பிரியாவிடை

மனிதர்களை
பற்பல
அடையாளங்களில்
தேடித் தோற்றுப்போன
நான்
என் விலா இடுக்கினூடே
கைவிட்டு
மரத்துப்போன
என் இதயத்தை
தொட்டுப் பார்க்கிறேன்
சந்தேகமற என்னால்
உணர முடிகிறது
என் இதயம்
எதையோ எண்ணி தவிப்பதை…
நட்பு என்பது இதுவோ

நட்பின் வலி
இத்தனை கொடுமையானதா?
நட்புக்கு
பிரிவே கிடையாதா?
அப்படியெனில்…
‘பிரிவு’
என்கிறார்களே அது…?

நட்பின் முடிவே
பிரிவுதானா?
அப்படியெனில் அதை
பிரியாவிடை
என்கிறார்களே
அது ஏன்?!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி