சித்திரைத் தமிழ் மகள்
சிலிர்ப்புடன் வருகின்றாள்
நித்திரை விட்டு
விரைவினில்
எழுந்திடுவோம்...
மருத்துநீர் தலை தடவி
வெந்நீரில் குளித்திடுவோம்
நெற்றியில் நீறணிந்து
நெறிப்படி வணங்கிடுவோம்
பெரியோர் தாள் பணிந்து
கையுறை பெற்றிடுவோம்...
எப்போதும் போலவே
அந்த நினைவுகள்
வந்தெம் மனத்திரை
ஊசலாடுகின்றன...
முகமில்லா உருவங்களுக்கும்
நிசப்தமான வார்த்தைகளுக்கும்
உரிமை கொண்டாடியபடி
நீண்டு கொண்டிருக்கிறது
எம் இரவுகள்...
சில்லறை வாங்கி
உண்டியல் சேர்த்து
உறவுகள் கூடி
மருதடி சேர்ந்து
மகிழ்ந்திருந்த அந்தக்காலம்
மலையேறி விட்டது...
அப்பு வன்னியிலே
ஆச்சி வல்லையிலே
தம்பி லண்டனிலே
தவமிருந்து பெற்ற தனையன்
சூரிச்சிலே...
கொள்ளிக் குடமெடுக்க
ஊரிலே யாருமில்லை
இந்த லட்சணத்தில்
வந்த வரிசத்தை
ஆர் நினைப்பார்
இந்த வேளையிலே...
ஆனாலும் நித்திரை விட்டு
விரைவாக எழுந்திடுவோம்
அன்றேல்...
நித்திரையின்றி
விடியும்வரை விழித்திருப்போம்...
சித்திரைத் தமிழ்மகள்
சிலிர்ப்புடன் வருகிறாள்
வாருங்கள் நாம்
சோகங்கள் மறந்து
சுமைகளை ஒருகணம்
இறக்கி
மகிழ்ந்திருப்போம்
நிறைவாக...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-