இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

படம்
அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... கடந்த வருட சோகங்களை மறப்போம்... நல்லவைகளை நாளும் நினைப்போம்... வருகின்ற புத்தாண்டை இனிதே வரவேற்று உறவுகளுடன் கூடியிருந்து மகிழ்ந்திருப்போம்... அன்புடன்... - தியா -

விழி ... நிமிர்...நட...

படம்
"உப்பு மடச்சந்தி" 'ஹேமா' வின் இந்தப் படத்துக்கான கவிவரிகள் இவை. விளையாட்டுப் பொம்மையை கைப்பிடித்த சிறு பிஞ்சே உன் இள வயதில் ஏனம்மா இந்தத் தலைவிரி கோலம்??? உன் கைப்பிடியின் உறுதியில் தெரிகிறது உன் ஓர்மம். கண்ணே உன் உறவுகள் எங்கேயம்மா??? ஓஓஓஓஓஓ!!!! நீ நிற்கும் வீதியிலே படிந்திருப்பது உன் உறவுகளின் உதிரம் படிந்த கறைதானோ??? அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம் அதற்குமுன் விழித்துவிடு கண்மணியே... நிமிர்த்திவிடு குனிந்ததலை.

பாலன் பிறப்பு வாழ்த்துகள்

படம்

இன்றுடன் ஏழுமாசம்...

படம்
அழகான அந்தக் குருவிக்கூடு கலைபட்டுச் சிதைந்துபோய் இன்றுடன் ஏழுமாசம் ... பொட்டின்றிப் பூ வின்றி ஆன உடையின்றி முகத்தில் எதுவித சலனமுமின்றி புகமறுக்கும் உணவை சுவை மறந்து வலிந்து திணித்துண்டு வயிறு வளர்த்துக் காலம் கழிகிறது ... அவள் கணவன் மறைந்து இன்றுடன் ஏழுமாசம் அழகிய வதனம் களையிழந்து ஒளியிழந்து - அவள் சிரிக்க மறந்து கவலையில் மூழ்கித் தனக்குள் தன்னை மறைத்தபடி தனிமையில் கல்லாய் இறுகி இன்றுடன் ஏழுமாசம் ... அதன்பின் முதல் முறையாக அவள் இன்று சிரிக்கக் கண்டேன் . இன்று பிறந்த அவள் குழந்தை " அவன் மழலைச் சிரிப்பு கன்னக்குழி பெரிய முழி அத்தனையும் அவன் அப்பன் போலவே ." பிறர் சொல்லக் கேட்டு மீண்டும் அவள் சிரிக்கிறாள் .

நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்

இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன் வந்தான் என்ற ...

எண்மர் என் காதலர்கள்

புத்தகம் என் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்... மடிக்கணிணி என் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை இணையம் உலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம் பாதணி மிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை. கைப்பேசி சட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன். பேனா என்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு. கடிகாரம் நேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன். கண்ணாடி என் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.

இன்றுடன் நூறு சொந்தங்கள்

படம்
இன்றுடன் நூறு சொந்தங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் மிகச் சந்தோசமாக இருக்கிறேன். என்னைப் பின் தொடரும் சொந்தங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து நல்ல பின்னூக்கங்கள் எழுதி என்னை ஊக்குவித்ததுடன் எனது வளர்ச்சியில் பங்கெடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி கூறுவதுடன் இனிவரும் நாட்களிலும் "தியாவின் பேனா"வில் இருந்து வரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பின்னூக்கங்களை எதிர்பார்த்து மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன். அன்புடன்... -தியா- பின்பற்றுபவர்கள் ( 101 ) பலா பட்டறை sarathy ரசிக்கும் சீமாட்டி guna சிங்கக்குட்டி நா.முத்துக்குமார் தமிழன் kovai sakthi Gobenath Muthusamy viswam malarvizhi காவிரிக்கரையோன் MJV இராகவன் நைஜிரியா Shanthru kalyani suresh பித்தனின் வாக்கு ஜெகநாதன் pavi நசரேயன் ரெத்தினசபாபதி வன்னி தகவல் தொழில்நுட்பம் Surya Kannan க.பாலாசி vasanth kumar அகல்விளக்கு கதிர் - ஈரோடு ஈழத்து நிலவு susi தேவன் மாயம் கவிக்கிழவன் நட்புடன் ஜமால் sakthi Vidhoosh nige k தியாவின் பேனா nila mukilan maha Sujatha Jr Muthamizh Vendh...