இடுகைகள்

அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எறிகணை நாவல் தொடர்பான வாசிப்பனுபவம் - குலசிங்கம் வசீகரன்

படம்

நீ கொன்ற எதிரி நான் தான் தோழா

படம்
எனது கவிதை நூலான "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" - கவிதைப் புத்தகம் ஜீவநதியின் 282 ஆவது வெளியீடாக வரவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! கவிதைகள்: தியா - காண்டீபன் வெளியீடு: ஜீவநதி, பரணீதரன் அட்டைப்படம்: ஓவியர் புகழேந்தி வாழ்த்துரை: பண்டிதர்..கவிஞர்.. ச.வே.பஞ்சாட்சரம் அணிந்துரை: கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வன்

நீ கொன்ற எதிரி நான்தான் தோழா

படம்
"நீ கொன்ற எதிரி நான்தான் தோழா" மேலதிக தகவல்கள் விரைவில்... #நீகொன்றஎதிரிநான்தான்தோழா   #கவிதை   #ஜூலை  #2023  #தியா

எண்மர் என் காதலர்கள்

புத்தகம் என் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்... மடிக்கணிணி என் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை இணையம் உலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம் பாதணி மிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை. கைப்பேசி சட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன். பேனா என்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு. கடிகாரம் நேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன். கண்ணாடி என் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.

நூல் அறிமுகம்

படம்
மூன்று வருடங்களின் பின்னர் இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் முல்லைமணி வே .சுப்பரமணியம் ஐயாவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அது வவுனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் நடந்தது. மூன்று வருடங்களின் பின் ஒரு இனிமையான புத்தக வெளியீட்டு விழா. அதுவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியிடும் மற்றும் அறிமுகப் படுத்தும் அரிய காட்சி. வெளியீடு - மித்ர வெளியீடு சங்கானைச் சண்டியன் , மக்கள்...மக்களால்...மக்களுக்காக... , யாவும் கற்பனை அல்ல - இவை மூன்றும் டென்மார்க்கில் வசித்துவரும் வி.ஜீவகுமாரன் எழுதியவை. மகாவம்ச என்ற நூலைத் தமிழில் எஸ் .பொ. எழுதியிருந்தார். வெளியீட்டு நிகழ்வு நடந்த இடம் - அண்ணா சிற்றரங்கம் , கன்னிமரா நூல் நிலையம் , சென்னை. நேரம் - மாலை நான்கு மணிக்கு மேல். (31.10.2009) தலைமை - பேராசிரியர் ஔவை நடராசன் ஆசியுரைகள் - இரா . நல்லகண்ணு, இந்திரா பார்த்தசாரதி, வி.சி.குகநாதன் தொகுப்பாளர் - அப்துல் ஜாபர் வெளியிட்டவர்கள் - தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் . த.செயராமன...