இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை மனசு

படம்
குழந்தை மனசு Filed in  இலக்கியம் ,  கதை by  admin on April 16, 2013 •  0 Comments விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள்.   “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்”   “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…”   “ரெண்டு நாளோ… அப்ப  இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…”   நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள்.   இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்திக் கொண்டாள். ஊருக்குப் போகும்போது எடுத்துச் செல்வதற்கென நிறைய விளையாட்டுப் பொருட்களையும் மற்றும் தன் விருப்பத்துக்குரிய சிலவற்றையும் பத்திரப் படுத்தித் தன்னுடனே வைத்திருந்தாள்.   விமானம் புறப்படுவதற்கு இன்னும் சி

அரசியலில் இதெல்லாம் சகசமப்பா…

படம்
முடிந்தால் கட்டு கட்டினால் இடி முடிந்தவரை மௌனமாயிரு உரத்துக் குரல்கொடு ஆளுறக்கம் போல் நடி வீழும்வரை பொறுமை கொள் வீழ்ந்தபின் உரக்கக் கத்து அன்பாய்ப் பேசு வாய்ச்சொல்லை நஞ்சாய்க் கக்கு அன்பாய் வருடு முதுகில் குத்து நல்லவன்போல் இரு வேடம் போடு பழிவாங்கப் பழகு பாவம் பண்ணத் துணி காவலனாய் நடி பழிக்கு அஞ்சாதே நண்பனைப் பகை பகைவனைத் துணைசேர் காலப்போக்கில் நீயும் நாட்டை ஆள்வாய் -தியா- http://www.panippookkal.com/ithazh/