ஊரெல்லாம் வியந்து நிற்கும்

அப்பா செத்து
ஆறு வருசமாச்சு
பெத்தவையும்

பேரக் குஞ்சுகளும்
ஒன்றாகக் கூடியாச்சு பெரிசுக்கு அந்தியெட்டி
ஆட்டத் திவசமென்டு
அடுக்கடுக்காய்
நினைவுதினம்


வரிஷமொன்று போனால்
திவஷமொன்று வரும் அண்ணன்
தம்பி
அக்கா
தங்கை
நாலுபேரும் சேர்ந்து
எடுப்பார்கள்
எடுப்பாக
ஊரறிய
ஒரு பெருவிழா
அத் திருவிழா
கோலங் கண்டு
ஊரெல்லாம்
வியந்து நிற்கும்
பெரிசு

இருந்தாலும்
இதே கூட்டம்
வரும் எதிர்க்க
அது மாண்டாலும்
வருவாங்க
திதி கொடுக்க

பெரிசு கொடுத்து வச்ச
கிழவன்தான்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி