ஜூன் 02, 2010

இயலாமைகள்

நடை பாதையை மறித்து
மூக்கை நீட்டும்
கடைகளின் முன் கூடாரங்கள்....

வீதிக் கடவைகளில்
நடக்கும் போது குறுக்கறுக்கும்
விரைவுந்துகள்....

பேருந்தில் மூச்சடக்கி
கால்வைக்க இடம் தேடும் நான்...

மல்லுக்கட்டி நடத்துனர் மீது
சண்டை போடும்
ஒரு கூட்டம்....

மாற்றுத் திறனாளிகள்
மற்றும்
முதியோர் இருக்கைகளில்
காதில் மாட்டிக்
கைப்பேசியில் இசை
கேட்கும் இளசுகள்....

தள்ளாடும் வயதிலே
தன் குடும்ப வாழ்வுக்காய்
உழைக்க புறப்பட்ட
பெரிசுகள் நிலையாக
ஆனால்
பேருந்து மட்டும் நகரும்....

தின வாழ்க்கை வாழ்வதற்கு
காலையிலும் மாலையிலும்
கொளத்தூரும் - கோடம்பாக்கமும்
என் வீட்டுத் திண்ணைகளாகும்....
இப்படியே
நாள்தோறும் நம் பிளைப்பு
கணிணியிலும்
வழிச் செல்லும்
பாதையிலும் கழிகிறது........