சித்திரைத் தமிழ் மகள்
சிலிர்ப்புடன் வருகின்றாள்
நித்திரை விட்டு
விரைவினில்
எழுந்திடுவோம்...
மருத்துநீர் தலை தடவி
வெந்நீரில் குளித்திடுவோம்
நெற்றியில் நீறணிந்து
நெறிப்படி வணங்கிடுவோம்
பெரியோர் தாள் பணிந்து
கையுறை பெற்றிடுவோம்...
சில்லறை வாங்கி
உண்டியல் சேர்த்து
உறவுகள் கூடி
நிறைவுடன் மகிழ்ந்து
புத்துடை அணிய
நித்திரை விட்டு -நாம்
விரைவாக எழுவோம்....
அன்றேல்...
நித்திரையின்றி
விடியும்வரை விழித்திருப்போம்...
சித்திரைத் தமிழ்மகள்
சிலிர்ப்புடன் வருகிறாள்
வாருங்கள் நாம்
சோகங்கள் மறந்து
சுமைகளை ஒருகணம்
இறக்கி
மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
வாழ்த்துகள் தியா.
பதிலளிநீக்குவருக தியா..
பதிலளிநீக்குகைக் காயம் முற்றிலும் குணமாகி விட்டதுதானே...சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்...
சோகங்கள் மறந்து சுமைகளை இறக்கி..............முடியாது தான் இருபினும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்........புதுவருடத்தை ...நினை வூட்டும்........உங்கள் பதிவு அழகு
பதிலளிநீக்குபுத்தாண்டோடு தியாவையும் வரவேற்கிறோம். வாழ்த்துகள் தியா. காயம் முற்றிலும் ஆறியதா?
பதிலளிநீக்குமுற்றிலும் குணமடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் தியா....
எப்படி இருக்கிறீர்கள், தியா மேடம்?
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கை சரியாகிவிட்டதா தியா...?
பதிலளிநீக்குநலம்தானே...
சித்திரையை வரவேற்க்க முத்திரைக் கவி...
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
சித்திரை / தமிழ்வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்
ஹெலோ தள்ளுங்க
பதிலளிநீக்குதள்ளுங்க வழி விடுங்க
தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க
தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க
தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க .
ஓகே வாழ்த்துக்கள்
நன்றி வாழ்க வளமுடன்
கவிதையுடன்
களத்தில் குதித்து இருக்கும்
தியாவிற்கு
வாழ்த்துக்களை
எங்கள் சங்கம்
தெரிவித்து கொள்கிறது
நன்றி
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
புது வருடத்தில் புது தெம்புடன் வருகின்றீர்கள். தியா நேற்றுத்தான் எனக்கு உங்களின் நினைவு வந்ததது. அட கையில் அடிபட்டவர் எப்படி உள்ளார் என விசாரிக்காமல் விட்டு விட்டேமே என்று நினைத்து வருத்தப்பட்டேன். இன்று வந்ததும் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விசாரிக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் என்ன ஒரு கே இன்சிடேண்ட் நீங்கள் பின்னூட்டம் போட்டு உள்ளீர்கள். மிக்க நன்றி. இடையில் மறந்தமைக்கு மன்னிக்கவும். இப்ப கை எவ்வாறு உள்ளது?. அலுவலக பணிகளுக்கு செல்கின்றீரா? நலம் விழைய ஆவல். தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநலம் பெற்று திரும்பிய உங்களுக்கு
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை தியா அண்ணா....! தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
மிகவும் அழகாக இருக்கு இந்நாள்.
பதிலளிநீக்குஉங்கள் உடல் நலம் தேறியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் அருமையான கவிதைகள் தர வாங்க வாங்க என்று தமிழ் பதிவர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
:) பேனாவால் இன்னும் பேசுங்கள்.
ஹாய்.. தியா.. நீண்ட நாள் கழித்து புது எழுத்துக்களுடன் வந்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குநலமா?
உங்கள் கவிவரிகள்….
பதிலளிநீக்குமீட்டெடுக்க முடியாத
பல வருடங்களுக்கு முன்
நடந்தவைகளை நினைவூட்டின
பெற்ற நலம்
பிரியாதிருக்க
என் வேண்டுதலுடன்....
தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துகள் தியா!
காயங்கள் என்பதே ஆறுவதற்கு தானே? ஆறாத ரணங்கள் கூட சித்திரையில் மாறி உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுது பதிவு எப்பங்க?
பதிலளிநீக்குkavithai nalla irukkunga!
பதிலளிநீக்குthia epdierukenga
பதிலளிநீக்குnalama erukengala
enna aituru padivugal varavillai
kavalikolkiren
nalamaieruka priathikren
ungalkum eniya anniyar thina valthukal
pasathodu oru
vasagan
surya