலளிநீக்கு
 18. எம்.ரிஷான் ஷெரீப் கூறியது...
  நல்ல கவிதை.
  பகிர்வுக்கு நன்றி நண்பரே !  நன்றி எம்.ரிஷான் ஷெரீப் .

  பதிலளிநீக்கு
 19. பலா பட்டறை கூறியது...
  நகத்தை கடித்துக்கொண்டு ஒரு போர் காட்சியை பார்த்த பாதிப்பு

  //

  ஆமாம் பலா பட்டறை இது கவிதை என்பதை விட ஒரு காவியம் எனலாம்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 20. D.R.Ashok கூறியது...
  :)

  //

  நன்றி D.R.Ashok

  பதிலளிநீக்கு
 21. //
  ஸ்ரீராம்
  நல்ல கவிதை.

  //
  நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 22. கலகலப்ரியா கூறியது...
  அருமை தியா..! பகிர்வுக்கு நன்றி...:)..

  //

  நன்றி கலகலப்ரியா

  பதிலளிநீக்கு
 23. சே.குமார் கூறியது...
  அருமை!

  //  நன்றிங்க

  பதிலளிநீக்கு
 24. ஹேமா கூறியது...
  நல்லதொரு கவிதை தியா.

  //

  நன்றி ஹேமா

  பதிலளிநீக்கு
 25. எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
  http://kondralkatru.blogspot.com

  அன்பின் ராஜன் ராதாமணாளன்.

  பதிலளிநீக்கு
 26. \\வந்து வந்து வருத்தும் வரிகள்\\

  உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 27. மிகவும் வலியான வரிகள்...
  ....உங்களின் பகிர்வுக்கு என் நன்றிகள்...மற்றும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 28. வருத்தப் படவைக்கும் வார்த்தைகள் பகிர்வுக்கு நன்றி தியா

  பதிலளிநீக்கு
 29. மனதை நெகிழவைத்த வரிகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தியா..

  நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்
  http://fmalikka.blogspot.com

  பதிலளிநீக்கு
 30. பார்த்துக்,கேட்டுப்,படித்து
  பைத்தியம் வந்ததே தவிர...!!
  வைத்தியம் கிடைக்கவில்லை!!

  அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது
  அரிது என்று ஔவ்வை பாடினார்

  இன்று...கொடிது கொடிது மானிடராய்ப்
  பிறப்பது கொடிது என்று பாடினால் நன்றாய்
  இருக்கும்.
  வலியான வரிகள்,பழகிவிட்டன!!நன்றி

  பதிலளிநீக்கு
 31. rajan RADHAMANALAN

  அம்பிகா

  கமலேஷ்

  thenammailakshmanan

  மலிக்கா

  கலா  உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 32. நல்ல பகிர்வு...நன்றி தியா...

  பதிலளிநீக்கு
 33. அழகான வரிகள். எங்கள் தேசத்தையும் நினைவூட்டுகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்