செப்டம்பர் 22, 2010

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

காண்டீபன் அ
க்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இன்று என் வீட்டுக்குள்
மூன்றாம் பிறையும்

முழு நிலவும்

ஒன்றாகக் குடி கொண்டு

வாழ்த்த வந்த நன்நாள்....


வருடத்தில் வருகின்ற

நாட்களில் எல்லாம்

வசந்தத்தைத் தருகின்ற

பொன் நாள் இது.....


செப்ரெம்பர் இறுதி நாளின்

இரவு மட்டும்
நீள்வது ஏனோ?
ஒக்டோபர் ஒன்று வந்தால்
இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...

என் காதல் தேசத்து

புன்னகையே

எங்கள் வீட்டின்

முழு நிலவே

உனக்கு இன்று

பிறந்தநாள் என்று

காலையில் இருந்தே
பூப் பறிக்கிறேன்
அர்ச்சிப்பதற்காக....


உன் பிறந்தநாள் பரிசாக

கடவுள்
தந்த
எங்கள் அன்புச்

செல்வத்துக்கும்
உனக்கும்
ஒரே நாளில்
விழா எடுக்கப் பிறந்த

அதிஷ்டக்காரன்

நான் என்பதால்

ஒரு கர்வம் எனக்குள்...


என்ன ஒரு வித்தியாசம்
உனக்கு முப்பத்தொன்று
மகளுக்கு மூன்று


என் அன்பு மனைவியே

பத்தாண்டுகளுக்கு முன்

உன்னைச் சந்தித்து

நான் சொன்ன

அதே மகிழ்வுடன்

அதே புன்னகையுடன்
இன்றும் சொல்கிறேன்
என்றும் மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...



எங்கள் வீட்டு
வளர் பிறையே

இன்றுடன்

அகவை
மூன்றில்
கால்
பதிக்கும்
கற்கண்டே...

கரும்பே...

உன் தாய்க்கு

இறைவன் தந்த

பிறந்தநாள் பரிசே

எங்கள் வாழ்வில்

ஒளியேற்றி

முழுமை தர
வந்த முத்தே

கலைகள் பல பெற்று

துறைகள் பல கண்டு

நிதம் வாழ்வில்

மகிழ்ச்சியுடன்

என்றும் வாழ்க
நீ பல்லாண்டு
நலமுடனே.....


இனிதே வாழ்த்துகிறேன். இரா. காண்டீபன் ( கணவன் - அப்பா )
-தியா -





செப்டம்பர் 18, 2010

அன்பே என் உயிரே...

















அன்பே
- என்

உயிர்க் காதலனே


உன்னை மட்டும்

நிறைத்து


என் நெஞ்சு மகிழ்கிறது.....


என் உயிரே

உன்னை - என்

நெஞ்சில் நான்
சுமப்பதால்

சூடாக உண்ண - குடிக்க

மறுக்கிறது என் இதயம்


நீயோ


வெப்பம் தாங்க மாட்டாய்

என்பதை

என்னைவிட - என்

இதயம் அறியுமோ !!!



"நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து"
- திருக்குறள் 1128 -






செப்டம்பர் 10, 2010

பிள்ளையாரின் கவலை....



















பிள்ளையாரின்
கவலை


பிறந்த அன்றே
தூக்கிக் கடலில்

போடுகிறீர்களே

பாவிகளே
- நான்
என்ன பாவம் செய்தேன்...


பக்தனின் கவலை

விக்கினம் தீர்க்கும்
விநாயகனே - உன்னை

கடலில் கரைக்கும் வரை
நான் படும்
விக்கினங்களைத்

தீர்த்தருள்வாயாக......


செப்டம்பர் 06, 2010

தடுமாறும் இதயம்



அழகு தேவதையே

காதில் தொங்கும் உன்

காதணிகளின் சுமையை

தூக்கி நடப்பது

அழகோ அழகு

அதுசரி பெண்ணே

நீ

தெய்வ மங்கையா?

அல்லது அழகிய மயிலா?

அதுவுமில்லையேனில்

மானிடப் பெண்ணா?

உன்னை

யாரென்று

சொல்ல முடியாதபடி

தடுமாறுகிறது

என் நெஞ்சம்.




"அணங்கு கொல்ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் மாளும் என் நெஞ்சு"


-திருக்குறள்-

செப்டம்பர் 02, 2010