ஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )

1985 வரையான காலகட்டம்
1. சமூகச்சூழல்
2. சமூகப் பிரச்சினைகள்


1. சமூகச்சூழல்
ஒருவருடைய எழுத்துக்கும் அவரது செயற்பாடு, சமூகம் மீதான அவரது கரிசனை எல்லாவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றில் ஒன்றை விட்டு இன்னொன்றைப் பிரித்துப்பார்க்க இயலாது. யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும்.

எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம். இத்தகைய பன்முகப் பார்வையினை ஈழத்துச் சிறுகதைகளிலும் ஓரளவு தரிசிக்க முடிகின்றது.

1956ஆம் ஆண்டு தொடக்கம் ஈழம், இனங்களுக்கிடையிலான உடன்பாடற்ற நிலையினைக் கொண்டு விளங்கி வந்திருக்கின்றது. ஈழம் சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் நாம் நடந்து வந்த பாதையானது மிகவும் கடினமானது. 1956இல் தொடங்கிய இன உணர்வுப்பயணம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இருந்தபோதிலும் 1956இல் தொடங்கிய இன உணர்வுப் பயணம் மிகவும் தீவிரம் பெற்ற காலமாக 1983ஆம் ஆண்டு விளங்குகின்றது. முன்னர் கூறியதுபோல 1983ஆம் ஆண்டு; வரையில் ஒரு வகையான புனைகதை, புனைவியல், கற்பனையியல் முறையே நடைமுறையில் இருந்தது எனக் கூறுவாரும் உள்ளனர்.

1960களின் பின்னர் மத்தியதரவர்க்க எழுச்சியும், முற்போக்குவாதச் சிந்தனைகளும் மேற்கிளம்பிய போது ஒரு வகையான நடுத்தர மக்கள் சார்புடைய இலக்கியங்கள் உற்பத்தியாகத் தொடங்கின. மார்க்ஸியப் பார்வை கொண்ட இலக்கியத தோற்றததின் பின்னணியில், 1970களின் பிற்கூற்றில் இழையோடிப்போய் இருந்த முற்போக்குவாதக் கருத்துக்களினை மனதில் இருத்தி சிறுகதைகளைப் படைக்க முற்பட்ட பலர் தமது ஆரம்ப காலச் சிறு கதைகளில் தனிமனித பிரச்சினைகளையும், மனித மன உளைச்சல்களையும் கருவாகக் கொண்டு கதைகளினை அமைத்திருந்தமையினைக் காண முடிகின்றது.

1983இன் முன்னரும் ஈழத்தில் தேசிய விடுதலைக்கான குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தன. ஆனால் அவை குரல்களாக மட்டுமே: அகிம்சை, சாமாதான வழிகளைப் பின்பற்றியனவாக அதிகளவில் மேற்கொள்ளப் பட்டமையினால் அதே காலப்பகுதியில் எழுத்துலகில் பிரவேசித்த பலருக்கு ஆரம்ப காலங்களில் இன விடுதலையை விடச் சமூக விடுதலையே மேலானதாகத் தெரிந்திருக்கலாம். இதனாலோ என்னவோ அக்காகலத்தில் எழுதப்புகுந்தவர்களின் படைப்புக்களின் மாறும் காலகட்டமாக 1985கள் அமைந்துவிட்டமையினை அவதானிக்க முடிகின்றது.


2. சமூகப் பிரச்சினைகள்

மக்களுடைய வாழ்வின் சிதறல்களினைக் ‘கவிதை’ வடித்துக்காட்டியது போல ‘சிறுகதை’ விவரிக்கவில்லை என்ற குறை நீண்ட காலமாக இலக்கிய உலகில் நிலவி வருகின்றது. அதற்கும் மத்தியிலும் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளும் அவ்வப்போது எழுந்து கொண்டேதான் இருக்கின்றன.
இலங்கைச் சூழல் என்றவுடன் எமது கண்முன் நிற்பது அதன் அன்றாட போர்ச்சூழலேயாகும். இதுவே கடந்த மூன்று தசாப்த காலத்து நிலைமை. இச்சூழல் உருவாகுவதற்கு முன்பிருந்தே இம் மண்ணில் பாரம்பரியமாக நிலவி வந்து, இன்றும் புரையோடிப் போயுள்ள சமூகப் பிரச்சினைகள் சில உள்ளன.

சீதன முறைமையால் ஏற்படும் சிக்கல்கள், காதல், உறவுப் பிணைப்பு, தனி மனித உணர்வுகள், மனித நடத்தைகள், பொய்ம்மை, பொறாமை, கயமை உணர்வுகள் நிறைந்த சுயநல சமூகம் போன்ற பல பிரச்சினைகளினை சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்தப் பலர் முயன்றுள்ளனர்.

அ. மனித நடத்தைகள்
ஆ. தனிமனித உணர்வுகள்
இ. பெண்ணியம் சார்ந்தன


அ . மனித நடத்தைகள்

சமூகத்தில் பல்வேறுபட்ட இயல்படைய மனிதர்களினைப் பல்வேறுபட்ட பார்வையில் சித்திரித்துக்காட்ட முயன்ற பல எழுத்தாளர்கள் சமூகத்தில் பொதுவான குணாம்சங்களாக விளங்குகின்ற பொய்ம்மை, கயமை, சுயநலம், மற்றவரைச் சுரண்டி வாழும் தன்மை, பொருளாசை, அந்தஸ்து உணர்வு ஆகியவற்றினைப் பல கோணத்தில் படம் பிடிக்க முயன்று வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளனர்.

சமூகத்தில் ஒருவர் அல்லது பலரிடம் நாம் போலி முகங்களினைத் தரிசிக்க முடிகின்றது. அவர்களின் போலித் தனங்களையும், தனிப்பட்ட சுய இலாபம் கருதிய நடத்தையினால் சமூகம் அடையும் ஏமாற்றங்களினையும் சித்திரிக்கின்ற போக்கில் எழுதப்பட்ட சிறுகதைகளில் சமூகத்தைச் சுரண்டி வாழ்கின்ற சுயநலம் பொருந்திய மனிதர்களுக்கு சமயம், தத்துவம் முதலிய பண்பாட்டு மூலங்கள் எவ்வாறு துணை போகின்றன என்பதையும் உணர்த்தி நிற்கும் அதேவேளையில்;: சமயம் தத்துவம் போன்ற மனித நேயத்தை வளர்க்கும் பண்பாட்டுக் கூறுகள் நேரெதிரான விளைவுகளுக்கு இட்டுச் செல்வதைச் சாடியும் சமூகத்தைச் சுரண்டிவாழும் வேடம் கொண்ட சமூக சேவையாளர் எனத் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட சிலருக்கு மதஅனுட்டானங்கள், மத நிறுவனங்கள் போன்றன விளம்பர மேடைகளாக அமையும் தன்மையினையும் முரண்பட்ட கோணத்தில் கதைகளில் வடித்துக் காட்டியுள்ளனர்.

சமூகமாந்தர்கள் சிலரின் மனக்கோணல்களினையும், கிராமியக் கூறுகளினையும், கிராம மக்களின் பன்முகங்களையும் தமது ஆரம்பகாலக் கதைகளினு}டாக அப்படியே படம் பிடித்துக் காட்டினர். கிராமிய மக்களின் அறியாமையினை, புதுமையை விரும்பும் தன்மையினை, சினிமா மோகத்தினை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சமூகப்பணி புரிகின்றோம் என்ற தோரணையில் மக்களைச் சுரண்டிப் பிளைக்க முயலும் பொய்யர்களினை அந்தரங்கப் படுத்திக் காட்டும் பண்புடனும் பல சிறுகதைகள் விளங்குவதனையும் காணமுடிகின்றது.


ஆ . தனிமனித உணர்வுகள்

ஈழத் தமிழ்ச் சமூகத்தின் உள்ளார்ந்த குணம்சங்களின் குறுக்கு வெட்டுக் காட்சி என்ற வகையில் தனிமனித நடத்தைகளினையும் அதன் மூலம் சமூகத்தில் நிலவிவந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையாகவுள்ள தனிமனித உணர்வு நிலைகளினையும் வெளிப்படுத்தப் பலர் முயன்றுள்ளனர்.

சமூகத்தின் அபிப்பிராயம் வேறு: தனிமனித இயல்புகள், தனிமனித உணர்வுகள், என்பன எல்லாமே வேறுவேறானவை. “ஊர் ஓடினால் ஒத்தோடு” என்ற பழமொழி இப்போது கால மாற்றத்துக்கு ஏற்ப, தலைமுறை இடைவெளிக்கு ஏற்ப மாறுபட்ட நிலையில் நோக்கப்பட்டு, தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தமது மனநிறைவுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொண்டு விட்டனர். “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி” என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய தலைமுறையினர் செயற்பட்டு வருகின்ற நிலையில், சமூகத்தின் அபிப்பிராயங்களுக்கும் தனிமனித விருப்பு –வெறுப்பு, தனிமனித உணர்வுகள் என்பவற்றுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலையினை கதையின் மூலம் சித்திரித்துக் காட்டியுள்ளனர்.
மனிதர்கள் தமது நடத்தைமுறையை ஒழுங்கமைப்பதன் மூலம் அல்லது மீளாக்கம் செய்வதன் மூலம் தங்களுடைய இருப்பினை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றனர் என்பதனை மிகவும் துல்லியமாக யதார்த்தப் பண்புடன் தருகின்றமையானது அக்காலக் கதைகளின் சிறப்பம்சமாக விளங்கக் காணலாம்.


இ . பெண்ணியம் சார்ந்தன

தமிழ்ச் சமூக அமைப்பிலே பெண்களுக்கிருந்த மரபுவழியான தளைகளை எல்லாம் உடைக்கப் பல எழுத்தாளர்கள் (பாரதி முதல் இன்று வரை) முயன்றுகொண்டிருக்கிறார்கள். உலகில் மனித குலத்தில் அரைப்பகுதியினருக்கு மேல் பெண்களே உள்ளனர். ஆனால் மனித உணர்வுகள் அற்ற, வெறும் பாலியல்ப் பண்டங்களாகவும், சனத்தொகை உற்பத்திக்கான இயந்திரமாகவும், மலிவான கூலி பெறும் தொழிலாளர்களாகவும், பெண்களை நோக்கும் இச்சமூகத்தில் பெண்கள் பற்றிய தனித்துவத்தையும், ஆண்-பெண் சமத்துவ உணர்வினையும், பெண் அடிமைத்தன எதிர்ப்பினையும், சீதனக் கொடுமையினையும் முதன்மைப்படுத்தி பெண்களின் ஆசைகள் நிராசைகளாக்கப்படுவதற்கு எரியும் சிக்கல்களில் ஒன்றான சீதனக்கொடுமை முக்கியமான காரணம் என்பதையும் அதனால் பெண்களின் உணர்வுகளினைப் பெண்களே கொச்சைப்படுத்தி புறக்கணிக்கும் நிலையினையும் பலர் தமது கதைகளின் பொருளாக்கினர்.

ஈழத்தில் குறிப்பாக, யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சீதன முறைமையால் பெண்கள் மட்டுமன்றிப் பெண்களைப் பெற்ற பெற்றோரும், படும் அவல வாழ்வினையும் அதனையே சுமையென நினைக்கும் குடும்பச் சூழலையும் இனம் காட்டி, திருமண பந்தத்தில் இணைந்து அன்புப் பிணைப்பில் அனைவரையும் கட்டிப் போடும் பெண்மை உணர்வுகள் அழிவதற்கு சீதன முறைமை முக்கிய காரணமாக அமைவதனையும் கதைகளில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

குடும்பச் சூழலில் பெண்களிடம் இருந்து பாரம்பரியமாக எதிர்பார்க்கப்படும் ஊழியம், நியமம் என்பவற்றினால் பெண்மையின் உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு தமது விருப்பு வெறுப்புக்களுக்கமைய அவர்கள் தமது இஸ்ரப்படி நடக்க முடியாத சூழ்நிலையினையும் தமது பெற்றோர், மூத்த உடன் பிறப்புக்களினால் அப்பெண் அடக்கப்பட்டு ‘பெண் எண்றால் அடங்கி இருக்க வேண்டும்’ என்ற உணர்வுடன் வளர்க்கப்படுவதனையும் பொறுக்க முடியாத கட்டத்தில் பெண் புயலாக, பூகம்பமாக மாறி புதுமைப் பெண்ணாக உருவெடுப்பதனையும் பல கதைகளில் பார்க்கமுடிகின்றது.


தொடரும் ...



கருத்துகள்

  1. தெளிவான வகைப்படுத்தல், செறிவான அலசல் புரிதலுக்கு மிக உதவும். நன்றியும் பாராட்டும் தியா.

    பதிலளிநீக்கு
  2. //“ஊர் ஓடினால் ஒத்தோடு” என்ற பழமொழி இப்போது கால மாற்றத்துக்கு ஏற்ப, தலைமுறை இடைவெளிக்கு ஏற்ப மாறுபட்ட நிலையில் நோக்கப்பட்டு, தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தமது மனநிறைவுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொண்டு விட்டனர்//

    வகைகள் பிரித்து விளக்கம். நன்று தியா....

    பதிலளிநீக்கு
  3. ஒரு எழுத்தாளன் ஒரு வரைமுறைக்குட்பட்டு அல்லது சமூக அக்கரையைச் மனதிலெடுத்து வரையறைக்குட்பட்டு எழுதுவதா? அல்லது இயல்பை இயல்பாய் எழுதுவதா?

    இன்றைய எழுத்துலகின் பெரும் விவாதப் பொருளில் இதுவும் ஒன்று.

    கதைகள் என்பவையே நடந்த ஒரு நிகழ்வின் புனைவாகத்தான் இருக்கமுடியும்.

    நேரடியாக பாதிக்கப் ப்ட்டவனை விட பாதிக்கப்பட்டவனை பார்த்தவன், அல்லது அவன் கேட்டவன் சொல்வதே இங்கு இலக்கியங்களாக படைக்கப் பட்டன.

    இது உலக இயல்பு......

    தன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.

    ஈழ இலக்கியங்களில் அதிக பரிட்சயம் இல்லாத போதும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன்.

    நீங்கள் சொல்வது மிகச் சரி

    உங்களின் இந்த அலசல் மிக அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தியா நல்ல விரிவான அலசல் அல்லது தேடல்.நிறையத் தரம் வாசிக்கிறேன் நான் தெளிவாக.

    பதிலளிநீக்கு
  5. //
    வானம்பாடிகள் கூறியது...
    தெளிவான வகைப்படுத்தல், செறிவான அலசல் புரிதலுக்கு மிக உதவும். நன்றியும் பாராட்டும் தியா.

    November 6, 2009 5:43 Pm

    //

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  6. //
    வகைகள் பிரித்து விளக்கம். நன்று தியா.
    //

    புலவன் புலிகேசி நன்றி

    பதிலளிநீக்கு
  7. //

    ஆரூரன் விசுவநாதன் கூறியது...

    ஒரு எழுத்தாளன் ஒரு வரைமுறைக்குட்பட்டு அல்லது சமூக அக்கரையைச் மனதிலெடுத்து வரையறைக்குட்பட்டு எழுதுவதா? அல்லது இயல்பை இயல்பாய் எழுதுவதா?

    இன்றைய எழுத்துலகின் பெரும் விவாதப் பொருளில் இதுவும் ஒன்று.

    கதைகள் என்பவையே நடந்த ஒரு நிகழ்வின் புனைவாகத்தான் இருக்கமுடியும்.

    நேரடியாக பாதிக்கப் ப்ட்டவனை விட பாதிக்கப்பட்டவனை பார்த்தவன், அல்லது அவன் கேட்டவன் சொல்வதே இங்கு இலக்கியங்களாக படைக்கப் பட்டன.

    இது உலக இயல்பு......

    தன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.

    ஈழ இலக்கியங்களில் அதிக பரிட்சயம் இல்லாத போதும் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். சிலவற்றை வாசித்தும் இருக்கிறேன்.

    நீங்கள் சொல்வது மிகச் சரி

    உங்களின் இந்த அலசல் மிக அருமை. வாழ்த்துக்கள்

    //

    நன்றி ஆருரன் விஸ்வநாதன் ,

    நான் எழுதுகிற விடயங்களினை விட எழுதாத விடயங்கள்தான் அதிகம்.

    இவை கேட்டு அறிந்தவையல்ல. கூடியபாகம் நேரில் நிகழ்ந்தவை.

    சிலர் ஈழத்து இலக்கியங்களில் ஒரே இரத்தவாடை அடிக்கிறது என மூக்கைப் பிடிக்கின்றனர். வேறுசிலர் விலகி இருக்கின்றனர். ஆனால் அதற்குள் வாழ்ந்து , அந்த மண்ணில் விழுந்து , எழுந்து , நடந்து ,ஓடி , உலாவிய எங்கள் ஒவ்வொரு பாகத்திலும் எம் மண்ணின் துகள்கள் ஒட்டி உள்ளன.

    அதேபோல் எங்கள் கதைகளிலும் எம் மண் உள்ளது, எம் வாழ்வு உள்ளது, எம் இன்பம்-துன்பம் , காதல் - மோதல், சாதல் - வாழ்தல் என்று நம்முடன் எனவெல்லாம் உள்ளனவோ
    அவைஎல்லாம் உள்ளன.


    நன்றி ஆருரன்

    பதிலளிநீக்கு
  8. //
    ஹேமா கூறியது...
    தியா நல்ல விரிவான அலசல் அல்லது தேடல்.நிறையத் தரம் வாசிக்கிறேன் நான் தெளிவாக.

    November 6, 2009 8:51 PM

    //

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  9. விரிவான அலசல்... வாழ்த்துக்கள்..

    //தன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.//
    //யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம்.//

    நூறு சதவீதம் உண்மை

    பதிலளிநீக்கு
  10. //குடும்பச் சூழலில் பெண்களிடம் இருந்து பாரம்பரியமாக எதிர்பார்க்கப்படும் ஊழியம், நியமம் என்பவற்றினால் பெண்மையின் உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு தமது விருப்பு வெறுப்புக்களுக்கமைய அவர்கள் தமது இஸ்ரப்படி நடக்க முடியாத சூழ்நிலையினையும் தமது பெற்றோர், மூத்த உடன் பிறப்புக்களினால் அப்பெண் அடக்கப்பட்டு ‘பெண் எண்றால் அடங்கி இருக்க வேண்டும்’ என்ற உணர்வுடன் வளர்க்கப்படுவதனையும் பொறுக்க முடியாத கட்டத்தில் பெண் புயலாக, பூகம்பமாக மாறி புதுமைப் பெண்ணாக உருவெடுப்பதனையும் பல கதைகளில் பார்க்கமுடிகின்றது. //

    எவ்வளவு பேர் இப்படி இன்று எழுதுகிறார்கள்?!

    டாப் கியரில் போகிறது உங்களது ஆய்வு! வாழ்த்துக்கள்!

    -கேயார்

    பதிலளிநீக்கு
  11. //

    ஈ ரா கூறியது...
    விரிவான அலசல்... வாழ்த்துக்கள்..

    //தன் அனுபவத்தை எழுதியவன் தமிழ் இலக்கிய உலகில் மிகக் குறைவே....அப்படி இருந்தால் அது சுயசரிதையாகிவிடும்.//
    //யதார்த்தத்தைப் புரிந்து தனக்குள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து கொண்டு படைப்புக்களினைப் படைக்கின்ற போதுதான் அவை உச்ச நிலையினை அடைய முடியும். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் தன்னைச் சுற்றியுள்ள விடயங்கள், சமூகம், இனம் போன்றவற்றில் கரிசனை உடையவனாக இருத்தல் அவசியம்.//

    நூறு சதவீதம் உண்மை

    November 7, 2009 7:21 AM

    //


    உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஈ ரா

    பதிலளிநீக்கு
  12. ///

    டாப் கியரில் போகிறது உங்களது ஆய்வு! வாழ்த்துக்கள்!

    -கேயார்

    ///

    அய்யய்யோ இது ஆய்விலைங்கோ சாதாரணமான ஒரு அறிமுகவுரை மட்டும்தான்.

    நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்