அடை மழைப் பொழிவு
விண்ணதிரும் இரைச்சல்
நாய்களின் குரைப்பொலி
வேலியோரம் மழையில்
நனைகிறது வெள்ளாடு
இருளைக் கிழித்து
இரு கூறாக்கி
வேலி போட்டது மின்னல்
இடியின் பேரோசை
சன்னமாய் காதினில்…
விடிவின்றி நீண்டு கிடந்தது
பகலும் இரவாக..
கிழக்கின் திசையை
அறிய முடியாமல்
தோற்றுப் போனது மனசு…
கோடை வெயிலின்
வெப்பம் தணிய
கொட்டித் தீர்த்தது
பேய் மழை…
வெட்டவெளிகள்
நீரில் மூழ்கின
பற்றைக் காடுகள்
பதுங்கிக் கொண்டன
சதுப்பு நிலத்தில்
சப்பாத்துக் கால்கள்
கோலம் போட்டன…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-