இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
நீ என்ன
பதிலளிநீக்குஎன்றும் சுமை தாங்கும்
கூலித்தொழிலாளியா?
அருமை தியா
ஓளிரவைக்க
பதிலளிநீக்குஅழுகிறாயே
தியாவின் பேனா
ரொம்ப நல்லாயிருக்கு.
http://kavikilavan.blogspot.com
மெழுகு வர்த்தியை பற்றிய பார்வைகள் பல இருப்பினும் அவ்வரிசையில் இதுவும் அழகே.
பதிலளிநீக்குநீ என்ன
என்றும் சுமை தாங்கும்
கூலித்தொழிலாளியா?
"அருமை தியா"
பதிலளிநீக்குநன்றி சக்தி உங்கள் வாழ்த்துக்கு
"ரொம்ப நல்லாயிருக்கு."
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி யாழவன்
"மெழுகு வர்த்தியை பற்றிய பார்வைகள் பல
பதிலளிநீக்குஇருப்பினும் அவ்வரிசையில் இதுவும் அழகே."
ஜமால், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் பேனாவின் தூறல்கள் அழகு அழகு .....
பதிலளிநீக்கு