ஆகஸ்ட் 06, 2009

நான் நல்ல நடிகன்

நான் ஒரு நடிகன்
அம்மாவுக்கு நல்ல மகன்
ஆசானுக்கு
வல்ல சீடன்
பள்ளியில்
நல்ல ஆசான்
ஊருக்கு பேர்பெற்ற
சமூகத் தொண்டன்
மாமாவுக்கு நல்ல
மருமகன்
மனைவிக்கு
ஏற்ற கணவன்
என்
குழந்தைக்கு
செல்ல அப்பா
பாட்டிக்கு அன்புப்
பேரன்
உற்ற தோழன்
அவனுக்கு நல்ல
நண்பன்
தங்கைக்கு ஒரு
அண்ணன்
அண்ணாக்கு
நான் தம்பி
நான் நல்ல நடிகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-