இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துணை

படம்
இ ந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத அதே தோற்றம்.  உடைய மாற்றிய பின் எல்லா உடுப்புக்களையும் வோசரில் தோய்க்கப் போட்டு விட்டுத் திரும்பவும் கைகளைக் கழுவினாள். பால் விட்டு நிறையச் சாயம் போட்டு ஒரு தேத்தண்ணி ஊத்திக் கொண்டு பொட்டுக் கடலை டப்பாவுடன் பாடியோவுக்குப் போனாள்.  O/L முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தவளை சரியாக இருபத்து வருடங்களுக்கு முதல் நல்ல

அழகிய ஐரோப்பா - 8

படம்
அழகோ அழகு மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகி இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளம் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி.  தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மினிஸ்டர் பிரிஜ் என்ற இந்தப் பாலம்.  லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான பாலங்களில் இதுவும் ஒன்று. பிரித்தானிய பார்லிமென்ட், குயின் எலிசபெத் ஹால் என முக்கியமான இடங்களின் மையப் பகுதியாக இது உள்ளது.  இங்கிருந்து லண்டன் பிரிஜ் போவதற்கு பல வழிகள் உள்ளன நாங்கள் கப்பலில் போவதென முடிவெடுத்தோம்.  அதைப் படகென்பதா கப்பல் என்பதா என்பதில் எனக்கு சிறு குழப்பம். படகுகளை விடச் சற்று பெரியதாகவும் கப்பலை விட சின்னதாகவும் கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பயணத்துக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெரிய படகு அது…  படகின் மேல் தளத்தில் இயல்பாக நின்று கொண்டும் உக்கார்ந்து கொண்டும் பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அவ்வப்போது நீச்சல் உடையணிந்த சிலர் விசை