இது இப்போது பிசாசுகளின் காலம்




















பழைய கவிதைப்

புத்தகங்களைப்

பரப்பியபடி

படுத்துறங்கும்

பிசாசுகள்...


இருளில் இருந்து

மீள மறுத்து

முட்டி மோதுகிறது

இடர்


சமர் நடந்த தேசத்தின்

சிதைவுகளில் இருந்து

மீளமுடியாமல்

திண்டாடுகிறது

கந்தக வாடை


நியூட்டனின்

மூன்றாம் விதியை

நிலத்துக்கும்

வானுக்கும்

கற்பிதம் செய்யும்

ராணுவ முலாம்

பூசப்பட்ட

போதி மரங்கள்


திணிக்கப் படுவதற்காய்

இலவசமாக்கப்பட்ட

நிர்வாண பௌத்தம்

கக்கிய கட்டிடங்கள்

எம் மண்ணில்




கருத்துகள்

  1. புதுமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பிசாசுகள் கொட்டம் தீர்ந்து தேவதைகள் குடிபுகும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!

    பதிலளிநீக்கு
  3. பேசவியலாப் புத்தனும் அழுதபடிதான் தியா.சாத்தான்களை,பிசாசுகளை வளரவிட்டவர்களில்தானே குற்றம் !

    பதிலளிநீக்கு
  4. அங்க இனி என்ன நடக்கப் போகுதோன்னு எப்போதும் ஒரு பயம் வருகுது தியா :((((

    பதிலளிநீக்கு
  5. எஸ்.கே சொன்னது…

    புதுமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    //

    என்ன எஸ் கே என்ன புதுமை
    எமக்கு இதுவே வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  6. Balaji saravana சொன்னது…

    பிசாசுகள் கொட்டம் தீர்ந்து தேவதைகள் குடிபுகும் நாள் விரைவில் வருமென்று நம்புவோமாக!

    //

    உங்களின் கருத்துக்கு நன்றி பாலாஜி சரவணா.

    பதிலளிநீக்கு
  7. ஹேமா சொன்னது…

    பேசவியலாப் புத்தனும் அழுதபடிதான் தியா.சாத்தான்களை,பிசாசுகளை வளரவிட்டவர்களில்தானே குற்றம் !

    //

    அதென்னமோ உண்மைதான் ஹேமா

    பதிலளிநீக்கு
  8. தமிழ் உதயம் சொன்னது…

    ஈழத்தின் உண்மையை உரைத்த கவிதை.

    //

    நன்றி தமிழ் உதயம்

    பதிலளிநீக்கு
  9. சுசி சொன்னது…

    அங்க இனி என்ன நடக்கப் போகுதோன்னு எப்போதும் ஒரு பயம் வருகுது தியா :((((

    //

    என்னத்தை சொல்ல
    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  10. Chitra சொன்னது…

    வாசித்து விட்டு, I am speechless.

    //

    அப்படியா...???

    பதிலளிநீக்கு
  11. மன்னியுங்கள். என் வார்த்தை உங்களை காயப்படுத்தி இருந்தால். உங்கள் கவிதை அமைப்பு எனக்கு புதுமையாக தெரிந்தது அதனால் அப்படி சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  12. எஸ்.கே சொன்னது…

    மன்னியுங்கள். என் வார்த்தை உங்களை காயப்படுத்தி இருந்தால். உங்கள் கவிதை அமைப்பு எனக்கு புதுமையாக தெரிந்தது அதனால் அப்படி சொன்னேன்.

    //

    ஐயோ நண்பா
    நான்
    கோபப்படவில்லை
    தயவுசெய்து தப்பாக எடுக்க வேண்டாம்
    உங்களின் கருத்தை தொடர்ந்து சொல்லுங்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. //சமர் நடந்த தேசத்தின்
    சிதைவுகளில் இருந்து
    மீளமுடியாமல்
    திண்டாடுகிறது
    கந்தக வாடை//

    அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. //சமர் நடந்த தேசத்தின்
    சிதைவுகளில் இருந்து
    மீளமுடியாமல்
    திண்டாடுகிறது
    கந்தக வாடை//

    எனக்கும் இந்த வரிகள்தான் மனசை பிசைகிறது.சமாதானங்களும், ஆறுதல்களும் , அனுதாபங்களும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் தங்கள் காதுகளுக்கு இனிமையளிக்கும் சொற்கள் இறையருளால் விரைவில் கிட்ட பிரார்த்தனை தவிர வேறு வழி எனக்கில்லை.

    பதிலளிநீக்கு
  15. D.R.Ashok சொன்னது…

    நல்லா வந்திருக்கு தியா

    //

    நன்றி

    பதிலளிநீக்கு
  16. இந்திரா சொன்னது…

    //சமர் நடந்த தேசத்தின்
    சிதைவுகளில் இருந்து
    மீளமுடியாமல்
    திண்டாடுகிறது
    கந்தக வாடை//

    அருமையான வரிகள்.


    //

    நன்றி இந்திரா

    பதிலளிநீக்கு
  17. சே.குமார் சொன்னது…

    நல்லாயிருக்கு.

    //

    நன்றி சே.குமார்

    பதிலளிநீக்கு
  18. நிலா மகள் சொன்னது…

    //சமர் நடந்த தேசத்தின்
    சிதைவுகளில் இருந்து
    மீளமுடியாமல்
    திண்டாடுகிறது
    கந்தக வாடை//

    எனக்கும் இந்த வரிகள்தான் மனசை பிசைகிறது.சமாதானங்களும், ஆறுதல்களும் , அனுதாபங்களும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிருக்கும் தங்கள் காதுகளுக்கு இனிமையளிக்கும் சொற்கள் இறையருளால் விரைவில் கிட்ட பிரார்த்தனை தவிர வேறு வழி எனக்கில்லை.

    //

    உங்களின் பிரார்த்தனை
    வெற்றிபெறட்டும்

    பதிலளிநீக்கு
  19. //சமர் நடந்த தேசத்தின்
    சிதைவுகளில் இருந்து
    மீளமுடியாமல்
    திண்டாடுகிறது
    கந்தக வாடை//

    மனதை என்னவோ செய்கிறது வார்த்தை.
    கவிதைக்குள் வலி குடியிருப்பதுபோல்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)