ஆகஸ்ட் 04, 2009

அகதியாகி உலகமெங்கும்

வாழ்விழந்து
ஏதிலியாய்
வறுமையிலே வாடி வாடி
அனுதினமும்
அல்லற்பட்டு
அகதியாகி அலைகிறோமே

பெற்றதாயை ஊரினிலே
தவிக்க விட்டு வந்தபோதும்
அவள்
நற்றவங்கள் புரிந்ததனால்
நலமாக
நாங்கள் வாழ்வோம்
நற்றவங்கள்
புரிந்த தாயை
நலமாக வாழ வைக்க
அகதியென்ற பெயர்
அனுதினமும் உதவிடுதே

அகதியாகி
அசுல் வேண்டி
அடிமையாக
அலைந்த போதும்
பனிப்பொழிவில்
தினந்தினமும்
மாடாயுழைத்த போதும்
சொந்த மண்ணின் சுகமதனை
எந்த மண்ணும்
தந்திடாது

இந்த உண்மை புரிந்திருந்தும்
விதியென்று
விரும்பி ஏற்றோம்

அகதியாகி உலகமெங்கும்
அல்லல் பட்டு
அலைந்த போது
எமை நினைக்க நாள் குறித்த

ஐ.நாவே
உனக்கும் நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

அழகிய ஐரோப்பா – 4

முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...