அர்த்தம் புரியாதவரை

எல்லாம்
என்பதன் அர்த்தம்
புரியாதவரை
எல்லாம் இங்கே
புதுமையாகத்தான் இருக்கிறது.

வாரி வழங்கிய கைகள்
இன்று
வாட்டம் கண்டன.

ஏறு தழுவிய
மார்புகள் எல்லாம்
சோர்வு கொண்டன.

ஏர் பூட்டி உழுதிருந்த
நெல் வயல்கள்
வான் பார்த்துக்
காத்திருக்க
வாழாவிருப்பதுவே
வாழ்க்கையானது.

வசந்தத்தை எதிர்பார்த்து
காத்திருந்த வேளையிலே
வறட்சி மட்டுமே
மீதமானது...

பட்டினி கிடந்து
பழக்கப் பட்டதால்
பசி கூடவே எம்மில்
ஒட்டிக் கொண்டது
நிரந்தரமாக...

எதிர்பார்ப்புக்கள் எல்லாம்
ஏமாற்றங்களாகி
இன்னும்
வாழ்தல் வேண்டி
தொடர்கிறது சீவியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி