உன் கல்லு}ரி நண்பி

மனிதக் கூடுகளைச் சுமந்தலையும்
உயிர்களுக்கு மத்தியில்
‘மனிதம்’ காட்டி என்னை
மயங்க வைத்த தோழனே !
உன்னைப் பிரிவதற்கு
என் மனம் ஒப்பவில்லை நண்பா.

வார்த்தையில் வர்ணஜாலங்களை
வாரி இறைத்த – என்
கல்லு}ரிக் கலைஞனே

என் உயிரை அழுத்திப்
பெருவலியெடுக்க நான்
துடித்துப் போகிறேன்
உன்னைப் பிரிவதை எண்ணி.

காயமற்ற இடங்களில் கூட
உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா !

உடைந்த சிலம்பின் கதறலாய்
தனித்து விடப்பட்ட
சிறு தீவின் குமுறலாய்
துயரெடுத்துப் புலம்புகிறது
என் இதயம்.

என் உயிர் நண்பனே !

உன் கைப்பேசியில்
என் எண்ணை அழுத்தி
அடிக்கொரு ஒரு
‘குறுஞ் செய்தி’ அனுப்புவாய்.
இல்லையேல்
நாளொரு பொழுது
‘எப்படிச் சுகம்? ’ என்ற
ஓற்றை வரியிலாவது
நலம் விசாரிப்பாயென்ற
நம்பிக்கையுடன்
பிரிந்து செல்லும்
கல்லு}ரி நண்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்