ஜனவரி 19, 2012

என் தேவதை

உன் இருண்ட முடியும் 
நீண்ட கூரிய மூக்கும் 
என்னைக் குஷிப்படுத்தும் 
அழகிய இரு சாதனங்கள் 
நான் உனக்கு ஒரு 
செவ்விதழ் ரோஜா கொடுத்துப் 
பின் ஒரு சிறு 
முத்தமிட்ட பின்னர் 
உன் காந்தக் கண்கள் 
இயக்கம் பெற்றன.

அது அமைதியான 
என் மனதில் 
ஒரு சலனத்தை 
விதைத்துச் சென்றது.

மென்மையான உன் குரலும் 
செவ்விதழில் புன்னகையும் 
நீண்ட நேரம் நிலைக்கவில்லை
நான் உட்கார்ந்தேன் 
உன்னுடன் 
நிரந்தர சொல்லாடலுக்காக

அதற்கான முயற்சியில்
தோற்றுப் போய் நான் 
மீண்டும் வேதாளமாய் நீ
எட்ட நின்று ஹாய் சொல்லி 
பின் ஹலோ சொல்லி 
கையசைத்துப் பிரிந்தாய் 
அந்த அற்புதக் கனவில் 
மிதந்தபடி இன்றும் நான்