பசுமை நிறைந்த நினைவுகளே...








ஒளிக் கதிர்கள் தெளிவற்ற

மாலை நேரத்துச் சூரியனோடு

கைகோர்த்தபடி

என் புழுதித் தெருவில்

இறங்கி நடக்கிறேன்

வெற்றுக் கால்களோடு….


நீண்ட நெருமுனை

வளைவில்

முந்திச் சென்றான்

என் பால்ய கால நண்பன்...

அவன் இப்போது உயிருடன் இல்லை...











சுற்றிவளைக்கப்பட்ட

சிறு பகுதியில் இருந்து

தப்பிப் பிளைத்து தடுமாறி

வரும்போது

ஆமி அடித்த செல்லில்

உயிர்விட்டானாம்

என்று

சொல்லக் கேள்வி....


அவனும் நானும் கூடி

வயல் விதைப்போம்

பள்ளி செல்வோம்

பந்தடிப்போம்

மாடு மேய்ப்போம்

குளத்து வானில்

குளித்து மகிழ்வோம்.....









அது அந்தக் காலம்

இப்போது

நான்

முழுவதுமாக மாறிவிட்டதாக

எல்லோரும் சொல்கிறார்கள்

நான் யாருடனும்

பேசுவதில்லையாம்

சிரிப்பதில்லையாம்...

பைத்தியம் என்றும் சிலர்

பழியுரைக்கிறார்கள்....


பாவம் அவர்கள்.....

அவர்களுக்குத் தெரியாது

நான் இப்போதும்

என் உறவுகளுடன்

நண்பர்களுடன்

கனவில் அடிக்கடி

சிரித்துப் பேசுவது......



கருத்துகள்

  1. மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடு, நன்று.

    பதிலளிநீக்கு
  2. பசுமை நிறைந்த நினைவுகள் வலியுடன் !!!!

    பதிலளிநீக்கு
  3. படங்களும் கவிதையும் நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  4. சே.குமார் சொன்னது…
    கவிதை அருமை.

    28 ஆகஸ்ட், 2010 4:33 pm


    //

    நன்றி

    பதிலளிநீக்கு
  5. சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
    மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடு, நன்று.

    28 ஆகஸ்ட், 2010 5:19 pm

    //

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. sakthi சொன்னது…
    பசுமை நிறைந்த நினைவுகள் வலியுடன் !!!!

    28 ஆகஸ்ட், 2010 7:12 pm

    //
    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் சொன்னது…
    ம்ம்ம்.

    28 ஆகஸ்ட், 2010 8:47 pm

    //

    ஏதாவது சொல்லுங்க தலைவா

    பதிலளிநீக்கு
  8. Chitra சொன்னது…
    படங்களும் கவிதையும் நல்லா இருக்குங்க.

    28 ஆகஸ்ட், 2010 9:08 pm

    //

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம். சொன்னது…
    நினைவுகளின் வலியில்...

    29 ஆகஸ்ட், 2010 4:34 pm

    //


    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. நிதர்சனம் எப்போதும் சுடும்....

    இங்கு உங்கள் பதிவில் தமிழ் சுடுகிறது...

    மிக மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்ற ஒற்றை வார்த்தை குறைவு தான், உங்களை பாராட்ட.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்