ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )
1985 – 1995 வரையான காலகட்டம்
1. இன உணர்வுச் சூழல்
2. போரின் விளைவுகள்
1. இன உணர்வுச் சூழல்
தமிழ்த்தேசியம், இனஉணர்வுச் சூழல் என்பன திடீரெனத் தோன்றிய ஒன்றல்ல. இதற்குப் பல அரசியற் காரணிகள் , அரசியற் பகைப்புலங்கள் முதலியன உந்துசக்தியாக அமைந்து வந்துள்ளமையினை வரலாறு கூறுகின்றது. பிரித்தானியர் காலம் தொட்டே ஈழத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் அடக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்துள்ள நிலையில்; சுதந்திரத்தின் பின்னர் தமிழ்க்காங்கிரஸ் , தமிழரசுக்கட்சி ஆகியவற்றின் தோற்றம் தமிழரின் அரசியல் பலத்தினை வலுவூட்டிய அதேவேளையில் தனிநாட்டுக்கான கோரிக்கையையும் வலுவடையச் செய்தது.
1956ஆம் ஆண்டு யூ.என்.பி முதன்முறையாக தேர்தலில் தோல்வியடைந்தது. களனி மகாநாட்டுத் தனிச்சிங்களச் சட்டம் தொடர்பான தீர்மானம் இதன் தோல்விக்கு அடிப்படைக் காரணமானது. இதனை டீ.ஈ. குணதிலக, என்.எம். பெரேரா போன்ற இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எதிர்த்தனர். ”இருமொழி எனில் ஒருநாடு, ஒருமொழி எனில் இரு நாடு“ என்ற கோசத்தினை முன்வைத்து தமது கம்னிஸ்டுக் கொள்கையை மேல்நிலைப் படுத்தினர்.
இதற்கிடையில் யூ.என்.பி. யில் இருந்து பிரிந்து சென்ற எஸ்.டபில்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கா எஸ்.எல்.எப்.பி. யில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானார். இதன் பயனாக தனிச்சிங்களச் சட்டம், சிங்களஸ்ரீ சட்டம், தரப்படுத்தல் எனப்பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தேர்தலுக்கு முன்னர் தமிழரின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு ‘சமஸ்டி’ எனக்கூறிய இவரின் இத்தகைய செயற்பாடு தமிழர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தர 1958இல் அது இனக் கலவரத்தைத் தூண்டி விட்டது.
இதற்கிடையில் தமது இடதுசாரிக் கோட்பாட்டை முன்வைத்த ஜெ.வி.பி. ஆயுதப் போரில் குதித்தது. இது 1971இல் நிகழ, முன்னர் இடதுசாரிகளாக இருந்த என்.எம்.பெரேரா, டி.ஈ.குணதிலக ஆகியோரின் துணையுடன் முதலாம் குடியரசு யாப்பு எழுதப்பட்டு அதில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1977களிலும் ஓர் இனக் கலவரம் ஏற்பட்டது. தமிழரின் தேர்தல்க் கூட்டணி பெற்ற அமோக வெற்றியின் எதிரொலியாகவே அப்போது அக்கலவரம் அமைந்தது.
இளைஞர் இயக்கங்கள் பல முளைவிட்டுக் கிளை பரப்பிய போது தென்பகுதியில் தமிழர்கள் வாழ முடியாத அச்ச உணர்வு மேலோங்கியது. இதேவேளையில் 1983இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் காரணமாக தென்பகுதித் தமிழர்கள் தமது பாதுகாப்பு , சுகவாழ்வு ஆகியவற்றுக்கான உகந்த இடமாக வடக்கு – கிழக்கு பிரதேசத்தினை தெரிவு செய்து அப்பிரதேசங்களை நோக்கித் தம் அசைவியக்கத்தினை மேற்கொண்டனர்.
1983 இனக் கலவரமானது தமிழர்களை ‘இலங்கைத்தேசியம் என்ற பொதுமை நிலையில் நின்று பின்வாங்கச் செய்து ‘தமிழ்த்தேசியம்’ என்ற சிறப்புணர்வை வளர்க்க உதவியது. புதிய கோஷங்களுடன் தமிழ்ச்சமூகம் மேற்கிளம்பியது. இதன் இன்னொரு கட்டமாகப் போர் ஏற்பட்டு , அதன் விளைவாக நாடு சொல்ல முடியாத பல இடர்பாடுகளினைச் சந்தித்தது.
இவ்வேளையில்தான் 1985ஆம் ஆண்டு ‘திம்பு’ பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
மேற்படி சூழலில் தோன்றிய இலக்கியங்களும் காலமாற்றத்துக்கேற்ப அவற்றினைப் பதிவு செய்தன. இதில் நின்று விடுபட முடியாத பல எழுத்தாளர்களும் அக்கால முற்போக்குவாத சூழலுக்கு மத்தியிலும் தமிழ்த்தேசியவாதத்தினை மேல் நிலைப்படுத்தி போரின் விளைவுகளினையும் தனது சிறுகதைகளின் உள்ளடக்கமாகக் கொண்டுவந்துள்ளனர்.
1985 – 1995வரையான காலகட்டமானது இரண்டாம் , மூன்றாம் கட்ட ஈழப்போர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதனாலும் , வேற்று நாட்டுப் படைகளான இந்திய இராணுவ சூழலில் தமிழ்த்தேசியம் வளர்க்கப்பட்ட காலம் என்பதனாலும் முக்கியம் பெறுகின்றது. வெறுமனே போர்ச்சூழல் என்றோ அல்லது இனஉணர்வுச் சூழல் என்றோ கூறுவதைவிட தமிழ்த்தேசியவாதத்தின் மேலெழுகையினால் உருவான இனஉணர்வுச்சூழல் எனக் கூறுவதே மிகப் பொருத்தமானதாக அமையும் என எண்ணுகிறேன்.
தொடரும் ...
நல்ல பதிவுகள் நண்பா... பல விடயங்களை அறிய முடிந்தது தொடருங்கள்...
பதிலளிநீக்குநன்று வழமைபோல்.
பதிலளிநீக்குபோருக்கான சூழலை அன்றே வித்திட்டது போலத்
பதிலளிநீக்குதோன்றுகிறது (1956/1958).
-கேயார்
//
பதிலளிநீக்குசந்ரு கூறியது...
நல்ல பதிவுகள் நண்பா... பல விடயங்களை அறிய முடிந்தது தொடருங்கள்...
November 7, 2009 3:35 PM
//
நன்றி சந்துரு
//
பதிலளிநீக்குவானம்பாடிகள் கூறியது...
நன்று வழமைபோல்.
November 7, 2009 4:59 PM
//
வானம்பாடிகள் நன்றி
//
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கூறியது...
போருக்கான சூழலை அன்றே வித்திட்டது போலத்
தோன்றுகிறது (1956/1958).
-கேயார்
//
உண்மைதான் கேயார்
நன்றி.