சிங்காரச் சென்னை அழகாகத் தெரிந்திட்டால்

அடையாறும் கூவமும் வருநாளில்
அழகாகத் தெரிந்திட்டால்
மடை பாயும் வெள்ளமென
மக்கள் கூட்டம் நிறைந்திடுமே

பூந்தோட்டம் நாட்டிடுவர் - பின்பு
புதுப் பொலிவு பண்ணிடுவர்
காண்போரை வியக்க வைக்க
கண்காட்சி நடத்தி நிற்பர்

மூக்கைப் பிடித்து முன்னர்
வீதியிலே சென்றவர்கள்
நாக்கில் சுவையூற
வேர்க்கடலை கொறித்து நிற்பர்

நாளை வருநாளில் நல்ல
புதுச் சேதி கொண்டு வரும்
வாளை விராலுடனே நதி
நல்லழகு பெற்று விடும்

பார்க்கும் இடமெங்கும் கூவம்
புதுப் பொலிவு பெற்றுவிடில்
நோக்கும் உலகம் இந்தச்
சிங்காரச் சென்னை தனை

கருத்துகள்

  1. //வாளை விராலுடனே நதி
    நல்லழகு பெற்று விடும்//

    அளவுக்கதிகமான ஆசைதான் தியா உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொன்னா மாதிரி ஆயிட்டா..

    சிங்கார சென்னைதான் தியா.

    பதிலளிநீக்கு
  3. இப்படியெல்லாம் நடக்க வேண்டும்
    என்று எனக்குந்தான் ஆசை!

    நடக்குமா!!??

    சிங்கப்பூரில் ஓர் ஆறு இப்படி
    இருந்து, நீங்கள் அதற்கேற்றவாறு
    கவிதை எழுதியிருந்தால்!

    இத்தனை நாட்களோ,இத்தனை மாதங்களோ
    ஆகும் என்று சொல்லி ....
    மார்பு தட்டி முடியும்! முடியும்!! முடியும்.
    என்று முற்றுப் புள்ளி வைத்திருப்பேன்.

    ஆனால்....உங்கள் ஆசை...?..?????


    ஆசையில்.. வந்த {சொன்ன}
    ஆரூடம் பலிக்கட்டும் தியா!
    நன்றி.

    ஆமா இதைப் பார்த்து வருவதற்குத்தான்
    தளத்துக்கு விடுப்பு விட்டதோ!!

    பதிலளிநீக்கு
  4. கனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு தியா...அதைத் தடுக்க நான் யார்?

    பதிலளிநீக்கு
  5. கலகலப்ரியா கூறியது...

    aha.. azhagaana kavithai thiyaa..! karppanaila singarachennai theriyuthu..!


    nanri கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  6. thenammailakshmanan கூறியது...

    //வாளை விராலுடனே நதி
    நல்லழகு பெற்று விடும்//

    அளவுக்கதிகமான ஆசைதான் தியா உங்களுக்கு


    //


    நன்றி தேனம்மை லக்ஷ்மணன்

    உண்மையில் நான் கூடத்தான் ஆசைபபட்டுட்டன் போல.....?

    பதிலளிநீக்கு
  7. வானம்பாடிகள் கூறியது...

    :)). அபார கற்பனை.
    //

    யாவும் கற்பனை என்று போட்டிருக்கலாமோ?
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  8. வானம்பாடிகள் கூறியது...

    :)). அபார கற்பனை.
    //

    யாவும் கற்பனை என்று போட்டிருக்கலாமோ?
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. சுசி கூறியது...

    நீங்க சொன்னா மாதிரி ஆயிட்டா..

    சிங்கார சென்னைதான் தியா.


    \\

    நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  10. கலா கூறியது...

    இப்படியெல்லாம் நடக்க வேண்டும்
    என்று எனக்குந்தான் ஆசை!

    நடக்குமா!!??

    சிங்கப்பூரில் ஓர் ஆறு இப்படி
    இருந்து, நீங்கள் அதற்கேற்றவாறு
    கவிதை எழுதியிருந்தால்!

    இத்தனை நாட்களோ,இத்தனை மாதங்களோ
    ஆகும் என்று சொல்லி ....
    மார்பு தட்டி முடியும்! முடியும்!! முடியும்.
    என்று முற்றுப் புள்ளி வைத்திருப்பேன்.

    ஆனால்....உங்கள் ஆசை...?..?????


    ஆசையில்.. வந்த {சொன்ன}
    ஆரூடம் பலிக்கட்டும் தியா!
    நன்றி.

    ஆமா இதைப் பார்த்து வருவதற்குத்தான்
    தளத்துக்கு விடுப்பு விட்டதோ!!

    //


    ஆமாம் நாங்கள் வாய்ச் சொல்லில் வீரர்

    பொறுத்திருப்போம்

    உண்மைதான்


    நன்றி கலா

    பதிலளிநீக்கு
  11. D.R.Ashok கூறியது...

    அட அட


    //


    நன்றி அசோக்

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம். கூறியது...

    கனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு தியா...அதைத் தடுக்க நான் யார்?


    //


    உண்மைதான் ஸ்ரீராம்

    நன்றி

    நடக்கும் என்பார் நடக்காது.........................................

    பதிலளிநீக்கு
  13. இதே கனவுலதான் நாங்களும் திரிஞ்சிகிட்டிருக்கோம்..."யேய் யாருப்பா அது ரோட்டுல குப்பையை கொட்டூறது?"

    பதிலளிநீக்கு
  14. புலவன் புலிகேசி கூறியது...இதே கனவுலதான் நாங்களும் திரிஞ்சிகிட்டிருக்கோம்..."யேய் யாருப்பா அது ரோட்டுல குப்பையை கொட்டூறது?
    //
    உங்களின் கருத்துக்கு நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  15. சிங்கக்குட்டி கூறியது...அழகான கவிதை தியா

    //

    நன்றி சிங்கக்குட்டி

    பதிலளிநீக்கு
  16. தியா....பேராசை கூடாது தம்பி.

    பதிலளிநீக்கு
  17. சே.குமார் கூறியது...

    அட... அட..!


    //


    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  18. goma கூறியது...

    கனவு மெய்ப்பட வேண்டும்


    //

    நன்றி goma

    பதிலளிநீக்கு
  19. ஹேமா கூறியது...

    தியா....பேராசை கூடாது தம்பி.


    //

    அப்பிடியெண்டால் சரியக்கா

    பதிலளிநீக்கு
  20. உங்க ஆசையும் கவிதையும் நல்லாயிருக்குங்க.

    பதிலளிநீக்கு
  21. பல வருடங்களாக எதிர்ப்பார்த்திருக்கிறேன் தியா அருமையான பதிவு, மிக அழகான கவிதை

    நன்றி தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்