சொற்சிலம்பம் - மூன்று


இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில்பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும்உண்டு. ஆனால், இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பலசொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன்.

''மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான். ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.

(முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)


இலங்கைத் தமிழ்ச் சொற்கள்
தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள்

வெடி பட்டாசு

பூவிசிறி கம்பி மத்தாப்பு

மதில் காம்பவுண்ட் சுவர்

ஊத்தை அழுக்கு

குழந்தை பாப்பா, குழந்தை

வாகனம் வண்டி

சீனி சக்கரை

சக்கரை வெல்லம்

சிவப்பு அரிசி, உடையலரிசி புட்டரிசி

சிவப்பு அரிசிமா புட்டுமா

நாட்டுப் புழுங்கல் கேரளா சாப்பாட்டரிசி

கறுவா பட்டை

வேர்க்கொம்பு சுக்கு

குரக்கன் கேள்வரகு, ராகி

உள்ளி, பூண்டு பூண்டு

பயறு பாசிப்பருப்பு

உடைத்த பயறு சிறு பருப்பு

சோயாமீட்ஸ் மீஸ்மாக்கர்

கச்சான், நிலக்கடலை வேர்க்கடலை

கொண்டக்கடலை மூக்கணாங் கடலை

தேயிலை ரீத்தூள், ரீப்பவுடர்

பெருஞ்சீரகம் சோம்பு, பெருஞ்சீரகம்

தூள் பொடி

மல்லி தனியா, மல்லி

மண்ணெண்ணை கிருஸ்ணா ஆயில்

பலசரக்குக் கடை மளிகைக் கடை

செத்தல் மிளகாய் காய்ந்த மிளகாய்


இன்னும் வளரும்.....

கருத்துகள்

  1. //

    இன்றைய கவிதை சொன்னது…
    அய்யா! என்ன இது?!
    விளையாட்டா இம்புட்டு மேட்டரை சொல்லிப்புட்டீங்க!

    அருமை!

    -கேயார்

    November 17, 2009 11:01 PM
    இன்றைய கவிதை சொன்னது…
    இப்பவும் நாந்தானுங்கோ முதல்வன்!!

    -கேயார்

    November 17, 2009 11:02 PM

    //

    முதலில் பின்நூட்டலிடும் அவசரத்தில் திருத்தமுன்னர் பதிலுரத்தீர்கள் நன்றி
    இன்றும் நீங்க தான் முதல்வன்

    பதிலளிநீக்கு
  2. இந்த இடுகையில் நிறைய புதிய சொற்கள். தொடருங்கள் தியா.

    பதிலளிநீக்கு
  3. Nalla muyarchi..! Maduraip pakkam ponaa... eezhath thamizhukku niraiya otrumaigal undu..!

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்

    பதிலளிநீக்கு
  5. நல்லா இருக்கு தியா..பார்க்கும் போது தமிழ்நாட்டு தமிழில் தமிழை விட தங்லிஷ் தான் அதிகம்.. இலங்கை தமிழில் குறைவு...

    பதிலளிநீக்கு
  6. காம்பவுண்ட் சுவர் - மதில் சுவர்

    வண்டி - இங்கும் "வாகனம்" தான்

    மீஸ்மாக்கர் - சோயா சக்கை

    ரீத்தூள், ரீப்பவுடர் - தேயிலை தூள்

    கிருஸ்ணா ஆயில் - மண் எண்ணெய்

    மளிகைக் கடை - இங்கும் "பல சரக்கு கடை" தான்

    என்ன செய்வது தமிழ்நாட்டு தமிழனுக்கு தமிழ் பிடிக்கவில்லை.......

    பதிலளிநீக்கு
  7. வெடி, ஊத்தை, குழந்தை, சீனி, உள்ளி, பூண்டு, பயறு, நிலக்கடலை, கொண்டக்கடலை, உடைத்த பருப்பு, சோயாமீட்ஸ் , பெருஞ்சீரகம் ,தூள் , மல்லி , மண்ணெண்ணெய் , பலசரக்கு கடை ..... இவையனைத்தும் நெல்லையில் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன.

    பதிலளிநீக்கு
  8. தியா உங்கள் ஊரில் பேசும் எல்லா வார்த்தைகளும் இன்றைக்கும் எங்கள் ஊரில் பயன்படுத்துகிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள தூரம் வெறும் 30 கிலோ மீட்டர் நடுவே கடல். அப்றம் எனக்கு ஒரு சந்தேகம். இலங்கைத் தமிழில் "டி" எழுத்துக்கு பதிலாக "ரி" மாறிப்போன கதையை எனக்காக கொஞ்சம் கதைக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  9. தொடருங்க... வாழ்த்துக்கள்.
    இரண்டு சொற்களுக்கிடையே ஒரு கால்புள்ளி வைக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //
    வானம்பாடிகள் கூறியது...
    இந்த இடுகையில் நிறைய புதிய சொற்கள். தொடருங்கள் தியா.

    November 18, 2009 12:27 அம
    //

    நன்றி வானம்பாடிகள் முடிந்தவரை நல்ல சொற்களை தேடித் தருகிறேன்

    பதிலளிநீக்கு
  11. //
    கலகலப்ரியா கூறியது...
    Nalla muyarchi..! Maduraip pakkam ponaa... eezhath thamizhukku niraiya otrumaigal undu..!

    November 18, 2009 1:08 AM

    //

    நன்றி கலகப்ரியா

    பதிலளிநீக்கு
  12. //
    கவிக்கிழவன் கூறியது...
    நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்

    November 18, 2009 1:37 AM
    //

    நன்றி கவிக்கிழவன்

    பதிலளிநீக்கு
  13. //

    புலவன் புலிகேசி கூறியது...
    நல்லா இருக்கு தியா..பார்க்கும் போது தமிழ்நாட்டு தமிழில் தமிழை விட தங்லிஷ் தான் அதிகம்.. இலங்கை தமிழில் குறைவு...

    November 18, 2009 9:20 AM


    புலவன் புலிகேசி கூறியது...
    காம்பவுண்ட் சுவர் - மதில் சுவர்

    வண்டி - இங்கும் "வாகனம்" தான்

    மீஸ்மாக்கர் - சோயா சக்கை

    ரீத்தூள், ரீப்பவுடர் - தேயிலை தூள்

    கிருஸ்ணா ஆயில் - மண் எண்ணெய்

    மளிகைக் கடை - இங்கும் "பல சரக்கு கடை" தான்

    என்ன செய்வது தமிழ்நாட்டு தமிழனுக்கு தமிழ் பிடிக்கவில்லை.......

    November 18, 2009 9:24 AM

    //

    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  14. //
    லெமூரியன்... கூறியது...
    வெடி, ஊத்தை, குழந்தை, சீனி, உள்ளி, பூண்டு, பயறு, நிலக்கடலை, கொண்டக்கடலை, உடைத்த பருப்பு, சோயாமீட்ஸ் , பெருஞ்சீரகம் ,தூள் , மல்லி , மண்ணெண்ணெய் , பலசரக்கு கடை ..... இவையனைத்தும் நெல்லையில் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன.

    November 18, 2009 11:36 AM

    //

    நன்றி லெமூரியன்...

    நான் சென்னைத் தமிழ்தான் அதிகளவில் இங்கு அறிந்ததால் அதுபற்றி அதிகம் கூறினேன்.
    இங்கு இலங்கைத் தமிழ் என நான் குறிப்பிட்ட தமிழில் பேசினால் யாருக்கும் புரியுதில்லை.

    பதிலளிநீக்கு
  15. //
    இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    தியா உங்கள் ஊரில் பேசும் எல்லா வார்த்தைகளும் இன்றைக்கும் எங்கள் ஊரில் பயன்படுத்துகிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள தூரம் வெறும் 30 கிலோ மீட்டர் நடுவே கடல். அப்றம் எனக்கு ஒரு சந்தேகம். இலங்கைத் தமிழில் "டி" எழுத்துக்கு பதிலாக "ரி" மாறிப்போன கதையை எனக்காக கொஞ்சம் கதைக்க முடியுமா?

    November 18, 2009 2:20 பம்


    //



    நிஜாம் நன்றி

    D = டி

    T = ரி

    அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  16. சி. கருணாகரசு கூறியது...
    தொடருங்க... வாழ்த்துக்கள்.
    இரண்டு சொற்களுக்கிடையே ஒரு கால்புள்ளி வைக்க வேண்டுகிறேன்.

    November 18, 2009 3:05 பம்
    //

    நன்றிங்க நிச்சயமா இனி கவனிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. நிறைய புதிய சொற்கள்.
    தொடருங்க...

    பதிலளிநீக்கு
  18. //
    சுசி கூறியது...
    நிறைய புதிய சொற்கள்.
    தொடருங்க...

    November 18, 2009 10:43 PM
    //

    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்