நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நகர்வின் பின்னரான இயங்கியல் செயற்பாட்டின் ஒருபகுதியாக இந்திய-தமிழ்ச் சூழலில் நவீனத்துவத்தின் சமூகத்தளம் விரிவடைந்த போது மத்தியதர வர்க்கக் கிளர்ச்சியின் வெளிப்பாடாக புனைகதைகள் தமிழுக்குள் வந்து சேரத் தொடங்கின. மரபு ரீதியான நிலவுடைமை அமைப்பின் வீழ்ச்சி, முதலாளித்துவ எழுச்சி, நகரமயவாக்கம், எந்திரமயமான வாழ்வியல், வணிகக் கலாசாரச் செல்வாக்கு என்பன ஆத்மார்த்த ரீதியாக புனைகதைகளில் தாக்கத்தினை உண்டுபண்ணின. தமிழில் முதல்ச் சிறுகதையை எழுதிய வ.வே.சு.ஐயருடன்தான் தமிழ்ச் சிறுகதை வரலாறு பிறக்கின்றது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தங்களிலும் மக்களை ஊக்குவிப்பதற்குக் கற்றவர்கள் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்’(30) வ.வே.சு.ஐயர் ஆவார். தனிமனித நேயம், வீரம், சோகம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, தத்துவம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த ‘மங்கையக்கரசியின் காதல் முதலிய கதைகள்’(1917) தொகுதியில், ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை’ யை வ
கருத்துகள்
கருத்துரையிடுக
இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....
அன்புடன்
-தியா-