இருப்பு



மொழி புரியாத

புதிய பட்டிணத்தில்

வழிதவறி மாட்டிக்கொண்ட

இருப்பின் வேதனை

முகமிழந்து வாழும்

மனிதரிடையே

என்னை நான் தொலைத்தபடி

மீண்டும் மீண்டும் தேடுகிறேன்


கருத்துகள்

  1. தொலைத்தபடி தேடுவது தானே வாழ்வும்

    இந்தகவிதையும் அப்படிதான் போல

    :)

    பதிலளிநீக்கு
  2. /முகமிழந்து வாழும்

    மனிதரிடையே

    என்னை நான் தொலைத்தபடி

    மீண்டும் மீண்டும் தேடுகிறேன் /

    அருமை தியா. வங்கொடுமை இந்தத் தவிப்பு.

    பதிலளிநீக்கு
  3. நான் தெரிந்தே மாட்டிக் கொண்டேன்...

    அருமை தியா.

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள் தியா.
    எங்களையே தொலைத்துவிட்டு இல்லை எங்களுக்குள்ளேயே எங்களைத் தேடியபடிதானே இன்றைய எங்கள் வாழ்வு.

    பதிலளிநீக்கு
  5. //

    நேசமித்ரன் கூறியது...
    தொலைத்தபடி தேடுவது தானே வாழ்வும்

    இந்தகவிதையும் அப்படிதான் போல

    :)

    November 25, 2009 12:41 அம


    //



    நன்றி நேசமித்ரன் சரியாச் சொன்னீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  6. வானம்பாடிகள் கூறியது...
    /முகமிழந்து வாழும்

    மனிதரிடையே

    என்னை நான் தொலைத்தபடி

    மீண்டும் மீண்டும் தேடுகிறேன் /

    அருமை தியா. வங்கொடுமை இந்தத் தவிப்பு.

    November 25, 2009 12:57 அம


    //

    உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    எனது எல்லாப் படைப்புகளுக்கும் தேடிப்பிடித்துப் பின்னூட்டம் எழுதுறிங்கள்

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. கலகலப்ரியா கூறியது...
    :).. right..!

    November 25, 2009 1:05 அம

    //

    நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  8. //
    சுசி கூறியது...
    நான் தெரிந்தே மாட்டிக் கொண்டேன்...

    அருமை தியா.

    November 25, 2009 2:08 அம


    //

    என்ன சுசி இப்படி விரக்திப் படுறிங்க
    உனக்ளின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஹேமா கூறியது...
    சரியாகச் சொன்னீர்கள் தியா.
    எங்களையே தொலைத்துவிட்டு இல்லை எங்களுக்குள்ளேயே எங்களைத் தேடியபடிதானே இன்றைய எங்கள் வாழ்வு.

    November 25, 2009 2:45 அம
    //



    நன்றி ஹேமா உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. இப்படியே தேடிக்கிட்டு சோக கவிதை வாசித்தால் எப்படி உருப்படுவது?. இந்த சோகம் எல்லாம் பெண்களுக்கு. ஒளி படைத்த கண்ணும், அனல் தெறிக்கும் வார்த்தைகளும், வைர வரிகளும் பாட வேண்டிய பேனா முனை இன்று மூலையில் முடங்கி சோகம் எழுதுவது வெக்கம். வீரம் முழக்கும் கவிதைகளை, ஆற்றல் சொறியும் வரிகளை மட்டும் தியாவின் பேனாவில் எதிர் பார்க்கின்றேன். மூலையில் உக்காந்து பாடும் முகாரி அல்ல. புரிகின்றதா. உச்சி மீது வான் இடிந்து விழினும், நாம் வீரர்கள்தான், செத்ததைத் தேடும் கோழைகள் அல்ல. பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நாளைய புது சரித்திரம் படைக்க வீரக் கவிதைகள் எழுது ஈழ நண்பா. வளைக்கரத்தால் மூகாரி பாடாதே. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //முகமிழந்து வாழும்

    மனிதரிடையே

    என்னை நான் தொலைத்தபடி

    மீண்டும் மீண்டும் தேடுகிறேன் //

    அருமை தியா...ஆனால் கொடுமையான விசயம்...

    பதிலளிநீக்கு
  12. தியா, உணர்வுகளோடு கூடிய வரிகள் அருமை...
    உங்கள் உணர்வுகளின் வடிகால் தான் எழுத்து... தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பொறியுங்கள்... ஆனால் ஒரு சின்ன மாற்றம்... எப்போதும் சோகத்தின் முடிவில் நீங்கள் ஒரு சவாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை உடைய விடாது. துன்பம் எல்லோருக்கும் பொதுவானது... அதை எதிர் கொள்ளுவதில் தான் நமது வாழ்க்கை தங்கியுள்ளது.

    பதிலளிநீக்கு
  13. //என்னை நான் தொலைத்தபடி
    மீண்டும் மீண்டும் தேடுகிறேன் //
    உங்களை தொலைத்தபிறகு எப்படிங்க தேடுவிங்க :))))
    நல்லாயிருக்கு தியா

    பதிலளிநீக்கு
  14. தொலைத்து
    தேடி
    தேடியதை தொலைத்து
    தொலைத்தலில் தேடி
    தொலைந்துகொண்டிருக்கின்றோம்!

    இப்படித்தானே வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கின்றோம்

    பதிலளிநீக்கு
  15. பித்தனின் வாக்கு கூறியது...
    இப்படியே தேடிக்கிட்டு சோக கவிதை வாசித்தால் எப்படி உருப்படுவது?. இந்த சோகம் எல்லாம் பெண்களுக்கு. ஒளி படைத்த கண்ணும், அனல் தெறிக்கும் வார்த்தைகளும், வைர வரிகளும் பாட வேண்டிய பேனா முனை இன்று மூலையில் முடங்கி சோகம் எழுதுவது வெக்கம். வீரம் முழக்கும் கவிதைகளை, ஆற்றல் சொறியும் வரிகளை மட்டும் தியாவின் பேனாவில் எதிர் பார்க்கின்றேன். மூலையில் உக்காந்து பாடும் முகாரி அல்ல. புரிகின்றதா. உச்சி மீது வான் இடிந்து விழினும், நாம் வீரர்கள்தான், செத்ததைத் தேடும் கோழைகள் அல்ல. பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நாளைய புது சரித்திரம் படைக்க வீரக் கவிதைகள் எழுது ஈழ நண்பா. வளைக்கரத்தால் மூகாரி பாடாதே. நன்றி

    //

    உங்களின் கருத்துக்கு நன்றி பித்தனின் வாக்கு


    என்ன சார் எந்த உலகத்தில நீங்க இருக்கிறீங்க

    நான் பட்ட வலிகள் , நான் பட்ட உள்க்காயங்கள் எல்லாம் இலகுவில் மாறாது .

    ஒருவேளை நாங்களும்+நீங்களும் ஒன்றாக ஈழத்தில் பிறந்து எல்லாம் அனுபவித்திருந்தால் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது என நான் எண்ணுகிறேன் .

    படவனுக்குத்தான் நோவு தெரியும்.

    "நான் நெருப்பாக இருக்கும்போது எரிந்துகொண்டுதான் இருப்பேன் என்பதைச் சொல்ல விமர்சகன் எதற்கு" என்ற பௌசர் கூற்றுத்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  16. //
    புலவன் புலிகேசி கூறியது...
    //முகமிழந்து வாழும்

    மனிதரிடையே

    என்னை நான் தொலைத்தபடி

    மீண்டும் மீண்டும் தேடுகிறேன் //

    அருமை தியா...ஆனால் கொடுமையான விசயம்...

    November 25, 2009 9:37 அம


    //

    புலவன் புலிகேசி உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. பூங்கோதை கூறியது...
    தியா, உணர்வுகளோடு கூடிய வரிகள் அருமை...
    உங்கள் உணர்வுகளின் வடிகால் தான் எழுத்து... தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பொறியுங்கள்... ஆனால் ஒரு சின்ன மாற்றம்... எப்போதும் சோகத்தின் முடிவில் நீங்கள் ஒரு சவாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை உடைய விடாது. துன்பம் எல்லோருக்கும் பொதுவானது... அதை எதிர் கொள்ளுவதில் தான் நமது வாழ்க்கை தங்கியுள்ளது.

    November 25, 2009 11:26 அம


    //



    நன்றி பூங்கோதை உங்களுக்கும் பித்தனின் வாக்குக்கு கூறிய அதேபதிலைத்தான் சொல்லவேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  18. D.R.Ashok கூறியது...
    //என்னை நான் தொலைத்தபடி
    மீண்டும் மீண்டும் தேடுகிறேன் //
    உங்களை தொலைத்தபிறகு எப்படிங்க தேடுவிங்க :))))
    நல்லாயிருக்கு தியா

    November 25, 2009 11:35 அம


    //

    நன்றி D.R.Ashok உங்களின் பதிலுக்கு
    ஒருதடவை ஈழம் போய்ப் பாருங்கள் தன்னைத்தான் தொலைத்தபின் எப்படித் தேடுவது எனத் தெரியும்

    பதிலளிநீக்கு
  19. //
    S.A. நவாஸுதீன் கூறியது...
    தொலைத்து
    தேடி
    தேடியதை தொலைத்து
    தொலைத்தலில் தேடி
    தொலைந்துகொண்டிருக்கின்றோம்!

    இப்படித்தானே வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கின்றோம்

    November 25, 2009 12:20 பம்


    //

    S.A. நவாஸுதீன் உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. //

    ஸ்ரீராம். கூறியது...
    எளிமை...அருமை...

    November 25, 2009 12:48 PM

    //

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  21. சமுதாயத்தின் முதுகில் சாட்டை அடி!

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. // என்ன சார் எந்த உலகத்தில நீங்க இருக்கிறீங்க

    நான் பட்ட வலிகள் , நான் பட்ட உள்க்காயங்கள் எல்லாம் இலகுவில் மாறாது .

    ஒருவேளை நாங்களும்+நீங்களும் ஒன்றாக ஈழத்தில் பிறந்து எல்லாம் அனுபவித்திருந்தால் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது என நான் எண்ணுகிறேன் .

    படவனுக்குத்தான் நோவு தெரியும். //

    நண்பரே எந்த உலகத்தில் இருந்தாலும் வலிகளும், காயங்களும் ஒன்றுதான். பூலகத்தில் பிறந்த அனைவரும் துக்கம், சோகம், மரணம் ஆகியவற்றை அனுபவித்துதான் ஆக வேண்டும்.
    ஈழத்தில் மட்டும் அல்ல சொந்த வீட்டில் கூட சில சமயம் அனுபவிக்க நேரும், களங்கள் வேறு ஆக இருக்கலாம், ஆனால் காயங்கள் ஒன்றுதான். வலிகளும் வேதனைகளும் ஒன்றுதான். அது மனதின் தன்மையைய் ஒட்டியது.

    நாம் நம் வலிகளைக் கூறுவதன் மூலம், நம் வேதனையைத் துடைத்திடலாம், ஆனால் நேற்று நடந்த சம்பவத்தை மாற்றி எழுத முடியாது அல்லவா. நாம் நாளைய கனவுகளை விதைப்பதன் மூலம் ஒரு சமுதாயத்தை அமைக்கலாம் அல்லவா.
    சிந்தியுங்கள், அன்னியனிடம் அடிமைப் பட்டு இருக்கும்போது, பாரதி ஆடுவேமே படுவேமே என்று சுதந்திர பள்ளுப் பாடினான், பின்னாள் ஒரு தலைமுறை அதைப் சுதந்திரமாகப் பாடியது.
    கோழையாக பிரபாகன் கவிதை எழுதவில்லை வீரனாக சப்தம் இட்டான், நாற்பது ஆண்டு கால போராடினான், வெற்றிச் சரித்திர நாயகன் ஆனான். நாம் வீர சரித்திரத்தையும் வரலாற்றையும் உருவாக்குவேம்.
    கனத்த குண்டு மழைக்கிடையில் தன் குழந்தைகளைக் காத்த தாய் (கலகலப் பிரியா அம்மாவை போல) உக்காந்து மூகாரிக் கவிதை பாடவில்லை. உடல் முழுதும் குண்டு தாங்கிப் போராடியவள் முகாரிக் கவிதைக்காக போராடவில்லை. உரிமைக்காக போராடினாள்.
    அது போல உரிமைக்காக கவி பாடுங்கள், அதை நான் வரவேற்க்கின்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்