சென்னையில் சில நாள்.....

கூவம் ஆறும் அடையாறும்
சென்னையின் சொத்து
செத்த பிணங்கூடப்
பல நாளாகி அப்படி
நாறி நான் கண்டதில்லை

பிச்சைக்காரர் தெருநீளம்
நிறைந்திருப்பர்….

சைக்கோவும் பைத்தியமும்
வழியோரம் படுத்துறங்கி
ஓய்வெடுப்பர்
ஆனாலும் சிங்காரச் சென்னை
அழகானதுதான்.......

மேம்பாலங்கள் மேலே
நம் பயணம் தொடர்கிறது
அதன் கீழே பல குடும்பம்
சீவியம் நடக்கிறது....

குப்பைகளால் நிறைந்த
தெருக்கள்

நடைபாதையெல்லாம்
மூக்கை நீட்டும் கடைகள்

விதிகளை
மீறிய வாகனங்கள்
இவை எல்லாம்
சென்னையின் அடையாளங்கள்

வீதிகள் தோறும்
சேரிகளின் அணிவகுப்பு
தெருவோரம் மலிந்திருக்கும்
பூக்கடைகள்

வாய்திறந்து விரிந்திருக்கும்
கழிவுநீர் கால்வாய்கள்
ஒண்டுக்கும் ரண்டுக்கும்
வீதியெல்லாம் இலவசமாய்
விளம்பரங்கள்

பேருந்தில் நிறைந்த கூட்டம்
பழஞ்சோற்றில் ஈயாக

கட்சித் தலைவர்களை
தூக்கிச் சுமக்கும் மதில்கள்

வீதிகள் எல்லாம்
பிரச்சார முழக்கம்
கட்டவுட்டும் விளம்பரமும்
கண்கொள்ளாக் காட்சி
ஆனாலும் சிங்காரச்
சென்னை அழகானதுதான்

கருத்துகள்

  1. அழகும் அதன் பின்னே உள்ளே இருக்கும் அழுக்கும் ரசிப்பதாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா தூள் கிளப்பிட்டீங்க தியா

    பதிலளிநீக்கு
  3. இருக்கிறத வெச்சி ரசிக்கத்தான் வேணும்.:)

    பதிலளிநீக்கு
  4. கலக்கல் கவிதை...

    சென்னை என்னை போடா வெண்ணை என்கிறது :)

    பதிலளிநீக்கு
  5. கவிதை அருமை நண்பரே...

    உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்....

    பதிலளிநீக்கு
  6. சென்னை அழகை சும்மா புட்டு புட்டு வச்சிட்டிங்க.

    பதிலளிநீக்கு
  7. அருமையான சிந்தனைக் கருத்துகள் ..

    நல்லா சொல்லிருக்கீங்க .

    பதிலளிநீக்கு
  8. என்ன பண்றது...இப்புடித்தான் ரசிக்க வேண்டியிருக்கு

    பதிலளிநீக்கு
  9. அருமை தியா

    கண்முன்னே சென்னையை நிறுத்தி விட்டீர்கள்

    நன்றி தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு
  10. அழகென்று நினைத்தால்..அது அழகாத்தான்
    தோன்றும் இல்லையென்று நினைத்தால்..
    அழகுக்கு இல்லை வேலை!!

    நாற்றமோ,நறுமணமோ
    வறுமையோ,செழிப்போ
    இதுதான் என்று நம் மனதைப் பக்குவப்
    படுத்திவிட்டால்..அது தானாகப் பழகிவிடும்.
    பழக்கமுமாகிவிடும்.

    இருப்பதைச் சொல்லி...இழிவென்று சொல்லாமல்..
    அழகென்று ஒரு”கவிஞனால்”தான் பொய்யுரைக்க
    முடியும்.என்ன!! சரியா?தப்பா?தியா......!!

    பதிலளிநீக்கு
  11. உண்டு என்றால் உண்டு...இல்லை என்றால் அது இல்லை...

    பதிலளிநீக்கு
  12. ஜோதிஜி கூறியது...

    அழகும் அதன் பின்னே உள்ளே இருக்கும் அழுக்கும் ரசிப்பதாய் இருந்தது.


    //

    நன்றி ஜோதிஜி

    பதிலளிநீக்கு
  13. thenammailakshmanan கூறியது...

    ஹாஹாஹா தூள் கிளப்பிட்டீங்க தியா


    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  14. வானம்பாடிகள் கூறியது...

    இருக்கிறத வெச்சி ரசிக்கத்தான் வேணும்.:)


    //

    அது உண்மைதான் நண்பா

    ஆனால்

    இருக்கிறதா அழகாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்புத்தானே.????????????????

    பதிலளிநீக்கு
  15. PPattian : புபட்டியன் கூறியது...

    கலக்கல் கவிதை...

    சென்னை என்னை போடா வெண்ணை என்கிறது :)


    //

    ஹா .....ஹா......(சிரிப்பு வருது.......)

    சென்னைக்கு வந்து பாருங்க

    உலகில் எல்லா மொழி பேசும் மக்களும் இங்கு உள்ளனர்.

    பதிலளிநீக்கு
  16. அகல்விளக்கு கூறியது...கவிதை அருமை நண்பரே...

    உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்...

    //

    அப்படியா?
    நன்றி அகல்விளக்கு

    பதிலளிநீக்கு
  17. அக்பர் கூறியது...

    சென்னை அழகை சும்மா புட்டு புட்டு வச்சிட்டிங்க.


    //

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  18. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

    அருமையான சிந்தனைக் கருத்துகள் ..

    நல்லா சொல்லிருக்கீங்க .


    //

    நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

    பதிலளிநீக்கு
  19. புலவன் புலிகேசி கூறியது...

    என்ன பண்றது...இப்புடித்தான் ரசிக்க வேண்டியிருக்கு

    //

    ம்..........

    பதிலளிநீக்கு
  20. இன்றைய கவிதை கூறியது...

    அருமை தியா

    கண்முன்னே சென்னையை நிறுத்தி விட்டீர்கள்

    நன்றி தியா

    ஜேகே


    //


    நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  21. //நீக்கு
    பெயரில்லா கலா கூறியது...

    அழகென்று நினைத்தால்..அது அழகாத்தான்
    தோன்றும் இல்லையென்று நினைத்தால்..
    அழகுக்கு இல்லை வேலை!!

    நாற்றமோ,நறுமணமோ
    வறுமையோ,செழிப்போ
    இதுதான் என்று நம் மனதைப் பக்குவப்
    படுத்திவிட்டால்..அது தானாகப் பழகிவிடும்.
    பழக்கமுமாகிவிடும்.

    இருப்பதைச் சொல்லி...இழிவென்று சொல்லாமல்..
    அழகென்று ஒரு”கவிஞனால்”தான் பொய்யுரைக்க
    முடியும்.என்ன!! சரியா?தப்பா?தியா......!!

    //

    என்னங்க இப்பிடி சொல்லிப்புட்டிங்க
    நாட்டு நடப்பைத்தான் சொன்னேன்
    பொய் சொல்ல நான் ஒன்றும் கவிஞன் இல்லையே.
    நன்றி கலா.

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம். கூறியது...

    உண்டு என்றால் உண்டு...இல்லை என்றால் அது இல்லை...


    //

    நடக்கும் என்பார் நடக்காது ..................

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  23. என்ன செய்ய பழகிக்க வேண்டியதுதான்.... உணர்வு கொட்டிய கவிதைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. சிங்காரச்சென்னையை
    சிறப்போடு சொன்னது
    சிறப்பு. ஹா ஹா
    நான்
    சிரிக்கவில்லை சகோதரா..

    மிக அருமை தியா..

    பதிலளிநீக்கு
  25. //சைக்கோவும் பைத்தியமும்
    வழியோரம் படுத்துறங்கி
    ஓய்வெடுப்பர்… //

    ஐயோ, இது கொஞ்சம் பயமாயிருக்கே

    பதிலளிநீக்கு
  26. வஞ்சப் புகழ்ச்சி?

    நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  27. //சிங்காரச்
    சென்னை அழகானதுதான்//


    கலக்கிட்டிங்க.

    பதிலளிநீக்கு
  28. தியா! இங்கே எங்களைப் போன்ற நல்லவர்கள்(?) சிலரும் வாழ்கிறோம்கிறத விட்டுட்டீங்களே!!!

    பதிலளிநீக்கு
  29. உண்மையான நிகழ்வுகளை கவிதை நடையில் கலக்கி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  30. சி. கருணாகரசு கூறியது...

    என்ன செய்ய பழகிக்க வேண்டியதுதான்.... உணர்வு கொட்டிய கவிதைக்கு பாராட்டுக்கள்.

    //

    உண்மைதான் சி கருணாகரசு முயன்றால் முடியாதது எதுவுமில்லை

    பதிலளிநீக்கு
  31. யோ வொய்ஸ் (யோகா) கூறியது...

    எல்லா இடத்திலும் அழகுள்ளது


    //


    நன்றி யோகா

    பதிலளிநீக்கு
  32. அன்புடன் மலிக்கா கூறியது...சிங்காரச்சென்னையை
    சிறப்போடு சொன்னது
    சிறப்பு. ஹா ஹா
    நான்
    சிரிக்கவில்லை சகோதரா..

    மிக அருமை தியா

    //

    அப்படியா நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  33. சின்ன அம்மிணி கூறியது...

    //சைக்கோவும் பைத்தியமும்
    வழியோரம் படுத்துறங்கி
    ஓய்வெடுப்பர்… //

    ஐயோ, இது கொஞ்சம் பயமாயிருக்கே


    //

    என்ன சின்ன அம்மிணி இதுக்கே பயந்தால்.........

    பதிலளிநீக்கு
  34. விக்னேஷ்வரி கூறியது...

    வஞ்சப் புகழ்ச்சி?

    நல்லா இருக்கு.


    //


    நன்றி விக்னேஸ்வரி

    பதிலளிநீக்கு
  35. சே.குமார் கூறியது...

    //சிங்காரச்
    சென்னை அழகானதுதான்//


    கலக்கிட்டிங்க.


    //

    நன்றி சே .குமார்

    பதிலளிநீக்கு
  36. இப்படிக்கு நிஜாம்.., கூறியது...

    தியா! இங்கே எங்களைப் போன்ற நல்லவர்கள்(?) சிலரும் வாழ்கிறோம்கிறத விட்டுட்டீங்களே!!!

    //

    சிலர் என்று சுருக்கிட்டிங்க நிஜாம் ......

    பதிலளிநீக்கு
  37. ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...

    உண்மையான நிகழ்வுகளை கவிதை நடையில் கலக்கி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !


    //


    நன்றி பனித்துளி சங்கர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்