ஆகஸ்ட் 05, 2009

காதலின் வலி

நீண்டிருந்த

கடற்கரை மணல்

வந்து கரையை

தொட்டு விட்டு

மீளும் அலை

கடலை அள்ளி

தின்று

ஏப்பம் விடத் துடிக்கும்

வானம் கடலுடன்

கைகோர்த்தபடி

கட்டித் தழுவியது

நடுக்கடலில்

தவிக்குது

துடுப்பிழந்த

ஒரு படகு

கரைசேரும் ஆவலுடன்

காதலில் விழுந்த

என் இதயம் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

அன்னை மண்ணே

அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் ...