என் தேவதை

உன் இருண்ட முடியும் 
நீண்ட கூரிய மூக்கும் 
என்னைக் குஷிப்படுத்தும் 
அழகிய இரு சாதனங்கள் 
நான் உனக்கு ஒரு 
செவ்விதழ் ரோஜா கொடுத்துப் 
பின் ஒரு சிறு 
முத்தமிட்ட பின்னர் 
உன் காந்தக் கண்கள் 
இயக்கம் பெற்றன.

அது அமைதியான 
என் மனதில் 
ஒரு சலனத்தை 
விதைத்துச் சென்றது.

மென்மையான உன் குரலும் 
செவ்விதழில் புன்னகையும் 
நீண்ட நேரம் நிலைக்கவில்லை
நான் உட்கார்ந்தேன் 
உன்னுடன் 
நிரந்தர சொல்லாடலுக்காக

அதற்கான முயற்சியில்
தோற்றுப் போய் நான் 
மீண்டும் வேதாளமாய் நீ
எட்ட நின்று ஹாய் சொல்லி 
பின் ஹலோ சொல்லி 
கையசைத்துப் பிரிந்தாய் 
அந்த அற்புதக் கனவில் 
மிதந்தபடி இன்றும் நான் 



கருத்துகள்

  1. நீண்ட நாள் கழித்து வருகிறேன்...

    எப்போதும் போல் கவிதை மிக அருமை...ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. இருவருக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்