சொற்சிலம்பம் - நான்கு


இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் தமிழ் பேசபட்டாலும் இரண்டுக்கும் இடையில்பெரியளவிலானஉச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். இலங்கையிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும்உண்டு. ஆனால், இலங்கைத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பலசொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். அவற்றினை புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன்.

''மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி '' என்ற கொள்கை உடையவன் நான். ஆதலால் , இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.

(முக்கிய குறிப்பு - இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)


இலங்கைத் தமிழ்ச் சொற்கள்
தமிழ் நாட்டுத் தமிழ்ச் சொற்கள்

முகம் மூஞ்சி

வடிவு அழகு

நித்திரை தூ க்கம்

சமிபாடு ஜீரணம்

வயிற்றுக்குத்து வயிற்றுவலி

தலையிடி தலைவலி

நோவு வலி

காய்ச்சல் ஜுரம், காய்ச்சல்

தடிமன் ஜலதேஷம்

சத்தி வாந்தி



நுளம்பு கொசு

நுளம்புத்திரி கொசுவத்தி

நுளம்பு வலை கொசு வலை

இலையான் ஈ

கொசு ஈ

மட்டத்தேழ் பூரான்

பூரான், தேழ் தேழ்

நட்டுவக்காலி, கொடுக்கான் கருந்தேழ்

மயிர்க்கொட்டி கம்பளிப்பூச்சி


இன்னும் வளரும்.....


கருத்துகள்

  1. சமிபாடு புதிய வார்த்தையாக தெரிகிறது. சத்தி, நுனம்பு,இலையான்,மட்டத்தேழ், மயிர்கொட்டி இவை எல்லாம் கூட....!

    பதிலளிநீக்கு
  2. //

    ஸ்ரீராம். கூறியது...
    சமிபாடு புதிய வார்த்தையாக தெரிகிறது. சத்தி, நுனம்பு,இலையான்,மட்டத்தேழ், மயிர்கொட்டி இவை எல்லாம் கூட....!

    November 29, 2009 4:48 பம்


    //



    நன்றி ஸ்ரீராம் உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம் சொன்னதுதான்.நன்றி தியா.

    பதிலளிநீக்கு
  4. இது ஒரு அகராதியா போடலாம்..! மிக நல்ல முயற்சி..! மயிர்க்கொட்டிய... பேச்சு வழக்கில... மசுக்குட்டிம்பாங்க.. =))... lol...

    பதிலளிநீக்கு
  5. இன்னும் நிறைய இருக்கே

    பணிய=கீழே

    தொங்கல்=மூலை

    இதுமாதிரி அதெல்லாம் ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //
    வானம்பாடிகள் கூறியது...

    ஸ்ரீராம் சொன்னதுதான்.நன்றி தியா.

    November 29, 2009 4:52 PM

    //

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  7. //

    கலகலப்ரியா கூறியது...
    இது ஒரு அகராதியா போடலாம்..! மிக நல்ல முயற்சி..! மயிர்க்கொட்டிய... பேச்சு வழக்கில... மசுக்குட்டிம்பாங்க.. =))... lol...

    November 29, 2009 5:24 ப


    //



    நன்றி கலகலப்ரியா நீங்கள் சொல்ல்வது சரிதான் (மசுக்குட்டி)

    யப்பா அகராதி முயட்சிஎல்லாம் நமக்கு சரிப்படாது ஆளவிடுங்கப்பா

    பதிலளிநீக்கு
  8. //

    பிரியமுடன்...வசந்த் கூறியது...
    இன்னும் நிறைய இருக்கே

    பணிய=கீழே

    தொங்கல்=மூலை

    இதுமாதிரி அதெல்லாம் ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துக்கள்

    November 29, 2009 5:37 பம்


    //

    நன்றி வசந்த் நீங்களும் தெரிஞ்சதச் சொல்லுங்க
    உங்கள் பங்களிப்புக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. நல்லது நல்லது...

    தொடருங்க தியா...

    பதிலளிநீக்கு
  10. தமிழ்நாட்டு வழக்கிலும் 'முகம்' தானே? மூஞ்சி என்பது தெரு/கொச்சை வழக்கு.
    கொசுவை கொசு என்று தான் அழைக்கிறோம்.
    பூரானும் உண்டு, நட்டுவாக்கலியும் உண்டு. நோவும் உண்டு. (வயித்து நோவு, தலநோவு)

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மொழி வழக்கு வேறுபடுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான வழக்குகளை தெற்குத் தமிழ்நாட்டிலும், சென்னை நகரச் சுற்றுப்புறங்களிலும் கேட்கலாம்.

    இலங்கைத் தமிழ் வழக்கின் மேல் சிறு வயது முதலே மோகம் தான். அப்துல் ஹமீது குரலில் தமிழைக் கேட்பதற்காகவே நானும் என் சகோதரியும் வானொலியருகே தவம் கிடப்போம்.

    பதிலளிநீக்கு
  11. நான் கூட இப்படியொரு பதிவு போடவேண்டும் என்று நினைத்ததுண்டு தமிழ் நாடு உறவுகளுக்காக.

    செய்யனும்.......செய்யவேண்டும்
    செஞ்சுண்டு இருக்கே .....செய்து கொண்டு இருகிறாய்.
    நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா?
    நாலாம் தேதி வருவார் ......நாலாம் திகதி வருகிறார்கள்.....

    இன்னும் நிறையவே இருக்கு. நன்றி தியா......

    பதிலளிநீக்கு
  12. நன்றாகப் பயின்றவர்க்குத்தான் சிலம்பாட்டம் வரும்.

    உங்களுடைய சொற்சிலம்பம் ரொம்பவும் அருமை!
    இதன் பின்னே தங்களுடைய உழைப்பும், மொழிமீது கொண்டுள்ள ஆளுமையும் தெரிகின்றன!
    வாழ்த்துக்கள் தியா!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  13. கொசு-வை ​கொசு என்றே ​சொல்வது வழக்கம்.. ஈ-​யை ஈ என்றே ​சொல்வது வழக்கம்! காலங் காலமாக சுழன்று ​கொண்டிருக்கும் ​கொசுவத்தி சுருள் சத்தியம்!
    ஒரு டவுட்:
    நியாயத்தை நீங்க என்னன்னு ​சொல்லுவீங்??

    பதிலளிநீக்கு
  14. சுசி கூறியது...
    நல்லது நல்லது...

    தொடருங்க தியா...

    November 29, 2009 6:45 PM


    //

    நன்றி சுசி உங்களின் பின்னூட்டத்துக்கு

    பதிலளிநீக்கு
  15. நிலாமதி ​சொன்னது..
    //நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா? //
    இங்கும் ஒருமையில்லாமல் "நீங்க" என்று ​பேசுவதுண்டு. நானெல்லாம் ​கொங்கு வட்டாரத்துக்காரன்.. வார்த்தைக்கு வார்த்தை "ங்க" வரும்!!

    அப்பாத்துரை சொல்வது சரியே!
    அப்பாத்துரை சொன்னதில், எனக்கும் அப்துல் ஹமீது நினைவு வந்தது.. வானொலி முன் அம்மாவும் நானும் காத்திருக்கும் நாட்கள் நினைவாடுகின்றன!

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை கூறியது...
    தமிழ்நாட்டு வழக்கிலும் 'முகம்' தானே? மூஞ்சி என்பது தெரு/கொச்சை வழக்கு.
    கொசுவை கொசு என்று தான் அழைக்கிறோம்.
    பூரானும் உண்டு, நட்டுவாக்கலியும் உண்டு. நோவும் உண்டு. (வயித்து நோவு, தலநோவு)

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மொழி வழக்கு வேறுபடுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும்பாலான வழக்குகளை தெற்குத் தமிழ்நாட்டிலும், சென்னை நகரச் சுற்றுப்புறங்களிலும் கேட்கலாம்.

    இலங்கைத் தமிழ் வழக்கின் மேல் சிறு வயது முதலே மோகம் தான். அப்துல் ஹமீது குரலில் தமிழைக் கேட்பதற்காகவே நானும் என் சகோதரியும் வானொலியருகே தவம் கிடப்போம்.

    November 29, 2009 7:47 பம்


    //
    நன்றி அப்பாத்துரை,
    நான் குறிப்பிடுவது வேறு நீங்கள் சொல்வது வேறு
    தமிழ்நாட்டின் எல்லா இடத்திலும் நீங்கள் சொல்வதுபோல் பேசவில்லை ஒருசில இடங்கள் விதிவிலக்கு.
    ஆனால் நான் சொல்லும் ஈழத்தமிழ் நூற்றுக்கு நூறு விழுக்காடு அங்கு பேசப்படுகிறது.
    உங்களின் பதிலுக்கு நன்றி
    தொடர்ந்து கருத்துக் கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  17. நிலாமதி கூறியது...
    நான் கூட இப்படியொரு பதிவு போடவேண்டும் என்று நினைத்ததுண்டு தமிழ் நாடு உறவுகளுக்காக.

    செய்யனும்.......செய்யவேண்டும்
    செஞ்சுண்டு இருக்கே .....செய்து கொண்டு இருகிறாய்.
    நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா?
    நாலாம் தேதி வருவார் ......நாலாம் திகதி வருகிறார்கள்.....

    இன்னும் நிறையவே இருக்கு. நன்றி தியா......

    November 30, 2009 4:27 அம
    //



    உங்களின் கருத்துக்கு நன்றியக்கா

    நீங்கள் சொல்வது சரி ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் மிகவும் அன்னியோன்னியமானவர்களை "நீ" எனக் கூறும் வழக்கம் உள்ளது.

    நான் தஞ்சாவூர் நண்பர்கள் பலருடன் பழகியிருக்கிறேன் தப்பித் தவறிக்கூட "நீ" சொல்ல மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  18. இன்றைய கவிதை கூறியது...
    நன்றாகப் பயின்றவர்க்குத்தான் சிலம்பாட்டம் வரும்.

    உங்களுடைய சொற்சிலம்பம் ரொம்பவும் அருமை!
    இதன் பின்னே தங்களுடைய உழைப்பும், மொழிமீது கொண்டுள்ள ஆளுமையும் தெரிகின்றன!
    வாழ்த்துக்கள் தியா!

    -கேயார்

    November 30, 2009 8:02 அம


    //



    நன்றி இன்றைய கவிதை

    தமிழரைக் கண்டாலாவது தமிழில் பேசுவோம் என்ற நிலைதான் இன்று உள்ளது.

    தாய்மொழி மீது தீராத பற்றுதல் எனக்கு.

    பதிலளிநீக்கு
  19. ஜெகநாதன் கூறியது...
    கொசு-வை ​கொசு என்றே ​சொல்வது வழக்கம்.. ஈ-​யை ஈ என்றே ​சொல்வது வழக்கம்! காலங் காலமாக சுழன்று ​கொண்டிருக்கும் ​கொசுவத்தி சுருள் சத்தியம்!
    ஒரு டவுட்:
    நியாயத்தை நீங்க என்னன்னு ​சொல்லுவீங்??

    November 30, 2009 8:11 அம


    //

    நன்றி ஜெகநாதன்



    கொசு - மிகச்சிறிய பூச்சி(பனம்பழத்தில் மொய்ப்பது) இது ஈழத்தில் "கொசு" எனப்படும் (தமிழ் நாட்டில் "ஈ" என்பார்கள்.
    கொசு - இரத்தம் உறிஞ்சுவது (இது கடித்தால் மலேரியா வரும்) இதை ஈழத்தில் "நுளம்பு" என்போம்

    இலையான் - இது நான் முன்னர் சொன்ன கொசுவை விட கொஞ்சம் பெரியது. (தமிழ்நாட்டில் இதையும் "ஈ" என்பார்கள்.



    நியாயம் - ஞாயம் எனப் பேச்சு வழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  20. ஜெகநாதன் கூறியது...
    நிலாமதி ​சொன்னது..
    //நீ ( ஒருமையில்) சாப்டியா? .....நீங்க சாப்பிட்டு விடீர்களா? //
    இங்கும் ஒருமையில்லாமல் "நீங்க" என்று ​பேசுவதுண்டு. நானெல்லாம் ​கொங்கு வட்டாரத்துக்காரன்.. வார்த்தைக்கு வார்த்தை "ங்க" வரும்!!

    அப்பாத்துரை சொல்வது சரியே!
    அப்பாத்துரை சொன்னதில், எனக்கும் அப்துல் ஹமீது நினைவு வந்தது.. வானொலி முன் அம்மாவும் நானும்



    //



    நன்றி ஜெகநாதன்

    ஒருமை - பன்மை வித்தியாசம் தமிழில் இருந்தாலும் காலம் கடந்துதான் "கள்" வந்தது. இதை பின்னர் மரியாதைப் பன்மை என எம்மவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    "கள்" சொல்லும் போது பிரத்தியாருடன் உரையாடுவது போலவும் சொல்லாத போது ஏதோ உரிமை கொண்டாடுவது போலவும் ஓர் உணர்வு.



    மற்றபடி மரியாதைப் பன்மை தமிழ் நாட்டில் உள்ளது. நான் முன்னர் சொன்னதுபோல் தஞ்சாவூரில் மரியாதைப் பன்மை இன்றிப் பேசமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  21. தியா,

    பனம்பழ பூச்சி பற்றி அறியவில்லை. ஸாரி. நுளம்பு கொஞ்சம்.. இல்லை ​ரொம்ப புதுசு எனக்கு! அம்மாவின் பழைய ஞாபங்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

    நியாயத்துக்கு - ஞாயம்;
    அப்ப அநியாயத்துக்கு-???

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு, நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி. நான் அளித்த விருதினை ஏற்றுச் சிறப்பிக்கவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஜெகநாதன் கூறியது...
    தியா,

    பனம்பழ பூச்சி பற்றி அறியவில்லை. ஸாரி. நுளம்பு கொஞ்சம்.. இல்லை ​ரொம்ப புதுசு எனக்கு! அம்மாவின் பழைய ஞாபங்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

    நியாயத்துக்கு - ஞாயம்;
    அப்ப அநியாயத்துக்கு-??



    //



    நன்றி ஜெகந்நாதன்

    எழுத்து வழக்கில் நியாயம் தான் பேச்சு வழக்குத்தான் ஞாயம்

    அநியாயம் - அநியாயம் தான் மாற்றமில்லை

    பதிலளிநீக்கு
  24. பித்தனின் வாக்கு கூறியது...
    நல்ல பதிவு, நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி. நான் அளித்த விருதினை ஏற்றுச் சிறப்பிக்கவும். நன்றி.

    November 30, 2009 9:24 அம


    //

    நன்றி பித்தனின் வாக்கு நான் விருது ஏற்று பதிலும் சொல்லிவிட்டேன். உங்களின் தளத்தை பாருங்கள்

    விருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. //ஜுரம், //

    தியா இது நிச்சயம் தமிழ் சொல் இல்லை..ஆனா வழக்கு சொல்லாக மாறி விட்டது. நல்ல ஆய்வு...தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துகள்

    தேள் தானே ?

    தேழ்?

    பதிலளிநீக்கு
  27. //
    புலவன் புலிகேசி கூறியது...
    //ஜுரம், //

    தியா இது நிச்சயம் தமிழ் சொல் இல்லை..ஆனா வழக்கு சொல்லாக மாறி விட்டது. நல்ல ஆய்வு...தொடருங்கள்.

    November 30, 2009 10:16 அம



    //

    நன்றி புலவன் புலிகேசி

    ஆம்மாம் புலிகேசி "ஜ" வில் தொடங்கும் சொற்கள் அனைத்தும் வடமொழியே

    பதிலளிநீக்கு
  28. நேசமித்ரன் கூறியது...
    ஒரு தொடரா போடுங்க..வாழ்த்துகள்

    தேள் தானே ?

    தேழ்?

    November 30, 2009 11:31 பம்



    //

    நன்றி நேசமித்திரன்
    "தேள்" - "தேழ்" ஆமாம் அதேதான்

    பதிலளிநீக்கு
  29. மிகவும் பயனுள்ள பதிவு தியா தொடர்ந்து தாருங்கள்

    இதுபோன்றபதிவை
    அவசியம் தேவை..

    பதிலளிநீக்கு
  30. அன்புடன் மலிக்கா கூறியது...
    மிகவும் பயனுள்ள பதிவு தியா தொடர்ந்து தாருங்கள்

    இதுபோன்றபதிவை
    அவசியம் தேவை..

    December 1, 2009 4:௦


    //

    நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  31. இன்னும் கொஞ்சம்:
    மயிர் (அவர்களுக்குக் கெட்ட வார்த்தை) - முடி
    சோறு - சாதம்

    பதிலளிநீக்கு
  32. செயபால் கூறியது...
    இன்னும் கொஞ்சம்:
    மயிர் (அவர்களுக்குக் கெட்ட வார்த்தை) - முடி
    சோறு - சாதம்

    December 4, 2009 7:28 PM

    //முடிந்தவரை நீங்களும் சொல்லுங்கள்
    நன்றி செயபால்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி